Archive for மார்ச், 2010
கூகுள்-ல் வார்த்தைக்கான பொருள் தேடுவதற்கு முன்பே தெரியும்
வார்த்தைக்கான பொருள் தேடும் முன்பே சொல்லி விடுகின்றனர்.
கூகுள் தினமும் புதிதாக தனது தேடலில் ஏதாவது ஒன்றை
அறிமுகப் படுத்தி தனது வாடிக்கையாளருக்கு தேடுபொறி என்றாலே
அது கூகுள் தான் என்று சொல்லும் அளவுக்கு பலவித புதுமைகளை
செய்து கொண்டிருப்பது நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது
அதையும் தாண்டி வார்த்தைக்கான பொருள் கூகுலில் தேடும்
முன்பே சொல்லிவிடும் அடுத்த அதிசயத்தையும் நிகழ்த்தியுள்ளனர்
இதைப்பற்றிய சிறப்பு பதிவு.

படம் 1

படம் 2
கூகுள் நேரடி தேடல் , நேற்று , கடந்த மாதம் ,கடந்த வருடம் என்று
கூகுள் பல விதங்களில் தேடும் முறைகளை அறிமுகப்படுத்தி
இருந்தாலும் அதையும் தாண்டி இப்போது கூகுளில் வார்த்தைக்கான
பொருள் தேடும் முன்பே சொல்லி விடுகின்றனர். எப்படி என்றால்
கூகுள் இணையதளத்திற்கு சென்று நாம் தேடும் கட்டத்திற்க்குள்
Define என்ற வார்த்தையை கொடுத்து சிறிது இடைவெளிவிட்டு
எந்த வார்த்தைக்கான பொருள் தேடவேண்டுமோ அந்த வார்த்தையை
கொடுக்கவும் search பொத்தானை அழுத்த வேண்டாம் உடனடியாக
தேடும் முன்பே வார்த்தைக்கான பொருளை கொடுத்துவிடுகின்றனர்.
உதாரணமாக நாம் Define Victory என்ற வார்த்தையை கொடுப்பதற்க்குள்
அதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது படம் 1 -ஐ பார்க்கவும்.
மாணவர்களுக்கும் மதிப்பு மிக்க ஆசிரியர்களுக்கும் தங்களது
பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தி கொடுக்கும்.
வின்மணி இன்றைய சிந்தனை ஒரு நாட்டின் கலாச்சாரத்தை சிதைப்பதன் மூலம் அந்த நாட்டின் பழமையான நுன்கலைகள் பலவற்றை அழித்துவிடுகின்றனர். உலகிலே சிறந்த கலாச்சாரத்தை உள்ளடக்கியது பாரததேசம் , சித்தர்களையும் தத்துவஞானிகளையும் உலகிற்கு தந்ததும் நம் பாரததேசம் தான்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP HTTP Functions headers_sent() Checks if / where the HTTP headers have been sent setcookie() Sends an HTTP cookie to a client setrawcookie() Sends an HTTP cookie without URL encoding the cookie value
இன்று மார்ச் 31பெயர் : ஐசக் நியூட்டன் , மறைந்த தேதி : மார்ச் 31, 1727 ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். ஈர்ப்பு விதி கண்டுபிடித்தவர். புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன் முதலில் விளக்கியவர்.1687 ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
ஆன்லைன் மூலம் ஆடியோ பாடலை MP3 ஆக மாற்றலாம்,பாடலின் தரத்தை கூட்டலாம்.
ஆடியோ பாடலை கணினியில் MP3 ஆக மாற்றி சேமித்துவைத்துக்
கொள்ள என்ன தான் பல மென்பொருள்கள் வந்தாலும் அனைத்தையும்
தாண்டி நாம் எங்கு சென்றாலும் ஆடியோ பாடலை MP3 ஆக மாற்ற
வேண்டிய மென்பொருளை எடுத்துச்செல்லவேண்டியதில்லை
உடனடியாக அதுவும் ஆன்லைன் மூலம் ஆடியோ பாடலை MP3, MP4
மற்றும் பல பார்மட்டுகளில் மாற்றலாம் இலவசமாக இதைப்பற்றித்
தான் இந்த பதிவு.

படம் 1

படம் 2
மொபைல் போனிலிருந்து ஐபாட் வரை அனைத்தும் ஒவ்வொரு
பார்மட்டில் சிறப்பாக இயங்கும். ஐபோனில் MP3 கேட்கலாம் என்றாலும்
WMV பார்மட்டுக்கு மாற்றி கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் இதே
போல் தான் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பார்மட் சிறப்பாக இருக்கும்.
இதற்காக நாம் செல்லும் இடம் எல்லாம் ஆடியோ மாற்றும்
மென்பொருளை எடுத்துச்செல்ல வேண்டாம் ஆன்லைன் மூலம் சில
நிமிடங்களில் நாம் விரும்பும் பார்மட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
இணையதள முகவரி : http://media.io
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Choose
என்ற பொத்தானை அழுத்தி மாற்ற வேண்டிய பாடலை தேர்ந்தெடுத்து
Upload என்ற பொத்தானை அழுத்தவும். இப்போது நாம் மாற்ற
வேண்டிய பாடல் படம் 2-ல் காட்டியவாறு தோன்றும் என்ன
பார்மட்டுக்கு நாம் மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும்
அடுத்து பாடலின் தரத்தை தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து
முடித்ததும் Convert என்ற பட்டனை அழுத்தி விரும்பிய பார்மட்டில்
மாற்றி நம் கணினியில் சேமித்துக்கொள்ளலாம்.
வின்மணி இன்றைய சிந்தனை மக்களுக்கு சேவை செய்யும் அரசு அதிகாரி கடமையுடன் அன்பும் சேர்த்து வேலை செய்தால் மக்களின் அன்பை மட்டுமல்ல கடவுளின் ஆசியையும் கோவிலுக்கு செல்லாமலே பெறலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Filters FILTER_VALIDATE_FLOAT Validate value as float. FILTER_VALIDATE_REGEXP Validate value against regexp, a Perl compatible regular expression. FILTER_VALIDATE_URL Validate value as URL, optionally with required components. FILTER_VALIDATE_EMAIL Validate value as e-mail.
இன்று மார்ச் 30பெயர் :ஆனந்த ரங்கம் , பிறந்த தேதி : மார்ச் 30,1709 முதல் தமிழ் நாட்குறிப்பு எழுதியவர்.தமிழ் இலக்கியத்தில் புதுப்பொழிவை தந்தவர். 24ஆண்டுகள் அவர் எழுதிய தமிழ் நாட்குறிப்புகள் அவர் மறைந்து 85ஆண்டுகள் கழித்து தான் நமக்கு கிடைத்தன. உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் எங்கள் நன்றி.
விக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியவும் தமிழ்நாடு அரசும்
இணைந்து நடத்தும் உலகத்தமிழ் இணையமாநாட்டுக்கான கட்டுரைப்
போட்டியில் தமிழர்கள் அனைவரும் பங்குபெற்று தமிழின் பெருமையை
உலகறியச்செய்யவேண்டும் என்பதற்கான சிறப்புப்பதிவு.
ஒன்பதாவது உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணையத்தமிழ்
செம்மொழி மாநாட்டையும் வரும் 2010-ஆம் ஆண்டு சூன் மாதம்
23-ம் திகதி முதல் சூன் 27-ம் திகதி வரை கோயம்புத்தூரில் நடத்த
தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து அதற்கான முழு ஈடுபாட்டுடன் ஆயத்தப்
பணிகளை செய்து வருகிறது.தமிழ்நாடு அரசு உலகத் தமிழ் இணையதள
மாநாட்டுக்காக அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் கட்டற்ற
களஞ்சியமான விக்கிப்பீடியாவுடன் இணைந்து வலைவாசல் கட்டுரைப்
போட்டியை நடத்துகிறது.இப்போட்டியில் கலை,அறிவியல்,பொறியியல்,
மருத்துவம்,விளையாட்டு, வேளாண்மை, சட்டம்,கல்வியியல்,
இயங்குனர் மருத்துவம் (பிசியோ தெரப்பி),சித்த மருத்துவம்,பல்
மருத்துவம்,செவிலியர், கால்நடை மருத்துவம்,பல்தொழில்நுட்பப்
பயிலகம் முதலியதுறைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு
கொள்ளலாம். ஒவ்வொரு துறையிலும் சிறந்த தகவல் பக்கங்களை
எழுதுவோருக்குப் மதிப்பு மிகுந்தபரிசுகள் வழங்கப்பட உள்ளன.
போட்டிக்கான விதிமுறைகள்:
1. தகவல் பக்கங்கள் (கட்டுரைகள்) ஆதாரங்களின் அடிப்படையில்
நடுநிலைமையுடன் அமையவேண்டும். இனம், சமயம், அரசியல்,
தனிநபர் குறை, வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பைத் தூண்டாதவாறு,
தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.
2. தகவல் பக்கங்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500
வரை அமைய வேண்டும். (இரண்டு A4 தாள் பக்க அளவு)
3. தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (Unicode) அமைய வேண்டும்.
4. தகவல் பக்கங்களை ஏப்ரல் 30, 2010க்குள் நிறைவு செய்து
http://tamilint2010.tn.gov.in இணையத் தளத்தின் வழியாக
அனுப்ப வேண்டும்.
5. தகவல் பக்கங்களின் உரிமை போட்டி அமைப்பாளர்களையே சாரும்.
6. மேலும் விபரங்களும், கூடுதல் விபரங்களுக்கான இணைப்புக்களும்
இந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன. தகவல் பக்கங்களை எழுதும் முன்
இங்கு தரப்பட்டுள்ள விபரங்களை வாசித்துப் புரிந்துகொள்வது முக்கியம்.
7. தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் உலகளாவிய தமிழ் விக்கிப்
பீடியாவில் சேர்க்கப்படும்.
8. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
மேலும் இதைப்பற்றிய கூடுதல் தகவல் தெரிந்துகொள்ள
வின்மணி இன்றைய சிந்தனை
தாய் நாட்டில் படித்து வெளிநாட்டில் பணத்துக்காக வேலைசெய்யும்
தாயை மறந்தவரைவிட விட, தாய் நாட்டிற்காக விவசாயம் செய்யும்
உழவர் மேன்மையானவர்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Directory Functions opendir() Opens a directory handle readdir() Returns an entry from a directory handle rewinddir() Resets a directory handle scandir() Lists files and directories inside a specified path
இன்று மார்ச் 292007 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் நாள் கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்
கடந்த சில மாதங்களாகவே யாகூவில் சத்தமில்லாமல் பலவித
மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன அந்த வகையில் எந்த
அலட்டலும் இல்லாமல் யாகூ “ இடத்தை தேடும் “ பிரம்மாண்ட
அப்ளிகேசன் ஒன்றை ஐபோனில் அறிமுகம் செய்துள்ளது. இதைப்
பற்றிய சிறப்பு பதிவு.
வந்த வேகத்தில் கூகுள் எப்படி வேலை செய்கிறது என்பதை
கண்டுபிடிக்கும் முன் யாகூவை ஒரே அடியாக தேடுதலில் இருந்து
இரண்டாவது இடத்திற்கு தள்ளியதோடு மட்டுமில்லாமல் கூகுள்
மேப் என்று அடுத்தபுரட்சியையும் செய்தது. என்னதான் கூகுள்
பல சேவைகளை வரிந்துகட்டி கொண்டு கொட்டினாலும் இன்னும்
பல பேர் யாகூதேடுதலைத்தான் பயன்படுத்துகின்றனர் காரணம்
இல்லாமலா நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ் யாகூவுடன் கூட்டனி
வைக்க ஆசைப்படுவார் இந்த சுழ்நிலையில் யாகூ தன் முதல்
வெற்றி ஆயுதத்தை களமிறக்கியுள்ளது அதுதான் யாகூவின்
”இடத்தை தேடல் “ ஐபோனுக்கான சிறப்பு அப்ளிகேசன்
மென்பொருள். இருக்கும் இடத்திலிருந்து தெரியாத இடத்தில்
உள்ள அலுவலகத்துக்கோ அல்லது உணவகத்துக்கோ செல்ல
வேண்டுமானல் விரல் நுனியில் கோடிட்டி கொடுத்தால்
போதும் அந்த உணவகத்தின் கிளை நாம் இருக்கும் இடத்தில்
ஏதாவது இருந்தாலும் உடனடியாக தேடி கொடுக்கிறது. செல்ல
வேண்டிய பாதைக்கு தெளிவான மேப் வசதியுடன் கொடுக்கிறது.
தற்போது அமெரிக்காவின் 32 பெரிய நகரங்களில் இந்த இடம்
தேடல் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதைத்தவிர
லண்டன், கனடா , பிரான்ஸ், மற்றும் பல நாடுகளிலும் இந்த
சேவையை வழங்கியுள்ளனர். இதே சேவை கூகுள்-ல் இருந்தாலும்
தேடும் இடம் துல்லியமாகவும் சரியாகவும் விரைவாகவும் கொடுக்கும்
என்ற வாக்குருதியில் களம் இறங்கியுள்ளது யாகூ, விரைவில்
இந்த சேவை இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களிலும்
”இடம் தேடல் “ தொடரும் என்கிறது. யாகூவின் இந்த புதிய
”இடம் தேடல் “ சேவை வெற்றிபெற வின்மணி மற்றும் நண்பர்களின்
சார்பில் வாழ்த்துக்கள்.இது எப்படி வேலை செய்கிறது என்பதைப்பற்றிய
ஒரு சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி இன்றைய சிந்தனை தன்னிடம் வேலைபார்க்கும் தொழிலாளருக்கு குறைவான ஊதியமும் புதிதாக வரும் அரைவேக்காட்டு தொழிலாளிக்கு அதிகசம்பளமும் கொடுத்தால் அந்த நிறுவனம் விரைவில் இல்லாமல் போகும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் AJAX - Browser support if (window.XMLHttpRequest) { // code for IE7+,Firefox,Chrome,Opera,Safari return new XMLHttpRequest(); } if (window.ActiveXObject) { // code for IE6, IE5 return new ActiveXObject("Microsoft.XMLHTTP"); }
இன்று மார்ச் 28பெயர் : வேதாத்திரி மகரிஷி , மறைந்த தேதி : மார்ச் 28, 2006 ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயப் பணி ஆற்றி வந்த உயர்ந்த தத்துவ ஞானி. “ வாழ்க வளமுடன் ” என்ற உயர்ந்த வார்த்தையை தன் சீடர்களுக்கு வழங்கியவர். உங்களைப்போல் ஞானிகள் இந்த பாரதத்தில் பிறப்பது எங்களுக்குத் தான் பெருமை.
எழுதும் எழுத்துக்கு இணையான படம் கொடுக்கும் விநோதமான இணையதளம்
நம் பெயரின் எழுத்துக்கு ஏற்ற எழுத்து உள்ள படத்தை பிளிக்கரில்
இருந்து சில நிமிடங்களில் தேடி எடுக்கலாம். பெயரின் எழுத்தை
வைத்து அதை எப்படி படமாக தேடி எடுக்கலாம் என்பதைப் பற்றித்
தான் இந்த பதிவு.
நம் பெயர்,நிறுவனத்தின் பெயர் அல்லது நமக்கு பிடித்தமான
பெயர்-க்கு தேவையான எழுத்து வரும் படத்தை சில நொடிகளில்
நமக்கு எளிதாக எடுத்துக்கொடுக்க ஒரு இணையதளம் உள்ளது
இனையதள முகவரி : http://picurio.us
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் எந்த எழுத்துக்கு இணையான
படம் வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து தேடவேண்டியது
தான் சில நிமிடங்களில் நாம் கொடுத்த் தகுந்த சரியான எழுத்து உள்ள
படத்தை தேர்ந்தெடுத்து நமக்கு கொடுக்கும். எந்த விளம்பரமும்
இல்லாமல் முகப்பு பக்கம் எளிதாக உள்ளது. இதில் என்ன விநோதம்
இருக்கிறது என்றால் ஒரே வார்த்தையை எத்தனை முறை கொடுத்து
தேடினாலும் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு படத்தை
தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. சிலருக்கு தங்கள் பெயரை எப்படி
எல்லாம் அழகுபடுத்தலாம் என்ற ஆசை இருக்கும் அப்படிப்பட்ட
நண்பர்களுக்கு இந்த தளம் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி இன்றைய சிந்தனை நல்ல நடத்தையும் நீதி தவறாத செயலும் ஒரு ஆன்மீகவாதிக்கு முக்கியமான ஒன்று. இதை மீறினால் ஆன்மீகவாதி செய்த ஒரு சில நல்லது கூட அனைவராலும் மறக்கப்படும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP libxml Functions libxml_clear_errors() Clear libxml error buffer libxml_get_errors() Retrieve array of errors libxml_get_last_error() Retrieve last error from libxml
இன்று மார்ச் 27பெயர் : விபுலாநந்தர் , பிறந்த தேதி : மார்ச் 27, 1892 கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல்,இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்த புலவர். தமிழ் மொழிக்கு நீங்கள் செய்த சேவைக்கு என்றும் நன்றி.
குழந்தைகளுக்கு கணித அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்
குழந்தைகளுக்கு கணிதஅறிவை வளர்க்க புத்தகம் மட்டும் அல்ல
சில விளையாட்டுகள் மூலமும் வேடிக்கையான முறையில்
கணித அறிவை வளர்க்கும் விதத்தில் ஒரு இணையதளம்
உள்ளது. இதைப்பற்றி தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://www.carrotsticks.com
கூட்டல் , கழித்தல் , வகுத்தல் , பெருக்கல் என அனைத்தும்
எளிதாக ஆரம்ப நிலையில் உள்ள குழந்தைகள் முதல் மாணவர்கள்
வரை அனைவருக்கும் பயன்படும் வகையிலும்,போட்டிக்குச் செல்லும்
மாணவரின் கணித வேகத்தை அதிகப்படுத்தவும் அனிமேசனுடன்
நம் கணித அறிவை வளர்த்துக்கொள்ளத்தான் இந்த் இணையதளம்
வந்துள்ளது. எளிதான கணக்கு வகை , கடினமான கணக்கு வகை
என்று இரண்டாக பிரித்துள்ளனர். இதில் நமக்கு எது வேண்டுமோ
அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சரியான பதில் அளித்தால்
உடனடியாக மதிப்பெண்ணும் வழங்குகின்றனர். பயனாளர் கணக்கு
உருவாக்க தேவையில்லை , புதிய பயனாளர் கணக்கு தங்கள்
பெயரில் உருவாக்கி நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை அடுத்தவரிடம்
காட்டலாம். பேஸ்புக்கிலும் உங்கள் மதிப்பெண்ணை பகிர்ந்து
கொள்ளலாம். ஏற்கனவே ஆயிரம் அறிவை வளர்க்கும்
விளையாட்டுக்கள் ஒரே இடத்தில் உள்ளன. மேலும் விபரங்கள்
தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.
https://winmani.wordpress.com/2010/03/10/thousnadgame/
வின்மணி இன்றைய சிந்தனை மக்களை ஏமாற்றி அநியாயமாக பொருள் சேர்த்தவனின் பொருளை அவன் தலைமுறை அனுபவிக்க முடியாது.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Error and Logging Functions debug_backtrace() Generates a backtrace debug_print_backtrace() Prints a backtrace error_get_last() Gets the last error occurred error_log() Sends an error to the server error-log, to a file or to a remote destination
இன்று மார்ச் 26பெயர் : பால் ஏர்டோசு , பிறந்த தேதி : மார்ச் 26, 1913 வளமிக்க விளைவுகளைத் தந்த விந்தையான தனிப்போக்கு கொண்டிருந்த ஒரு அங்கேரி நாட்டுக் கணிதவியலாளர். சேர்வியல், கோலவியல், எண் கோட்பாடு, செவ் பகுவியல், கணக் கோட்பாடு,நிகழ்தகவுக் கோட்பாடு முதலிய கணிதத்துறைகளில் ஐநூறுக்கும் மிகுதியான கணிதவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றி ஆயிரத்து ஐநூறுக்கும் கூடுதலான ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.
எல்லாவித சர்டிபிக்கேட்(சான்றிதழ்) இலவசமாக தரவிரக்கலாம்.
பள்ளி மாணவர்களுக்கு , விளையாட்டு வீரர்களுக்கு, அலுவலகத்தில்
பணிபுரிபவர்களுக்கு என அனைவருக்கும் அவரவரின் திறமைக்கேற்ப
(சர்டிபிக்கேட்) சான்றிதழ் சில நிமிடங்களில் தரவிரக்கி உருவாக்கலாம்
இதைப்பற்றி தான் இந்த பதிவு.
ஊக்குவிப்பு தான் எந்தத்துறையிலும் மக்கள் முன்னேற காரணமாக
இருக்கும் ஒரு மிகப்பெரிய பரிசு. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு
கூட மாதம் ஒரு முறை வைக்கும் தேர்வில் சிறந்த மாணவர் என்று
ஒருவரை தேர்ந்தெடுத்து (ரேங் அட்டையைத்தவிர) சிறப்பு சான்றிதழ்
ஒன்றை அனைவரின் முன்னிலையிலும் கொடுத்தால் அது அந்த
மாணவரை மட்டுமல்லாது அனைத்து மாணவருக்கும் தானும் இதே
போல் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தை கொடுக்கும்.
இதே போல் தான் ஊரில் பல விளையாட்டு போட்டிகள் நடத்துவது
உண்டு அப்போது வெற்றி பெறுபவர்களுக்கு டிபன் பாக்ஸ் ,தட்டு,
இன்னும் பல பொருள்கள் கொடுப்பது உண்டு கூடவே ஒரு வெற்றிச்
சான்றிதழும் கொடுத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் கண்டிப்பாக
வீட்டில் அதை பத்திரமாக வைத்திருப்பார்கள். எப்படி ஒரு சான்றிதழ்
இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு உங்களுக்காக
ஒரு இணையதளம் வந்துள்ளது இந்த இணையதளத்தில் நாம் பள்ளி
மாணவரிலிருந்து விளையாட்டு வீரர் ,நிறுவனங்களில் பணிபுரிபவர்
வரை அனைவருக்கும் தேவையான சான்றிதழை இலவசமாக
தரவிரக்கலாம் எந்த கணக்கும் தேவையில்லை. ஒவ்வொன்றும்
தனித்தனி வகையாக பிரிக்கப்பட்டு பல வடிவங்களில் சான்றிதழ்கள்
உள்ளது நமக்கு எந்த வகை சான்றிதழ் பிடித்துள்ளதோ அதை
தரவிரக்கி நம் பள்ளியின் பெயரையே , நிறுவனத்தின் பெயரையோ
இட்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.
இணையதள முகவரி : http://www.certificatestreet.com
வின்மணி இன்றைய சிந்தனை ஏழை மற்றும் பணக்காரனை சமமாக மதிக்கும் அரசியல்வாதி மறைந்த பின்னும் புகழுடன் இருப்பார்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Calendar Functions cal_days_in_month() Returns the number of days in a month for a specified year and calendar. cal_from_jd() Converts a Julian day count into a date of a specified calendar. cal_info() Returns information about a given calendar. cal_to_jd() Converts a date to Julian day count. easter_date() Returns the Unix timestamp for midnight on Easter of a specified year easter_days() Returns the number of days after March 21, on which Easter falls for a specified year
இன்று மார்ச் 251954 ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. 12" திரையளவு கொண்ட இதன் விலை: $1,000.
படம் பிடிக்கும் மறைமுக கேமிராக்கள் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்
தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி எத்தனை வகை
கேமிராக்கள் மறைவாக இருந்து நம்மை படம் எடுக்க
ஒன்றல்ல இரண்ட்டல்ல பல வகை இதில் நாம் அன்றாடம்
பயன்படுத்தும் எந்த பொருள்களில் இருந்தெல்லாம் நமக்கு
தெரியாமல் படம் பிடிக்கின்றன்ர் என்பதைப்பற்றிய சிறப்பு பதிவு.
இதில் பல வகை கேமிராக்களை நண்பர்கள் பலரும் பயன்படுத்தி
கொண்டுஇருக்கலாம் சிலவற்றை பற்றி தெரியாமலும் இருக்கலாம்.
முக்கியமான் சில அலுவலக பேச்சைக்கூட சில நேரங்களில் இது
போன்ற கேமிரா வைத்து படம் பிடித்துவிடுகின்றன்ர். இதில்
அதிகமாக பயன்படுத்தப்படும் அனைத்துவகை கேமிராக்களை
பற்றியும் அதை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதைப் பற்றியும்
இனி பார்க்கலாம். நாம் அணியும் தொப்பியிலிருந்து சட்டையில்
வைக்கும் பேனா,கால்குலேட்டர்,பெல்ட்,பிளக்பாயிண்ட்,கீச்செயின்,
வாட்ச்,கூலிங்கிளாஸ் என அனைத்து வகை பொருட்களிலும்
மறைமுகமாக செயல்படுகிறது.பொது இட்ங்களில் நாம் இதைப்பற்றிய
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தகவல்.
வின்மணி இன்றைய சிந்தனை நோயாளியிடம் அன்பாக பேசும் மருத்துவர் அவரின் பாதி நோயை அன்பாலே குணப்படுத்திவிடுகிறார். அன்பாக இருக்கும் மருத்துவரும் ஆண்டவனும் வெவ்வேறல்ல.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Simple XML Functions addAttribute() Adds an attribute to the SimpleXML element addChild() Adds a child element the SimpleXML element asXML() Gets an XML string from a SimpleXML element attributes() Gets a SimpleXML element's attributes children() Gets the children of a specified node getDocNamespaces() Gets the namespaces of an XML document getName() Gets the name of a SimpleXML element
இன்று மார்ச் 24பெயர் : முத்துசுவாமி தீட்சிதர் , பிறந்த தேதி : மார்ச் 24, 1776 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்,கர்நாடக சங்கீதத்தில் மட்டுமன்றி இந்துஸ்தானி சங்கீத்தத்திலும் தனக்கென்று தனிமுத்திரைப் பதித்தவர்.ஒரு பதவர்ணம், ஒரு தரு,ஐந்து இராகமாலிகைகளும் இயற்றியுள்ளார்.பதினாறு கணபதிகள் பெயரில் ஷோடஸ கணபதி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். அவற்றில் "வாதாபி கணபதிம்" (ஹம்சத்வனி) "சிறீமகா கணபதி" (கௌளை) என்ற கிருதிகள் பிரசித்தமானவை. இசை உலகம் என்றும் உங்களை மறவாது.
உங்கள் லேப்டாப்-க்கு கூலிங் பேட் (Cooling Pad) நீங்களே உருவாக்கலாம்
மடிக்கணினி பயன்படுத்துவர்கள் அதிக நேரம் கணினியை
பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் வெப்பம் தான் முதல்
பிரச்சினை.காரணம் வெப்பம் சரியாக வெளியேறாமல் இருப்பது
தான் ஆனால் தற்போது வரும் லேப்டாப் அனைத்திலும் கூலிங்
சிறப்பு வசதியுடன் வருகிறது. ஒரே இடத்தில் அதிக நேரம்
மடிக்கணினியை பயன்படுத்துபவர்கள் நீங்ளே அதற்கான விசிறியை
பொருத்திக்கொள்ளலாம் எப்படி என்பதைப் பற்றி தான் இந்த பதிவு.

படம் 1

படம் 1-ல் காட்டப்பட்டது போல் நாம் ஒரு அட்டையை வெட்டி
தயார் செய்து கொள்ள வேண்டும். அடுத்து USB Fan என்று
கணினிக்கடைகளில் $10 டாலருக்கு கிடைக்கும் இதை படம் 2-ல்
காட்டியபடி உங்கள் USB port -ல் பொருத்திக்கொள்ளவும்.
உங்களுக்கு தேவையான மாதிரி fan போஸிசனை மாற்றிக்
கொள்ளலாம். இதைத்தவிர Cooling pad என்று தற்போது
அனைத்து கணினி கடைகளிலும் கிடைக்கிறது இதன் விலை
$18 டாலரிலிருந்து $30 டாலர் வரை தான்.அனைத்து வகை
மடிக்கணினிக்கும் பொருந்தும் வகையில் இது வடிவமைக்கப்
பட்டுள்ளது இந்த Cooling pad தற்போது வெளிவரும் அனைத்து
மடிக்கணினியிலும் பயன்படுத்தலாம் இதனால் நாம் அதிக நேரம்
மடிக்கணினி பயன்படுத்தினாலும் வெப்பமாவது குறைக்கப்படுகிறது.
வின்மணி இன்றைய சிந்தனை இன்று செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்து முடிக்கும் அரசு அதிகாரி அந்த நாட்டின் உயர்ந்த மனிதர்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Filesystem Functions file() Reads a file into an array file_exists() Checks whether or not a file or directory exists file_get_contents() Reads a file into a string fileatime() Returns the last access time of a file filectime() Returns the last change time of a file
இன்று மார்ச் 23பெயர் : பகத் சிங் , மறைந்த தேதி : மார்ச் 23, 1931 இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார். லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக்கொன்றார்.உங்களால் இந்திய தேசத்துக்கே பெருமை என்றும் உங்கள் நினைவு எங்களுடன் இருக்கும்.