Archive for ஏப்ரல் 9, 2010
ஒரே வரைபலகையில் பல நாடுகளில் உள்ள அனைவரும் நேரடியாக படம் வரையலாம்
உலகநாடுகளில் உள்ள நம் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும்
இணைந்து ஒரே பலகையில் படம் வரையலாம் கோடு கிறுக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்த பதிவு.
நேரடியாக பேசலாம் , குறுஞ்செய்தி அனுப்பலாம் , வீடியோ மூலம்
முகம் பார்த்து பேசலாம் இதையெல்லாம் தாண்டி ஆன்லைன் மூலம்
படம் வரையலாம் நாம் ஒரு கோடு வரைந்தால் அமெரிக்காவில்
இருக்கும் நண்பர் அந்த கோட்டை இணைக்க இன்னொரு கோடு
வரையலாம் என்று பல புது வித சேவைகளுடன் வந்துள்ளது.
வழக்கமாக நாம் பெயிண்ட் பிரஸ் -ல் என்னவெல்லாம் பயன்படுத்த
முடியுமோ அதை எல்லாம் நாம் இதில் பயன்படுத்தலாம் எல்லைவிட்டு
எல்லைதாண்டி ஒரு வரைபலகையை அனைவரும் நேரடியாக பகிர்ந்து
கொள்ளலாம். இணையத்தில் ஒரு ஒவிய ஆசிரியர் தன் மாணவர்கள்
அனைவருக்கும் நேரடியாக ஒவியம் வரைய சொல்லிக்கொடுக்கலாம்
அவர்களை வரையச்சொல்லியும் சரிபார்க்கலாம். புரோகிராமர்க்கு
தேவையான பிளாக் டையகிராம் என அனைத்தையும் நாம்
ஒவ்வொரு வடிவமாக அனைவருக்கும் தெளிவாக புரிய வைக்கலாம்.
இதற்காக மிகவேகமான இண்டெர்நெட் இணைப்பும் தேவையில்லை.
எளிமையாகத்தான் இருக்கிறது. இப்படி இந்த வரைபலகை மூலம்
வரையும் படங்களை சேமித்தும் கொள்ளலாம். பல பக்கங்கள்
இருப்பதால் ஒரு நண்பர் முதல் பக்கத்தில் வரையும் போது அடுத்த
நண்பர் இரண்டாம் பக்கத்திலும் படம் வரையலாம். கண்டிப்பாக இந்த
இணையதளம் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். நாம்
உருவாக்கும் செசனுக்கு பெயர் வைத்து நம் நண்பரையும் உடன்
வரைபலகையில் படம் வரைய அழைக்கலாம்.
இணையதள முகவரி : http://board800.com
வின்மணி இன்றைய சிந்தனை கஷ்டப்பட்டு ஏழை கூலி வேலை செய்து வரிகட்டும் பணத்தை தவறான வழியில் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதி தன் சகோதரரின் இரத்தத்தை குடிக்கும் ஒரு கேவலமான மனிதன்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1. இந்தியாவின் ரூபாய் நோட்டுகள் எங்கு அச்சடிக்கப்படுகின்றன ? 2. உலகன் முதல் சோதனை குழாய் குழந்தை பிறந்த நாடு எது ? 3. ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ? 4. மக்கள் தொகையில் ஆண்களை விட பெண் அதிகமாக உள்ள மாநிலம் எது ? 5. 50 அடிக்கு மேல் வளரும் புல் இனத்தை சேந்த தாவரம் எது ? 6. ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கும் பெயர் என்ன ? 7. சீன நாட்டின் தேசிய விளையாட்டு எது ? 8. இந்திய ரிசர்வ் வங்கித் தொடங்கப்பட்ட ஆண்டு ? 9. பூமியிலிருந்து சூரியனை அடக்கப்பயன்படுத்தும் கருவி எது? 10.இந்தியாவ்வின் முதல பல்கலைக்கல் கழகம் எங்கு தோற்றுவிக்கப்பட்டது ? பதில்கள் 1. நாசிக், 2 இங்கிலாந்து,3.பாலைவனத்தில்,4.கேரளா, 5.மூங்கில் 6.WORM , 7.பிங்பாங் ,8.1935, 9.செக்ஸ்டண்ட்,10.கொல்கத்தா
இன்று ஏப்ரல் 9பெயர் : ஜெய் சந்திரசேகர் , பிறந்த தேதி : ஏப்ரல் 9, 1968 ஜெய் சந்திரசேகர் "ப்ரோக்கென் லிசர்ட்" நகைச்சுவை குழுவில் ஒரு அமெரிக்கா நடிகரும் இயக்குனரும் ஆவார். தமிழ் தாய், தந்தையருக்குப் பிறந்த சந்திரசேகரின் மிக புகழ்பெற்ற திரைப்படங்கள் சூப்பர் ட்ரூப்பர்ஸ், த டியுக்ஸ் ஆஃப் ஹாசர்ட் ஆகும்.