Archive for ஏப்ரல் 17, 2010
உங்கள் கோப்பில் வைரஸ் இருக்கிறதா எளிதாக சோதிக்கலாம்
விண்டோஸ் எக்ஸ்பி-யில் இருந்து விண்டோஸ் 7 வரை உள்ள
அனைத்து விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் உள்ள வைரஸ்
கோப்புகளை எளிதாக உடனடியாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்
தான் இந்த பதிவு.
நம் கணினியில் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் வைத்திருந்தால்
அடுத்த ஆண்டிவைரஸ்-க்கு தேவையான சில கோப்புகளை வைரஸ்
இருப்பதாக அறிவிக்கும். சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் கோப்பை
வைரஸ் இருப்பதாக ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளும் மற்றொரு
ஆண்டிவைரஸ் மென்பொருள் வைரஸ் இல்லை என்றும் அறிவிக்கும்
இந்த நேரத்தில் நாம் அந்த கோப்பில் உண்மையாகவே வைரஸ்
இருக்கிறதா என்று இந்த இணையதளம் மூலம் கண்டுபிடிக்கலாம்.
இணையதள முகவரி : http://joebox.org/submit.php
இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் வைரஸ் இருக்கிறதா என்று
சோதிக்க விரும்பும் நம்முடைய கோப்புகளை choose என்ற பொத்தானை
அழுத்தி தேர்ந்தெடுக்க வேண்டும் ஸ்கிரிப்ட் வைரஸ் இருப்பதாக
தோன்றினால் அதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அடுத்து எந்த
ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் தேர்ந்தெடுக்க
வேண்டும். நம் இமெயில் முகவரியைம் கொடுத்து Analyse என்ற
பொத்தானை அழுத்தி எளிதாக சோதிக்கலாம். சோதிக்கப்பட்டு
உடனடியாக நமக்கு இமெயில் மூலம் முடிவு அனுப்பப்படும். இதை
சோதிக்க இந்த இணையதளத்தில் எந்த கணக்கும் உருவாக்கத்
தேவையில்லை. கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை உள்நாட்டில் இருந்து கொண்டு நம் தாய் மண்ணின் பெருமை அறிந்து கொள்பவரைவிட வெளிநாட்டில் இருப்பவருக்குத் தான் நம் மண்ணின் பெருமை புரியும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1. மிக நீண்டகாலம் உயிர்வாழும் பிராணி எது ? 2. மக்மகான் எல்லைக்கோடு எந்த நாடுகளைப் பிரிக்கிறது ? 3. ஒரு காசுக்குகூட நோட்டு அச்சடித்து வெளியீடும் அரசு எது ? 4. இந்தியாவின் முதல் வைசிராய் யார் ? 5. தீபநகரம் என்றழைக்கப்படும் நகரம் எது ? 6. இந்திய இருப்புப்பாதையின் மொத்த நீளம் எது ? 7. இந்தியா முதன்முதலில் அனுவெடிப்பு சோதனை நடத்திய இடம் எது ? 8. முந்திரி உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் நாடு எது? 9. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு எது ? 10. பட்டாம் பூச்சிகளின் சரணாலயம் எது ? பதில்கள்: 1. திமிங்கலாம்,2.இந்தியா - சீனா, 3.ஹாங்காங், 4.கானிங் பிரபு,5. மைசூர்,6.60 ஆயிரம் கி.மீ 7.ராஜஸ்தான்,8. இந்தியா, 9.காளைச்சண்டை,10.மெக்சிகோ
இன்று ஏப்ரல் 17பெயர் : தீரன் சின்னமலை பிறந்த தேதி : ஏப்ரல் 17, 1756 இந்திய விடுதலைப் போராட்ட வீரர். கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட வீரர்.இளைஞர்களுக்கு விடுதலைப்போராட்டத்தில் நம் தேசத்தின் பெருமையை எழுச்சிமிகு ஊட்டியவர். இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க துணிந்து எதிர்த்து செயல்பட்டவர். உங்களால் பாரத தேசத்திற்கு பெருமை.