Archive for ஏப்ரல் 16, 2010
ஒரே நிமிடத்தில் பிடிஎப் புத்தங்களை கூகுள் மற்றும் பிங்-ல் நேரடியாக தேடலாம்
பிடிஎப் கோப்புகளை கூகுள் மற்றும் பிங் தேடுபொறியில் சென்று
தேடுவதை விட எளிதாக பிடிஎப் கோப்புகை தேடி தரவிரக்கலாம்
எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.
கல்லூரி மாணவர்களில் இருந்து தொழிலதிபர்கள் வரை அனைவருக்கும்
பிடிஎப் புத்தகங்கள் மற்றும் கோப்புகளை கூகுள் மற்றும் பிங்
தேடுபொறியில் சென்று தேடுவது சிலருக்கு எளிதாக இருந்தாலும்
தேடிய பக்கங்களே திரும்ப திரும்ப கொடுத்து சில நேரங்களில்
சலிப்படைய வைத்து விடுகின்றனர் இப்படி பட்ட நமக்காகவே பிடிஎப்
கோப்புகளை எளிதாக கூகுள் மற்றும் பிங் தேடு பொறியில் தேடி
சரியான முடிவுகளை நமக்கு கொடுக்க ஒரு இணையதளம் வந்துள்ளது.
இணையதள முகவரி : http://live-pdf.com
இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் தேட விரும்பும் புத்தகத்தின்
பெயரை கொடுத்து கூகுள் தேடுபொறியை மையமாக வைத்து தேடவா
அல்லது பிங் தேடுபொறியை மையமாக வைத்து தேடவேண்டுமா
என்பதை தேர்வு செய்து Search என்ற பொத்தானை அழுத்தவும்.
உடனடியாக நமக்கு நாம் தேடிய புத்தங்களை நேரடியாக உடனுக்குடன்
தரவிரக்கலாம்.
வின்மணி சிந்தனை மக்கள் பணத்தை சுரண்டும் அரசியல்வாதியின் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் படாவிட்டாலும் அடுத்தப் பிறவியில் கழுதையாக பிறந்து பொதியை சுமப்பான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ? 2. சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் நாடு ? 3. பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ? 4. ராடர் கருவியை கண்டுபிடித்தவர் யார் ? 5. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதி யார் ? 6. புனித வெள்ளி அன்று கொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி யார் ? 7. எகிப்தின் வெள்ளைத் தங்கம் எது ? 8. நீந்தத் தெரியாத மிருகம் எது ? 9.1980 ஆம் ஆண்டு அர்ஜூனாவிருது பெற்ற கிரிக்கெட்வீரர் யார்? 10. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது ? பதில்கள்: 1.நார்வே,2.சீனா, 3.முகம்மது அலி ஜின்னா, 4.ஆர்.வாட்சன்வாட்,5. ஜார்ஜ் வாஷிங்டன்,6.ஆப்ரகாம் லிங்கன் 7.பருத்தி,8.ஒட்டகம், 9.கபில்தேவ்,10.பெட்ரோலியம்
இன்று ஏப்ரல் 16பெயர் : சார்லி சாப்ளின் பிறந்த தேதி : ஏப்ரல் 16, 1889 ஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு. நகைச்சுவையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர்.