Archive for ஏப்ரல் 13, 2010
அனைத்து முக்கிய தமிழ்ச்செய்திகளையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.
உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வலைப்பதிவு
நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பல இணையதளங்கள் சென்று தமிழ் செய்திகள் பார்ப்தற்கு ஆகும்
நேரத்தை குறைப்பதற்க்காக ஒரு இணையதளம் வந்துள்ளது
இதைப்பற்றித்தான் இந்த பதிவு.
தமிழ் செய்திகள் படிப்பதென்றால் பல பத்திரிகைகளின்
இணையதளங்களுக்குச் சென்று தான் நாம் படிக்க வேண்டும்
சில பத்திரிகை இணையதளங்களுக்கு சென்றால் அதன்
தோன்றும் நேரம் ( Loading Time) அதிகமாக இருக்கும்.
இப்படி பல இணையதளங்களுக்கு சென்று செய்திகளைப்
பார்க்கும் போது சில நேரங்களில் நமக்கு சலிப்பு வந்துவிடும்.
முக்கியச் செய்திகளை ஒரே இடத்தில் பார்க்க புதிதாக ஒரு
இணையதளம் வந்துள்ளது. தினமலர் பத்திரிகையில் இருந்து
கூகுளின் தமிழ் செய்திகள் வரை அத்தனையும் உடனுக்குடன்
நேரடியாக ஒரே தளத்தில் இருந்து கொண்டு நாம் தெரிந்து
கொள்ளலாம். தமிழ் உள்ளங்களைத் திருடும் இதன்
இணையதள முகவரி: http://www.thiruda.com
வின்மணி சிந்தனை அனைத்து மக்களின் நலம் விரும்பி கடவுளை வணங்கினால் நம் நலனை கடவுள் பார்த்துக்கொள்வார். எல்லாம் இறைவன் திருவருளால் நல்லதாகவே நடக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1. இந்திய மண்ணில் நுழைந்த முதல் ஐரோப்பியர் யார் ? 2. உலகச் சுற்றுச்சுழல் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ? 3. ஒட்டகப்பறவை என்று எதை கூறுவார்கள் ? 4. ஆயிரம் ஏரிகள் நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ? 5. கப்பல் பயணத்தூரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் ? 6. உடம்பிலுள்ள எலும்புகளில் மிக நீளமான எலும்பு எது ? 7. உலகில் தோன்றிய முதல் தாவரங்கள் எவை ? 8. நாய்க்கு எத்தனை பற்கள் உண்டு ? 9. உலகில் அதிகம் இரப்பர் கிடைக்கும் நாடு எது ? 10. உலகில் எத்தனை மக்கள் சீன மொழி பேசுகின்றனர் ? பதில்கள்: 1.அலெக்ஸாண்டர்,2.ஜீன் 5, 3.நெருப்பு கோழி, 4.பின்லாந்து,5.நாட்டிகல்,6.தொடை எலும்பு 7.நீலப்பச்சைப் பாசி,8.நாற்பத்தி இரண்டு,9.மலேசியா, 10. 975 மில்லியன் மக்கள்
இன்று ஏப்ரல் 13பெயர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , பிறந்த தேதி : ஏப்ரல் 13, 1930 புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. பாடல்கள் மூலம் சமூகத்தை சீர்திருத்த முயன்ற உங்களுக்கு நன்றி.