Archive for ஏப்ரல் 2, 2010
செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா
சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன்
முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்களுக்கு முன்
செவ்வாய் கிரகத்திலிருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான
தெளிவான படங்களை வெளியிட்டு உள்ளனர் இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.
பல மில்லியன் டாலர் அளவு பணத்தை கிரகங்களைப்பற்றி
ஆராய்ச்சி செய்வதற்காக பயன்படுத்துகின்றனர். இதன் மூலம்
பல கிரகங்களைப்பற்றிய தகவல்களை அறிவியல் பூர்வமாக
தெளிவாக விளக்கியுள்ளனர். இதில் ஒரு பெரிய வேடிக்கை
என்னவென்றால் இவர்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து
செவ்வாய்கிரகம் சிவப்பு என்று அறிவித்தனர். ஆனால் பல
நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் வான்வெளியில்
உள்ள செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு என்று அறிவித்துள்ளனர்
( இடைக்காட்டு சித்தர் தன் நூலில் கிரகங்களை பற்றி மேலும்
சிறப்பாக கூறியுள்ளார் ஆராய்ச்சியாளர்கள் நேரம் இருந்தால்
எங்கும் செல்லாமல் கிரகங்களை பற்றிய அனைத்து விபரங்களையும்
இந்த நூலில் இருந்து பெறலாம் ). செவ்வாய் கிரகத்திலிருந்து
எடுக்கப்பட்ட சிறப்பு படங்களை நாசா வெளியிட்டுள்ளது. அதன்
படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

படங்கள் நன்றி நாசா
வின்மணி இன்றைய சிந்தனை எத்தனை முறை நம்மை திட்டினாலும் நம்மிடம் அதிகம் பாசமுள்ளவள் தான் நம் தாய். ஒரு முறை கடவுள் கொடுக்கும் இந்த பந்தத்தை எவனோ கொடுக்கும் ஒரு சில காசுக்காக நாடு விட்டு சென்றால் நீ கண்டிப்பாக அதிர்ஷ்டம் இல்லாதவன் தான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.குளோரினை கண்டுபிடித்தவர் யார் ? 2.இந்தியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரின் பெயர் என்ன ? 3.சக்தியின் அலகு யாது ? 4.உலகிலே மிக உயரமான மலைத்தொடர் எது ? 5.சூரியனின் நான்காவது கிரகம் எது ? 6.உலககோப்பையில் 23 சிக்சர்கள் அடித்த வீரர் யார் ? 7.உலகிலே பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனம் எது ? 8.முதன்முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்ட திரைப்படம் எது? 9.மிக நீண்ட ஆயுளை உடைய விலங்கு எது ? 10.ஒரு நாளில் இதயம் எத்தனை முறை துடிக்கும் ? பதில்கள் 1.k.ஷீல்லி , 2.பரம், 3.வாட் , 4.இமாலயம்-29,028 அடி, 5.செவ்வாய் , 6.கங்குலி , 7.இந்தியன் இரயில்வே, 8.ராஜா அரிச்சந்திரா 9.ஆமை , 10. 1,00,000
இன்று ஏப்ரல் 2பெயர் : வ. வே. சுப்பிரமணியம் , பிறந்த தேதி : ஏப்ரல் 2, 1881 இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கியவாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். 1922ல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். தமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், உடல் வலிவுப் பயிற்சிகளும் போதித்தார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4