ஆன்லைன் மூலம் இன்வாய்ஸ் ( Invoice ) பற்றுச்சீட்டு எந்த நாட்டுக்கும் எளிதாக அனுப்பலாம்.

ஜூன் 15, 2011 at 8:49 முப 6 பின்னூட்டங்கள்

ஆன்லைன் மூலம் பற்றுச்சீட்டு  என்று சொல்லக்கூடிய இன்வாய்ஸ் நாம் தொடர்பு கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு எளிதாக சில நிமிடங்களில் எந்த முன் அனுபவமும் இல்லாமல் அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஒரு நிறுவனத்தில் இருந்து பொருட்கள் வாங்கியதற்கான பில் ரசீது கடிதம் மூலமும் இமெயில் மூலமும் அனுப்பி வந்த நிலை மாறி தற்போது ஆன்லைன் மூலம்  உடனுக்கூடன் சில நொடிகளில் பற்றுச்சீட்டு ( Invoice ) அனுப்ப நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

படம் 2

இணையதள முகவரி : www.tradeshift.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி உங்கள் இமெயில் முகவரி,  நிறுவனத்தின் பெயர் மற்றும் எந்த நாடு என்பதை  கொடுத்து Signup என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழைய வேண்டும், அடுத்து நமக்கு வந்திருக்கும் இமெயிலை சொடுக்கி நம் கணக்கை உறுதிப்படுத்த வேண்டும் அவ்வளவு தான். இனி நாம் எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு இன்வாய்ஸ் அனுப்ப வேண்டுமோ  அந்த நிறுவனத்தின் பெயரை தட்டச்சு செய்ய வேண்டும்.ஏற்கனவே Trade Shift -ல் இணைந்து இருக்கும் நிறுவனத்தின் பெயர்
நாம் தட்டச்சு செய்ய தொடங்கியதுமே வர ஆரம்பிக்கும், இல்லை என்றாலும் நாம்  இன்வாய்ஸ் தேதி மற்றும் பொருட்கள் எல்லாத்தகவல்களும் கொடுத்து Sent என்ற பொத்தானை சொடுக்கினால் அனுப்பியதற்கான ரசீதும் உங்களுக்கு ஒரு Copy-ம் செய்து இமெயில் மூலம் அனுப்பபட்டுவிடும், சில நேரங்களில் நிறுவனங்களுக்கு இன்வாய்ஸ் எப்படி அனுப்புவது என்று தெரியாமல்  இருக்கும் அனைவருக்கும் இந்தத்தளம். பயனுள்ளதாக இருக்கும், வெளிநாடுகளில் இருக்கும் பல இலட்சம் நிறுவனங்கள்
இத்தளத்தில் இணைந்துள்ளன, இனியும் உங்கள் இன்வாய்ஸ் கிடைக்கவில்லை என்று எந்த நிறுவனமும் சொல்ல முடியாது,   நம்முடைய நேரமும் மிச்சப்படும், கூடவே பல வருடங்களாக நாம் செய்த இன்வாய்ஸ் மொத்தமாக இணையத்தின் மூலம் எங்கு இருந்து கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

வங்கி கணக்கு முதல் அனைத்துவிதமான கணக்கிற்கும் நமக்கு உதவி செய்ய ஆன்லைன் கணக்கு பிள்ளை.

கூகுள் பஸ் தகவல்களை இனி எளிதாக தேடலாம் – கூகுள் கணக்கு தேவையில்லை

அனுபவத்தில் இருந்து நம் வாழ்க்கைக்கு உதவும் 7500 பயனுள்ள உதவிகள்.

கூகுள் உதவியுடன் எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்

 
வின்மணி சிந்தனை
அடுத்தவரை ஒரு போதும் குறை கூறாத குணத்தை நம்மிடம்
வளர்த்து கொண்டாலே போதும் மன அமைதி கிடைக்கும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பாரதரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் யார் ?
2.தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் பெரிய மாவட்டம் எது ?
3.தமிழ்கத்தில் கடற்கரையை பெற்றுள்ள மாவட்டங்கள் எத்தனை?
4.சேலம் இரயில்வே கோட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
5.இராமேஸ்வரத்தையும் இராமநாதபுரத்தையும் இணைக்கும்
  பாலம் எது ?
6.குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் நகரம் எது ?
7.ஞானபீட விருது பெற்ற இரண்டாவது எழுத்தாளர் யார் ?
8.மூன்றடைப்பு பறவைகள் சரணாலயம் எங்குள்ளது ?
9.திராவிர முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
10.அகிலன் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல் எது ?
பதில்கள்:
1.எம்.எஸ்.சுப்புலெட்சுமி, 2.கோயம்புத்தூர், 3.13, 4. 2007,
5.பாம்பன் பாலம், 6.சிவகாசி,7.ஜெயகாந்தன், 8.திருநெல்வேலி,
9.1949,10.சித்திரப்பாவை.
 
இன்று ஜூன் 15

பெயர் : உமர் தம்பி , பிறந்த தேதி : ஜூன் 15, 1953
தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை
வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார்.இவர்
கணினியிலும் இணையத்திலும் தமிழை
பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல
செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும்
ஆக்கியளித்துள்ளார். தமிழ் இணையம் இருக்கும் வரை
உங்கள் பெயர் நிலைத்து இருக்கும் நன்றி.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம். வெளிநாட்டு வேலைக்கு செல்லும் நபர்கள் உரிய நிறுவனத்தை சோதிக்க உதவும் மத்திய அரசின் பயனுள்ள தளம்.

6 பின்னூட்டங்கள் Add your own

 • 1. kottairaj  |  10:05 முப இல் ஜூன் 15, 2011

  தமிழ்கத்தில் கடற்கரையை பெற்றுள்ள மாவட்டங்கள் எத்தனை?
  இந்த கேள்விக்கு பதில் என்று கொடுக்கப்பட்டு இருக்கிறது.
  இது தவரான விடை . தமிழ் நாட்டில் உள்ள மொத்தம் மாவட்டங்கள் தான் . ஆனால் அணைத்து மாவட்டங்களும் கடற்கரையை பெற்று இருக்கவில்லை. இதற்கு சரியான விடை வேண்டும்.

  மறுமொழி
  • 2. winmani  |  10:55 முப இல் ஜூன் 15, 2011

   @ kottairaj
   13 மாவட்டங்கள் , திருத்தியாகிவிட்டது ,
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 3. mahendran  |  11:03 முப இல் ஜூன் 15, 2011

  q uestion no 3 is wrong. tamilnadu total dist 32. coastal dist 13

  மறுமொழி
  • 4. winmani  |  2:45 பிப இல் ஜூன் 15, 2011

   @ mahendran
   ஏற்கனவே திருத்தியாச்சு ,
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 5. MSK  |  5:51 பிப இல் ஜூன் 15, 2011

  Try this site also for generating and sending Invoices..

  https://invoice.zoho.com

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,723 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2011
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: