Archive for ஏப்ரல் 29, 2010

லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி

லேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி
கொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது
இல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் லேப்டாப்-ன்
மானிட்டரை மட்டும் எளிதாக மூடலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

படம் 1

கனடாவில் வாழும் குமாரசாமி என்ற நண்பர் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு இருந்தார்
சில பிரேத்யேகமான லேப்டாப்களி-ல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதி இருக்கிறது ஆனால் பெரும்பாலான லேப்டாப்-களில் கணினியை
ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் மூடும் வசதி இல்லை இதற்க்காக
கணினி-யை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதியைப் பற்றித்தான் பார்க்க போகிறோம். இதற்க்காக பிரேத்யேகமாக
ஒரு மென்பொருள் வந்துள்ளது. ”மான்பவர்” -அதாவது மானிட்டர் பவர்
என்பதன் சுருக்கமாகத்தான் மான்பவர் என்று வந்துள்ளது. இந்த
மென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவும்.

முகவரி :  http://www.caffinc.com/files/monpwr/monpwr.exe

இதை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய தேவையில்லை உடனடியாக
Double Click  செய்யவும் படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும்
அதில் “Turn off ” என்ற பொத்தானை அழுத்தி நம் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்யலாம். மறுபடியும் மானிட்டர் ஆன் செய்வதற்க்கு
“Space ” அல்லது எண்டர் (Enter) கீயை அழுத்தி மானிட்டருக்கு மீண்டும்
பவர் கொடுக்கலாம். கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
நல்ல கணினி கொள்ளையருக்கு யாருக்கும்  தீங்கு செய்ய
மனம் வராது அரை குறை உள்ளவன் கண்டிப்பாக அடுத்தவனுக்கு
கெடுதல் செய்ய நினைத்து தான் ஏமாந்து போவான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரத்த ஓட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
2.மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது ?
3.நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன ?
4.எறும்பின் சராசரி ஆயுள் என்ன ?   
5.நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்ளது ?  
6.இந்தியாவின் அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார் ?
7.உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் சென்டர் எங்குள்ளது ?
8.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
9.அம்ரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் ?
10.அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது ?
பதில்கள்:
1.லூயிஸ்,2.சுறா மீன், 3.புளுரா, 4. 15 ஆண்டுகள்,
5.88.9%,6.குடியரசுத்தலைவர்,7.அமெரிக்கா,8.6 கி.மீ,
9. ஆபிரகாம் லிங்கன், 10.வைட்டமின் ஏ
இன்று ஏப்ரல் 29 
பெயர் : ரவி வர்மா,
பிறந்த தேதி : ஏப்ரல் 29, 1848
நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில்
வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்பாணி
ஓவியக்கலைக்குள் புகுத்தியவர்.உலகப்புகழ் 
பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.
உங்களால் பாரததேசத்திற்க்கு பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

ஏப்ரல் 29, 2010 at 6:05 பிப 11 பின்னூட்டங்கள்

இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி

இண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில்
சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட்
வேகத்தை அதிகரிக்கலாம்.

படம் 1

படம் 2

படம் 3

படம் 4

இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளது வேகம் இல்லை என்று கூறும்
அனைவருக்காகவும் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கும் எளிய
முறையைப் பற்றி இனி பார்க்கலாம்.  முதலில் கொடுக்கப்பட்டிருக்கும்
எளிய முறைகளைகளை இரண்டு அல்லது மூன்று முறை படித்துப்
பார்த்து விட்டு பின்பு செய்யவும். முதலில் படம் 1-ல் காட்டியபடி Start
பொத்தானை அழுத்தி Run  என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்து
படம் 2-ல் காட்டியபடி அதில் gpedit.msc என்று கொடுத்து ok பொத்தானை
அழுத்தவும். அடுத்து திரையில் படம் 3-ல் காட்டியபடி தோன்றும் இதில்
Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து
Network என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து QoS Packet Scheduler
என்பதை தேர்ந்தெடுத்ததும் வலது பக்கத்தில் தெரிவதில்
Limit Reservable bandwidth என்பதை தேர்ந்தெடுத்து Double click
செய்யவும் படம் 4-ல் இருப்பது போல் தோன்றும் அதில் நாம் Enable
என்பதை தேர்வு செய்யவும் கூடவே அதில் இருக்கும் Bandwidth என்பதில்
22 என்பதை கொடுத்து apply மற்றும் ok பொத்தானை அழுத்தவும்
அடுத்து கணினியை ஒருமுறை Restart  செய்யவும். இப்போது உங்கள்
கணினியில் இண்டெர்நெட் இணைப்பின் வேகம் இரண்டு மடங்காக
அதிகரிக்கப்பட்டிருக்கும்.

வின்மணி சிந்தனை
அண்ணதானம் சாப்பிட வந்துவிட்டு சாப்பாட்டில் அது சரியில்லை
இது சரியில்லை என்று கூறும் நபர்களின் குடும்பம் ஒற்றுமை
இல்லாமல் சென்றுவிடும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த் ஆண்டு எது ?
2.பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும்
 நாடு எது ?
3.வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
4.நின்றபடியே தூங்கும் பிராணி எது ?
5.இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
6.வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?
7.விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்க்கும் மாநிலம் எது ?
8.உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ?
9.சூரியனின் வயது ?
10.பிரமிடுகளின் பிறப்பிடம் எது ?
பதில்கள்:
1.1964,2.  தாய்லாந்து, 3.ஈசல், 4. குதிரை,
5.அரிசி,6.ஆறுகள்,7. பஞ்சாப்,8.9 பிரிவுகள்,
9. 500 கோடி ஆண்டுகள், 10.எகிப்து
இன்று ஏப்ரல் 28
பெயர் : உ.வே.சாமிநாதையர்,
பிறந்த தேதி : ஏப்ரல் 28, 1942
பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத்
தேடி அச்சிட்டு பதிப்பித்தவர்.இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத்
தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர்
குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால்
தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும்
உலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

ஏப்ரல் 29, 2010 at 6:19 முப 67 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2010
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: