மனித உடலின் தோலில் ஏற்படும் அத்தனை பிரச்சினைகளைக்கும் படங்களுடன் தீர்வு சொல்லும் தளம்.

ஜூன் 19, 2011 at 1:59 பிப 11 பின்னூட்டங்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை , ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு படங்களுடன் தெளிவான விளக்கம் அளிக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பூமியில் ஆத்மா வசிக்க இறைவன் கொடுத்த அழகான வாடகை வீடான இந்த உடலில் தோலில் ஏற்படும் பல விதமான பிரச்சினைகள் பற்றி சரியாகத் தெரியாமல் நாளும் பெருமளவு பணத்தை வீண் செய்து கொண்டிருக்கிறோம், இனி நம் உடலின் தோலில் (Skin) ஏற்படும் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் படத்துடன் தெளிவான விளக்கம் கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.skinsight.com/skinConditionFinder.htm

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் உடல் தோலில் ஏற்படும் பலவிதமான வித்தியாசமான பிரச்சினைகள் அனைத்தையும் இத்தளத்தில் இருந்து விளக்கமாக தெரிந்து கொள்ளலாம். படம் 1-ல் காட்டியபடி Step 1- ல் Age and Gender என்பதில் குழந்தையா அல்லது பெரியவர்களா என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் அடுத்து  Select Body Location என்பதில் உடலின் எந்த பாகம் பாதிக்கப்பட்டு  இருக்கிறதோ அதைச் சொடுக்கி படம் 3-ல் காட்டியபடி Go என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த உடல் பாகத்தின் தோலில் ஏற்படும் பிரச்சினைகள் படங்களுடன் தெளிவாக நமக்கு காட்டப்படும். ஒவ்வொன்றையும் சொடுக்கி அந்த பிரச்சினைகள் மேலும் அறிந்து கொள்ளலாம், தோலில் பிரச்சினை உள்ளவர்கள் முதல் தோலில் நோய் வராமால் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

 
வின்மணி சிந்தனை
வரும் முன் நோய் வராமல் இருக்க விரும்புபவர்கள் முதலில்
உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாட்டில் மத்திய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம்
  உள்ள இடம் எது ?
2.மதுரையை ஆண்ட முதல் பெண் அரசி யார் ?
3.குந்தா நீர்மின் சக்தி திட்டம் உள்ள இடம் எது ? 
4.சோழ வம்சத்தின் கடைசி மன்னர் யார் ?
5.தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி ?
6.பாம்பன் பாலம் கட்டப்பட்ட ஆண்டு ?
7.கல்லனையை கட்டிய அரசர் யார் ?
8.தமிழகத்தின் நீளமான ஆறு எது ?
9.பெட்ரோலீயம் கிடைக்கும் டெல்டா பகுதி ?
10.காவேரி நதி நீர் உடன்பாடு நடந்த ஆண்டு  ?
பதில்கள்:
1.சென்னை, 2. ராணி மங்கம்மாள், 3.நீலகிரி,  4.மூன்றாம்
ராஜேந்திரன், 5.திலகவதி,6.1901 , 7.கரிகாற் சோழன்,
8.காவேரி, 9.காவேரி டெல்டா,10.1892.
 
இன்று ஜூன் 19

பெயர் : பிலைய்சு பாஸ்கல் ,
பிறந்த தேதி : ஜூன் 19, 1623
ஓரு பிரெஞ்சு கணிதவியலாளர்,இயற்பியலாளர்
மற்றும் சமய மெய்யியலாளர்.கணிப்பான்களின்
(calculators) உருவாக்கத்திலும் பாய்மவியல்
தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்க
-தாகும்.இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும்
முகமாக அழுத்தத்தின் SI அலகும், கணினி மொழி
ஒன்றும் பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன் மூலம் PDF கோப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் படமாக (JPG ) மாற்றி சேமிக்கலாம். வானத்து மேகத்தில் உங்கள் கைவண்ணத்தை காட்ட ஒரு புதுமையான முறை.

11 பின்னூட்டங்கள் Add your own

  • 1. பூபால அருண் குமரன் . ரா  |  3:56 பிப இல் ஜூன் 19, 2011

    நிச்சயம் அருமையான தளம் தான்.

    நான் பதிவுகளை Google Readerல் வாசிக்கும் பழக்கம் கொண்டவன். இது நாள் வரை TamilTechBlog என்ற Tagல் இருந்த உங்கள் தளத்தை SpecialBlog என்ற tagகுக்கு மாற்றி விட்டேன்.

    பல தளங்களை அறிமுகப்படுத்தும் உங்கள் தளம் நிச்சயம் ஒரு Special Blog தான்…

    நன்றி…

    மறுமொழி
    • 2. winmani  |  4:01 பிப இல் ஜூன் 19, 2011

      @ பூபால அருண் குமரன் . ரா
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. sempakam  |  6:17 பிப இல் ஜூன் 19, 2011

    mukkiyamaana pathivu…..
    nallaayirukkunka……….
    vaalththukkal………

    மறுமொழி
  • 5. Sridhar Krishna Moorthy  |  9:28 பிப இல் ஜூன் 19, 2011

    very useful and informative website. The contents are very easy to understand for common man.

    Thanks for sharing

    மறுமொழி
    • 6. winmani  |  11:13 பிப இல் ஜூன் 19, 2011

      @ Sridhar Krishna Moorthy
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 7. jawfeer  |  12:30 பிப இல் ஜூன் 21, 2011

    பல தளங்களை அறிமுகப்படுத்தும் உங்கள் தளம் நிச்சயம் ஒரு Special Blog தான் -Irakkamam

    மறுமொழி
  • 9. balan  |  5:57 பிப இல் ஓகஸ்ட் 2, 2011

    ungal thalam enaku group 2 answer pakka uthaviyai irunthathu matumala sela nala thakavalgalum kidaithathu

    மறுமொழி
  • 11. s.i.muthu  |  1:40 பிப இல் திசெம்பர் 30, 2011

    miga payan ullatha erukirathu. valthuga; s.i.muthu

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2011
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...