கூகுள் ஜீடாக்- சாட்டில் Autoreply செய்துவைக்க புதுமையான வழி

ஏப்ரல் 30, 2010 at 5:27 பிப 8 பின்னூட்டங்கள்

கூகுள் ஜீடாக்-ல் நண்பருடன் சாட் செய்து கொண்டிருப்போம் சில
நேரங்களில் நாம் வெளியே சென்றதும் நண்பர் ஏதாவது தகவல்
கொடுத்தால் Auto Reply செய்துவைத்தால் அவருக்கு உடனடியாக
தகவல் கொடுக்கப்பட்டுவிடும் எப்படி செய்யலாம் என்பதைப்
பற்றித்தான் இந்த  பதிவு.

படம் 1

ஜீடாக்-ல் ஸ்டேட்டஸ் மெசேஸ் கொடுத்து வைக்கலாம் சில
நேரங்களில் நாம் பிஸியாக இருப்பதாக வைத்திருப்போம் அல்லது
பாட்டு கேட்டுகொண்டிருக்கிறோம் என்று பல Status மேசேஸ்
கொடுத்து வைத்திருப்போம் இனி அதையும் தாண்டி நாம் ஜீடாக்
ஆன் செய்துவிட்டு வெளியே சென்றாலும் நமக்கு ஜீடாக்-ல் யாராவது
தொடர்பு கொண்டால் உடனடியாக அவருக்கு என்ன பதில் கொடுக்க
வேண்டும் என்பதை முதலிலே Autoreply கொடுத்து வைக்கலாம்
இதற்க்காக ஒரு சிறப்பு மென்பொருள் உள்ளது இதை இந்த முகவரியில்
இருந்து தரவிரக்கிக்கொள்ளலாம்.

இணையதள முகவரி : http://gtalkautoreply.codeplex.com

இந்த மென்பொருளை தரவிரக்கி இன்ஸ்டால் செய்து Run செய்ததும்
படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும்  இதில் நம் ஜீமெயில்
நுழைவுச்சொல்லையும் கடவுச்சொல்லையும் கொடுத்து அடுத்ததாக
Message என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்க்குள் நாம் என்ன
Autoreply செய்தி கொடுக்கவேண்டுமோ அதை கொடுத்தபின்
Save and Enable Autoreply  என்ற பொத்தானை அழுத்தி சேமித்து
விட்டு வெளியே வரலாம் இனி உங்களை ஜீடாக்-ல் யாராவது தொடர்பு
கொண்டால் உடனடியாக அவருக்கும் நாம் கொடுத்து வைத்திருக்கும்
Autoreply சென்றுவிடும்.கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
ஆபத்து காலத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல்
உதவி செய்யும் நபருக்கு பெயர் தான் “ நண்பன் “
நாம் சென்ற பின் நம்மை பற்றி புறங்ககூறுபவன் உண்மையான
நண்பன் இல்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும் ?
2.நதிகள் இல்லாத நாடு எது ?
3.சாணத்திலிருந்து கிடைக்கும் வாயு என்ன ?
4.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
5.காசநோய் எந்த உறுப்பை பாதிக்கும் ?
6.ஈரானின் பழைய பெயர் என்ன ?
7.யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும் ?
8.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ?
9.இந்தியாவின் மிகச்சிறிய வாக்குச்சாவடி எந்த மாநிலத்தில்
  உள்ளது ?     
10.லில்லி பூக்களை உடைய நாடு எது ?   
பதில்கள்:
1.செவ்வாய் கிரகம்,2.சவூதி அரேபியா, 3.மீத்தேன்,
4.முகாரி ,5.நுரையீரல்,6.பாரசீகம்,7. 200 லிட்டர்,
8.55 மொழிகளில்,9.அருணாசலப்பிரதேசம், 10.கனடா
இன்று ஏப்ரல் 30 
பெயர் : தாதாசாஹெப் பால்கே,
பிறந்த தேதி : ஏப்ரல் 30, 1870
தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும்
துண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind
Phalke)இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக
கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில்
பிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை
உருவாக்கினார்.பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே
இயக்கவும் செய்தார்.அவருடைய நினைவாக தாதாசாஹெப்
பால்கே விருது நிறுவப்பட்டது.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள அனைத்து கணினியின் வேகத்தையும் அதிகப்படுத்தலாம்.

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. இளங்குமரன்  |  2:27 முப இல் மே 1, 2010

    //4.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
    5.காசநோய் எந்த உறுப்பை பாதிக்கும் ?//

    //4. நுரையீரல்,
    5.முகாரி,//
    ஐயா வினாவும் விடையும் இடம் மாறிக் கிடக்கின்றன.

    மறுமொழி
    • 2. winmani  |  5:53 பிப இல் மே 1, 2010

      @ இளங்குமரன்
      மிக்க நன்றி , திருத்திவிட்டோம்.

      மறுமொழி
  • 3. siva  |  2:29 முப இல் மே 1, 2010

    Hi,

    gud info…thnx..

    I would like to delete one of the members(invited) from chat list in gmail chat list.
    I tried all( deleted from contacts,hide/ block the sender from ‘more’option )but not successful..

    can u help me in this regard?

    மறுமொழி
    • 4. winmani  |  5:51 பிப இல் மே 1, 2010

      @siva
      கண்டிப்பாக விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
      நன்றி

      மறுமொழி
  • 5. mohamed khaiyum  |  7:13 முப இல் மே 1, 2010

    வின்மனி TNPSC Question யில் கேள்வி 4 க்கு விடை 5 கேள்வி 5க்கு விடை 4 சரியானவை.இங்கே உள்ள பதிவில் தவறாக உள்ளது. நன்றி.

    மறுமொழி
    • 6. winmani  |  2:59 பிப இல் மே 1, 2010

      @mohamed khaiyum
      நன்றி , திருத்தியாச்சு.

      மறுமொழி
  • 7. colvin  |  3:50 முப இல் மே 2, 2010

    என்னைப் போன்றவர்களுக்கு இக்குறிப்பு மிக பயன்தரும். மி்க்க நன்றி

    அன்புடன்
    கொல்வின்
    இலங்கை

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2010
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...