Archive for ஏப்ரல் 8, 2010
முதன் முதலில் டிவிட்டர் கணக்கில் உங்களை பின் தொடர்ந்தவரை கண்டுபிடிக்க
அனைவரயும் வேகமாக தன் பக்கம் ஈர்த்துக் கொண்டுவரும் டிவிட்டரில்
முதன் முதலில் உங்களை பின் தொடர்ந்தவர்கள் யார் என்று எளிதாக
பார்ப்பது எப்படி என்பதைப்பற்றித் தான் இந்த பதிவு.
அசுர வளர்ச்சி இத்தனைக்கும் 140 வார்த்தைகளில் தான் தகவல்
அனுப்ப முடியும் இருந்தும் அனைவரும் தன் பங்கிற்கு ஒரு
குறுஞ்செய்தி அனுப்புவது போல் தன்னை பின் தொடர்பவர்கள்
அனைவருக்கும் ஒரே நொடியில் செய்தி அனுப்ப டிவிட்டரைத்தான்
பயன்படுத்துகின்றனர். சுருங்க சொல்லி விளங்கவைத்தல் என்ற
தனிக்கொள்கையுடன் வலம் வரும் டிவிட்டரில் நம் டிவிட்டர்
கணக்கு தொடங்கியபோது நம்மை பின் தொடந்தவர்களின் முதல்
நண்பர் யார் என்பதை கண்டுபிடிக்க ஒரு இணையதளம் இருக்கிறது
இணையதள முகவரி : http://firstfollower.com
இந்த இணையதளத்திற்குச்சென்று நாம் நம்முடைய டிவிட்டர் கணக்கின்
பயனாளர் பெயரைக்கொடுத்து wanna Know என்ற பொத்தானை அழுத்த
வேண்டும். சில நொடிகளில் நம் டிவிட்டர் கணக்கு தொடங்கியபோது
நம்மை பின் தொடர்ந்த முதல் நண்பர் யார் என்று கொடுக்கும். சற்று
வித்தியாசமான இணையதளம் தான் நாமும் நம் டிவிட்டரின் முதல்
மறக்க முடியாத நண்பரை இந்த தளம் மூலம் எளிதாகப் பார்க்கலாம்.
வின்மணி இன்றைய சிந்தனை ஆபாச தளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் ஆசை உள்ளவன் தன் தாய் தந்தைப் பெயரை மட்டுமல்ல ஒரு நாட்டின் பெயரையே கொலை செய்கிறான். ஒருவகையில் இவனும் தேசத்துரோகிதான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1. கதிரியிக்கச் செயலை கண்டுபிடித்தவர் யார் ? 2. சிவப்பு ஒளி கொடுக்கும் வாயு எது ? 3. உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் எது ? 4. நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் எவ்வளவு ? 5. உலகிலேயே மிகப் பெரிய தீபகற்பம் எது ? 6. அனில் கும்ப்ளே எந்த நாட்டிற்கு எதிராக முதன் முதலில் கிரிக்கெட் விளையாட தொடங்கினார் ? 7. இந்தியன் இரயில்வேயில் எத்தனை பகுதிகள் உள்ளன ? 8. தமிழின் முதல் படம் எது ? 9. கடல் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன ? 10. வான்கோழிகள் எங்கிருந்து வந்தன ? பதில்கள் 1. ஹன்றி பெக்கொரல், 2.நியான், 3.ஸ்டீல் டவர் - ஜப்பான், 4.13 நொடி, 5.அரேபியா, 6.இங்கிலாந்து 1990, 7.16 பகுதிகள், 8.மர்ம யோகி, 9.அண்டார்டிகா,10.அமெரிக்கா
இன்று ஏப்ரல் 8பெயர் : கோபி அன்னான் , பிறந்த தேதி : ஏப்ரல் 8, 1938 கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகம் ஆவார். 1996 இல் இப்பதவிக்குத் தெர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் ஜனவரி 1, 1997 முதல் பதவி ஏற்றார். மனிதநேயமிக்க நல்லவர் சிறந்த பல கருத்துக்களையும் நல்ல திட்டங்களையும் வகுத்தவர்.