Archive for மே, 2010

நம் தளத்தில் கூகுள் பஸ் பொத்தான் நேரடியாக கூகுள் தளத்தில் இருந்தே உருவாக்கலாம்.

கூகுள் பஸ் பொத்தான் மற்றும் கூகுள் பஸ் எண்ணிக்கை கருவியை
கூகுள் இணையதளத்தில் இருந்து நேரடியாக நம் பிளாக் அல்லது
இணையதளத்தில் எளிதாக எப்படி உருவாக்கலாம் என்பதை
பற்றிதான் இந்த பதிவு.

படம் 1

படம் 2

மலேசியாவில் இருந்து கிருஷ்ணவேணி என்ற சகோதரி கூகுள்
பஸ் பொத்தான் உருவாக்கி எப்படி இணையதளத்தில் சேர்க்க
வேண்டும் என்று கேட்டிருந்தார்கள் அவர்களுடன் நம் நண்பர்கள்
அனைவருக்காகவும் , கூகுள் பஸ் பொத்தான் நம் பதிவுகளை
பிரபலப்படுத்த மட்டுமல்ல நம் தளத்தை பின் தொடர்பவர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்கவும் தான் இனி இந்த கூகுள் பஸ்
பொத்தான் நேரடியாக கூகுள் தளத்தில் இருந்து எப்படி
உருவாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

படம் 3

http://www.google.com/buzz/api/admin/site என்ற இணையதளத்திற்க்கு
சென்று நாம் படம் 1ல் இருப்பது போல் Post to Buzz  அல்லது
Follow on Buzz  எது வேண்டுமோ அதை சொடுக்கவும். உதாரணத்திற்கு
நாம் இப்போது Post to Buzz  என்பதை சொடுக்கியுள்ளோம் இப்போது
படம் 2 -ல் இருப்பது போல் வந்துவிடும். இதில் எப்படி பொத்தான்
வேண்டுமோ அப்படி தேர்ந்தெடுக்கவும் அடுத்து கட்டத்திற்க்குள் உள்ள
கோடிங்-ஐ காப்பி செய்து நம் இணையதளத்திலோ அல்லது பிளாக்கிலோ
எங்கு தேவையோ அங்கு பேஸ்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.
இதே போல் Follow on Buzz  என்பதையும் சொடுக்கி படம் 3 ல்
காட்டப்பட்டது போல் நம் இணையதள முகவரியை கொடுத்து அங்கு
இருக்கும் கட்டத்திற்க்குள் உள்ளதை காப்பி செய்து நம் தளத்தில்
தேவையான இடத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வின்மணி சிந்தனை
சாப்பிட எல்லா பொருட்களும் இருந்து சாப்பிடாதவன்
தான் உண்மையான ஞானி ஒன்றும் கிடைக்காமல்
சாப்பிடாமல் இருப்பன் ஞானி அல்ல.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரும்புத்துண்டு எந்த திரவத்தில் மிதக்கும் ?
2.இந்தியாவில் கொரில்லா போர் முறையை கையாண்டவர் யார் ?
3.மனித குடலில் வேலை இல்லாத உறுப்பு எது ?
4.’பாவை நோன்பு’ எந்த மாதத்தில் வருகிறது ?
5.பிரேசில் நாட்டில் பேசப்படும் மொழி எது ?
6.மிகப்பெரிய சுறாமீன் எது ?
7.’லெனின் கிரேட்’ எந்த நாட்டில் உள்ளது ?
8.காமெடி நடிகர் சார்லி சாப்லின் பிறந்த பிறந்த நகரம் எது ?
9.’கெம்பகவுடா’ எந்த நகரை வடிவமைத்தார் ?
10.தென்னிந்தியாவின் உயரமான மலைச்சிகரம் எது ?
பதில்கள்:
1.பாதரஸம், 2.சத்ரபதி சிவாஜி, 3.குடல்வால்,
4. மார்கழி,5.போர்த்துகீஸ், 6.வேல்,7.ரஷ்யா,
8. லண்டன்,9.பெங்களூர் ,10. தொட்டப்பெட்டா
இன்று மே 31 
பெயர் : ஜான் ஆபிரகாம் ,
மறைந்த தேதி : மே 31, 1987
கேரளாவில் பிறந்த ஒரு புகழ்பெற்ற
திரைப்பட இயக்குநர். புனேவில் உள்ள
திரைப்படக் கல்லூரியில் ரித்விக்கடக்கிடம்
திரைக்கலையினை பயின்றவர்.ஒடேஸா
இயக்கம் என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

மே 31, 2010 at 6:21 பிப 4 பின்னூட்டங்கள்

உங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம்

நாம் பயன்படுத்தும் மொபைல் பழையதாகி விட்டது இனி
அந்த மொபைல் போனை எங்கு யாரிடம் விறகாலம் என்றெல்லாம்
தேட வேண்டாம் எளிதாக உங்கள் போனை நல்ல விலைக்கு
விற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

நாளுக்கு நாள் புதிது புதிதாக மொபைல் போன் வந்த வண்ணம்
தான் உள்ளது.  கடந்த மாதம் நாம் வாங்கிய மொபைல்-ஐ விட
இந்த மாதம் அதை விட கூடுதல் சலுகைகளுடன் விலைக்குறைவாக
பல மொபைல் போன் வந்தது கொண்டே இருக்கிறது. நம் பழைய
மொபைல் விற்க வேண்டும் என்றால் எங்கே சென்று விற்ப்பது
என்றெல்லாம் தேட வேண்டாம் இந்த இணையதளத்தின் மூலம்
நம் மொபைல் போனை நல்ல விலைக்கு விற்கலாம்.

இணையதள முகவரி : http://www.sellmymobile.com

மொபைல் போன் முதல் ஐபாட் வரை அனைத்தையும் நாம்
இங்கு விற்கலாம். 20 மொபைல் ரிசைக்கிள் செய்யும் நிறுவனங்கள்
நேரடியாக நம் மொபைல் போனை வாங்கிக்க்கொள்ளும். நமக்கு
வேறுயாராவது மொபைல் போன் குறைந்த விலையில் கிடைத்தால்
வாங்கிக்கொள்ளலாம். அனைத்து நிறுவன மொபைல்களுகும் இந்த
சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. நாம் விரும்பிய விலையில்
விற்க மட்டுமல்ல வாங்கியும் கொள்ளலாம்.

வின்மணி சிந்தனை
இறைவன் கருனையால் சில நேரங்களில் சில
மனிதர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும் அப்போது
அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலக நாடக தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
2.எந்த நோய் பாக்டீரியாவால் பரவுவதில்லை ?
3.ஜூபிடர், பூமி இதில் எது பெரியதாக இருக்கும் ?
4.ரயில்வே சிக்னலை கண்டுபிடித்தவர் யார் ?
5.ராஜ நாகத்தின் ஆயுட்காலம் எவ்வளவு ?
6.இயற்கையான வெந்நீர் ஊற்றுக்கு என்ன பெயர் ?
7.காஷ்மீர் மாநிலத்தின் மாநில மிருகம் எது ?
8.13 மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்த இந்திய
  பிரதமர் யார் ?
9.இந்தியா சுதந்திரம் அடைந்த போது எத்தனை
  மன்னர்கள் இருந்தனர் ?
10.செவ்வாய் கிரகத்தில் இறங்கிய முதல் விண்கலம் எது ?
பதில்கள்:
1.மார்ச் 27, 2.பெரியம்மை, 3.ஜூபிடர்,
4. ஹால்,5.14 ஆண்டுகள், 6.கெய்சர்,7.கஸ்தூரிமான்,
8. பி.வி.நரசிம்மராவ்,9.552 ,10. மார்ஸ் 3
இன்று மே 30 
பெயர் : போரிஸ் பாஸ்ரர்நாக் ,
மறைந்த தேதி : மே 30, 1960
ரஷ்யக் கவிஞரும், புதின எழுத்தாளருமாவார்.
1958 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைத்
தனது டாக்டர் ஷிவாகோ புதினத்துக்காகப்
பெற்றவர்.இப்புதினத்தின் மூலம் அவர் மன்னர்
காலத்து உயர் வகுப்பினரதும் ஏனைய வகுப்பைச்
சார்ந்தவர்களிடமும் நடைமுறை உண்மையை
எடுத்துக் காட்டியிருந்தார். 
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

மே 30, 2010 at 7:07 பிப 8 பின்னூட்டங்கள்

குழந்தை ‘இரும்பு மனிதன்’ பிரத்யேக வீடியோ காட்சி

தொழில்நுட்ப வல்லுனர்களால் மனிதனை வானில் சூப்பர் மனிதனாக
பறக்க வைக்கலாம் என்ற கருத்தை வலியுருத்திக்  கிராபிக்ஸ்-ல்
பல புதுமைகளை தாங்கி வெளிவந்த இரும்பு மனிதன் முதல் பாகம்
மற்றும் இரண்டாம் பாகம் வெற்றியை அடுத்து குழந்தை இரும்பு
மனிதாக வரும் பிரேத்யேக வீடியாககாட்சி வெளிவந்துள்ளது
இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

விஞ்ஞானியின் ஆக்கபூர்வ ஆற்றலால் உருவாக்கப்படும் இரும்பு
மனித இயந்திரத்தை கொண்டு மக்களுக்கு என்னவெல்லாம் நல்லது
செய்யலாம் எனபதை அனைவருக்கும் புரியும் படி கிராபிக்ஸ்-ல்
தனி உச்சத்தை தொட்டுள்ளனர்.இதனை அடுத்து கனடா கிராபிக்ஸ்
கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஐயர்ன் பேபி (இரும்பு குழந்தை)
என்ற சிறப்பு வீடியோ காட்சி ஒன்றை வெளியீட்டுள்ளனர். குழந்தைக்கு
இரும்பு ம்னிதை இயந்திரம் கிடைத்தால் என்ன வெல்லாம் செய்வார்கள்
என்பதை கண்களுக்கு விருந்தளிக்கும் விதம் காட்சியாக திரையில்
அளித்துள்ளனர். இரும்பு குழந்தை இரும்பு மனிதனாக வலம்
வந்திருக்கும் சிறப்பு விடியோ காட்சியையும் இத்துடன்
இணைத்துள்ளோம்.

வின்மணி சிந்தனை
அன்பும் ஆதரவும் கொடுக்கும் மனிதர்கள் கடவுளுக்கு
இணையானவர்கள், நண்பர்களும் நமக்கு கடவுள் தான்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை ?
2.பனிக்கட்டியின் உருகுநிலை எத்தனை டிகிரி செல்சியஸ்?
3.சிலந்தி நண்டு எங்கே அதிகம் காணப்படுகிறது ?
4.எகிப்து நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன ?
5.பொன் கோபுர நாடு எனப்படுவது எது ?
6.’யோக சூத்திரம்’ எழுதியவர் யார் ?
7.ஆப்கானிஸ்தானின் சுதந்திர தினம் எது ?
8.உலகில் பெருமளவில் கிடைக்கும் வாயு எது ?
9.ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா எந்த ஆண்டில்
  அரசுடமைக்காகப்பட்டது ?
10.’கருட பஞ்சமி ‘ யாரால் கொண்டாடப்படும் நாள் ?
பதில்கள்:
1.133, 2.0 டிகிரி, 3.அமெரிக்கா, 4.பவுண்ட்,5.பர்மா,
6.ஸ்ரீ பதஞ்சலி முனிவர்,7.ஜூலை 4, 8.நைட்ரஜன்,
9.1.1.1949,10. பெண்களால்
இன்று மே 29 
பெயர் : ஜோன் எஃப். கென்னடி ,
பிறந்த தேதி : மே 29, 1917
ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத்
தலைவர். இரண்டாம் உலகப் போரின்
போது தென்மேற்கு பசிபிக் பகுதியில்
கடற்படைக்கப்பலில் லெப்டினண்டாகப்
பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத்
திரும்பினார்.1961 முதல் 1963 வரை அவர் கொலை
செய்யப்படும் வரை குடியரசுத் தலைவராக இருந்தவர்

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

மே 29, 2010 at 6:05 பிப பின்னூட்டமொன்றை இடுக

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் ஏற்படும் 50 பிரச்சினைகளுக்கு தீர்வு

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் அடிக்கடி பொதுவாக
ஏற்படும் முதல் 50 பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் சிறிய
மென்பொருளைப்பற்றிய சிறப்பு பதிவு.

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் அடிக்கடி ஏற்படும்
வைரஸ்,மால்வேர், ஸ்பைவேர் மற்றும் சிஸ்டத்தின் செட்டிங்
பிரச்சினைகளை தீர்க்க ஒரு மென்பொருள் உள்ளது. விண்டோஸ்
எக்ஸ்ப்ளோரர் , இண்டெர்னெட் கனெக்சன் ,மீடியா பிளேயர் ,
சிஸ்டம் டூல்ஸ் , மற்றும் திரையின் அளவு போல்டர் பிரச்சினை
Explorer.exe problem , Recycle bin பிரச்சினை மற்றும் டிஸ்க்
டிரைவில் ஏற்படக்கூட ஆட்டோ ரன் பிரச்சினை போன்று பொதுவாக
ஏற்படும் முதல் 50 பிரச்சினைக்கு தீர்வு வழங்க ஒரு மென்பொருள்
உள்ளது. இந்த முகவரியில் இருந்து மென்பொருளை தரவிரக்கிக்
கொள்ளவும்.

இணையதள முகவரி : http://www.thewindowsclub.com/downloads/FixWin.zip

அடிக்கடி எழும் சிறிய பிரச்சினைகளுக்கு யார் உதவியும் இல்லாமல்
எளிதாக நம் சிஸ்டத்தில் எழும் பிரச்சினைகளை நாமே சரி செய்யலாம்.
மென்பொருள் 175 KB தான் எந்த வைரஸ் பிரச்சினை இருந்தாலும்
உடனடியா முதலுதவி செய்ய கண்டிப்பாக இந்த சிறிய டூல் உதவும்.

வின்மணி சிந்தனை
அதிகம் படித்த மேதாவியாக இருந்தாலும் எல்லாவற்றையும்
படிப்பால் உணரமுடியாது சிலவற்றை அனுபவத்தால் தான்
உணரமுடியும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
6.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
9.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
10.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
பதில்கள்:
1.வாசுகி, 2.விழுப்புரம், 3.லிட்டில்பாய்,
4.காபூல்,5.தியாகம், 6.கிரான்ஸ்டட்,7.நாங்கிங்,
8.தைராக்ஸின்,9.பங்காளதேஷ்,10.கே.ஆர்.நாராயணன்
இன்று மே 28 
பெயர் : என்.டி.ராமராவ் ,
பிறந்த தேதி : மே 28, 1923
பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர்
மற்றும் அரசியல்வாதி.ஆந்திரப் பிரதேசத்தின்
முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு
வ‌கித்தவர்.தெலுங்கு திரைப்படத்துறையில்
ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை
பெற்றார். சிறந்த இறைபக்தி உள்ளவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

மே 28, 2010 at 5:02 பிப 7 பின்னூட்டங்கள்

ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்

ஒவியர்கள் தங்கள் படைப்ப உலகறியச் செய்யவும் , வரைந்த
அல்லது செதுக்கியிய அழகான ஒவியத்தை எப்படி ஆன்லைன்
மூலம் விற்கலாம் என்பதைப்பற்றிய சிறப்பு பதிவு.

படம் 1

படம் 2

காலத்தால் அழியாத ஒவியம் பலவற்றை இப்போது மக்கள்
உருவாக்கி வருகின்றனர். ஆனால் இப்படி வரையும் ஒவியத்தை
உலகறியச்செய்வது எப்படி மற்றும் இந்த ஒவியங்களை விற்பனை
செய்வது எப்படி என்ற கேள்வியும் கூடவே இருந்து வருகிறது
உங்களுக்கு உங்கள் ஒவியத்திறமைகளை வெளி உலகத்திற்க்கு
கொண்டு செல்லவும் இதன் மூலம் பணம் சம்பாதிக்க
உதவுவதற்காகவும் ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.artflock.com

இந்த இணையதளத்திற்க்கு சென்று நமக்கு என்று ஒரு இலவச
கணக்கு உருவாக்கிக்கொள்ளவும். அதன் பின் நம்மிடம் இருக்கும்
ஒவியத்தை புகைப்படம் எடுத்து அதன் அளவு , ஒவியத்தின்
பொருள் மற்றும் பல விபரங்களை கொடுத்து இலவசமாக
பதிவேற்றலாம் நம் ஒவியம் பல பேருக்கு சென்றடைவதுடன்
சில பேர் புகைப்படத்துடன் அதன் விலையையும் நிர்ணயம்
செய்து வைக்கலாம் பிடித்தவர்கள் உடனடியாக ஆன்லைன்
மூலம் நம் புகைப்படங்களை வாங்கலாம். பல இணையதளங்கள்
நம் புகைப்படத்தை பதிவேற்ற காசு வசூலிக்கின்றனர் ஆனால்
இவர்கள் நாம் விற்கும் புகைப்படத்தில் சிறிய தொகையை
கமிஷனாக எடுக்கின்றனர் கண்டிப்பாக இந்த தளம் ஒவியத்
துறையில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
மக்கள் பணத்தை மொத்தமாக கொள்ளையடிக்கும்
அரசியல்வாதி பெரும் நோயால் கொஞ்சம் கொஞ்சமாக
அவதிப்படுவான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வெனீஸ் பட விழாவில் ஏழு பரிசுகளை வென்றப்படம் எது ? 
2.முசோலினி எந்த நாட்டின் சர்வதிகாரியா இருந்தார் ?
3.வெறிநாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் இடம் தமிழகத்தில்
  எங்குள்ளது ?
4.லாட்டரியை அறிமுகப்படுத்திய நாடு எது ?
5.இந்தியாவின் இயற்கை அரண் எது ?
6.அமீபா எத்தனை செல் உயிரினம் ?
7.பழனிக்கு பண்டைய கால பெயர் எது ?
8.குடிக்கும் சோடாவில் கலந்துள்ள வாயு எது ?
9.உத்திரப்பிரதேசத்தின் இரண்டாவது பெண் முதல்வர் யார் ?
10.முதலை எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும் ? 
பதில்கள்:
1.செவன் சாமுராய், 2.இத்தாலி, 3.குன்னூர்,
4.இங்கிலாந்து,5.இமயமலை, 6.ஒரே செல்,7.வையாபுரி,
8.கார்பன்டைஆக்சைடு,9.மாயாவதி,10.100 ஆண்டுகள்
இன்று மே 27 
பெயர் : ஜவஹர்லால் நேரு ,
மறைந்த தேதி : மே 27, 1964
நீண்டகாலம் தொடர்ந்து இந்தியாவின்
பிரதம மந்திரியாக சேவை செய்தவர்.
இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான
நேரு காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு
பின்னர் 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில்
காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின்
முதல் பிரதமராக  பதவி ஏற்றார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

மே 27, 2010 at 9:42 பிப 4 பின்னூட்டங்கள்

பாதுகாப்பாகவும் வேகமாகவும் கணினி விட்டு கணினி தகவல்களை அனுப்பலாம்

கணினி விட்டு கணினி தகவல்களை பாதுகாப்பாகவும் வேகமாகவும்
அனுப்பலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

படம் 2

இமெயில் மூலமும் ரேபிட்ஷேர் இன்னும் பல இணையதளங்கள்
மூலமும் நாம் தகவல்களை அனுப்பி இருக்கிறோம் ஆனால்
ஒருவருக்கு மட்டும் தகவல்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும்
அனுப்பலாம் இதற்க்கு டீம்வியூவர்,ரெட்மின் போன்ற தளங்கள்
இருந்தாலும் இந்தத்தளத்தில் நாம் தகவல்களை அப்லோட் செய்ய
அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இப்படி எந்தப்பிரச்சினையும்
இல்லாமல் நம் தகவல்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும்
அனுப்பலாம்.

இணையதள முகவரி :  http://isendr.com

இந்தத்தளத்திற்க்கு சென்று படம் 1-ல் காட்டியபடி send file என்ற
பொத்தானை அழுத்தி அனுப்ப வேண்டிய கோப்பை தேர்ந்தெடுக்கவும்
கடவுச்சொல் வேண்டுமால் கூட கொடுத்துக்கொள்ளலாம். இப்போது
படம் 2 ல் காட்டியபடி ஒரு முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் அந்த
முகவரியை நாம் யாருக்கு கோப்பு அனுப்ப வேண்டுமோ அவருக்கு
கொடுக்கவும் இப்போது peer to peer protocol மூலம் நம் கணினியில்
நாம் தேர்ந்தெடுத்த கோப்பை அவர் நேரடியாக தரவிரக்க முடியும்.
தரவிரக்கி முடிந்ததும் அந்த இணையதள முகவரி தன் பயன்பாட்டை
முடித்துக்கொள்ளும்.கண்டிப்பாக இந்த தளம் நமக்கு பயனுள்ளதாக
இருக்கும்.

வின்மணி சிந்தனை
அடுத்தவர் உழைப்பினால் விழையும் எந்த பொருளுக்கும்
ஆசைப்படாதவன் மன அளவில் கூட பாதிக்கப்பட மாட்டான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பாம்புப் புற்று எவ்வாறு உருவாகிறது ?
2.இந்தியத் திட்டக்கமிஷன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
3.சுயிங்கம் தயாரிக்கப்பயன்படும் மரம் எது ?
4.ஆஃப்செட் அச்சு முறையைக் கண்டுபிடித்தவர் யார் ?
5.க்யூரி தம்பதி கண்டுபிடித்த தனிமம் எது ?
6.விடுபடும் திசைவேகத்திற்க்கு உதாரணம் என்ன ?
7.உலகத்திரை உலகின் திகில் மனிதர் யார் ?
8.கிருஷ்ணன் குடையாக தூக்கிய மலை எது ?
9.மெளஃளேன் என்றால் என்ன ?
10.டில்லி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண்முதல்வர் யார் ?
பதில்கள்:
1.எறும்புகளால், 2.1950, 3.சயோடில்லா,
4.ரபேல்,5.ரேடியம், 6.ராக்கெட்,7.ஹிட்சாக்,
8.கோவர்த்தனகிரி,9.காட்டு வெள்ளாடு,10.சுஷ்மா சுவராஜ்
இன்று மே 26 
நாள் : மே 26 , 2002
செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள்
செவ்வாய் சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு
கோள். இது சூரியனலிருந்து நான்காவது கோள்
ஆகும். மார்ஸ் ஒடிசி என்னும் விண்ணூர்தி
செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள்
இருப்பதை அறிந்த மகிழ்ச்சியான நாள்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

மே 27, 2010 at 7:38 முப 9 பின்னூட்டங்கள்

ஆன்லைன் -ல் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்க பயனுள்ள இணையதளம்.

உங்களுக்கு எழும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் விடை
அளிக்க இணையதள வாசிகள் பலபேர் உள்ளனர். நம் கேள்விகள்
மற்றும் பதிலை வீடியோ மூலம் கூட கேட்கலாம் எப்படி என்பதை
பற்றிய ஒரு சிறப்பு பதிவு.

படம் 1

படம் 2

தினமும் எத்தனை கேள்விகள் நம்மிடம் எழுகின்றன அத்தனை கேள்வி
களுக்கும் விடை தேடி எங்கும் அலையவேண்டாம் உடனடியாக எந்தத்
துறை சார்ந்த கேள்வியாக இருந்தாலும் கேட்கலாம். மாணவர்களுக்கு
எழும் கேள்விகள் முதல் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு எழும்
சந்தேகம் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். மற்ற
தளங்களை விட இந்தத் தளத்தில் நாம் கேள்விகளை வீடியோ மூலம்
கூட கேட்கலாம். பதில் வீடியோவாக நமக்கு கிடைப்பது உண்டு.
இணையதள முகவரி : http://plank.ly
இந்தத்தளத்திற்க்கு சென்று நாம் கேட்க விரும்பும் கேள்விகளை
படம்-1ல் காட்டியபடி எளிதாக  நம் டிவிட்டர் முகவரி மூலம் கூட
கேட்கலாம். விடியோ மூலம் கேள்விகேட்க விரும்பும் நபர்கள்
தங்களுக்கென்று என்று ஒரு இலவச கணக்கை இந்தத்தளத்தில்
உருவாக்கிக்கொள்ளவும். எல்லாத்துறை நண்பர்களும் நிறைந்து
இருப்பதால் நாம் கேள்விகளை கேட்ட சில மணி நேரங்களில்
பதில் கிடைத்திவிடும். நாம் இந்த தளத்தில் வேறு யாரோ கேட்ட
கேள்விக்கு பதில் தெரிந்தால் கூட பதில் அளிக்கலாம். கண்டிப்பாக
இந்தத்தளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும்
அடுத்தவர் மனது துன்பப்படாமல் பேசுபவன்
இறைவனை தேடி எங்கும் அலையவேண்டாம்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சந்திரன் பூமியை எத்தனை கீ.மீ வேகத்தில் சுற்றுகிறது ?
2.பாலில் உள்ள சர்க்கரைக்கு அறிவியல் பெயர் என்ன ?
3.ஆடிப்பெருக்குடன் தொடர்புடைய நதி எது ?
4.சர் ஐசக் நீயூட்டன் எந்த வகை கணிதத்தை உருவாக்கினார் ?
5.சூடான் நாட்டின் தலைநகரம் எது ?
6.கடல் நண்டின் இரத்தம் என்ன நிறத்தில் இருக்கும் ?
7.கந்தக அமில உப்புகளின் பெயர் என்ன ?
8.டிராபிக் விளக்கை கண்டுபிடித்தவர் யார் ?
9.கொழும்பு நகரின் மற்றொரு பெயர் என்ன ?
10.’மதர்’  என்ற ஆங்கில நாவலின் ஆசிரியர் யார் ?
பதில்கள்:
1.3680 கீ.மீ, 2.லாக்டோஸ், 3.காவிரி,
4.கால்குலஸ்,5.கார்ட்டோம், 6.நீலம்,7.சல்பேட்டுகள்,
8.ஜே.பி.நைட்,9.ஸ்ரீ ஜெயவர்த்தனாபுரா,10.மாக்ஸிம் கார்க்கி
 
இன்று மே 25 
பெயர் :  மு. சி. பூரணலிங்கம் ,
பிறந்த தேதி : மே 25, 1866
தமிழறிஞர். தமிழ் மொழியின் தொன்மையையும், 
உயர்வையும் பிற மொழியினரும் அறியும்
வண்ணம் அயராது உழைத்தவர்.தமிழ்ப் பற்றும்
தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்தவர்.
உங்களால் பாரத தேசத்துக்குப் பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

மே 26, 2010 at 2:41 முப 11 பின்னூட்டங்கள்

பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர்.

உலகில் அதிகமான மக்களை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும்
முதல் சோசியல் நெட்வொர்க்கான பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள்
தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் இதைப்பற்றிய சிறப்பு பதிவு.

பேஸ்புக் சில மாதங்களுக்கு முன் தான் கணினி கொள்ளையர்கள்
தங்கள் கைவரிசையை காட்டினர் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான்
இப்போது முன்பைவிட சற்று அதிகமாக தாக்கியுள்ளனர் அதாவது
நீச்சல் குளத்தில் குழந்தை ஒன்று குளிக்கும் ஆபாச விடியோவை
ஏற்றியுள்ளனர். பேஸ்புக்-ல் இந்த முகவரியை சொடுக்கிய அனைத்து
கணினியும் மால்வேர் -ஆல் பாதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்-ல் மால்வேர்
என்று பரவிய அடுத்த சில மணி நேரத்திற்க்குள் பிரச்சினையை
கண்டுபிடித்தும் அதை தீர்க்க முடியாமல் தினறியுள்ளனர். யார்
அனுப்பினார்கள் எங்கிருந்து அனுப்பினார்கள் என்ற எந்த தகவலும்
தெரியவில்லை சராசரியாக பல இலட்சம் மக்கள் கணினி இதனால்
பாதிக்கப்பட்டுள்ளது.  பேஸ்புக் -ல் உடனடியாக பாதுக்காப்புக்கு என்று
பல வல்லுனர்களை நியமித்து இனி இதுபோல் பிரச்சினை வராமல்
தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். எத்தனை
தொழில் நுட்ப வல்லுனர்களை வைத்தாலும் அவர்களால் இந்தப்
பிரச்சினைக்கு முடிவு எடுப்பது சற்று கடினம் தான் அதை விடுத்து
கணினி கொள்ளையர்களில் நல்லவர்கள் சிலபேரை வேலைக்கு
வைத்தாலே இந்தப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிடும்.
வெறும் படிப்பறிவு உள்ளவர்களால இந்தப்பிரச்சினை தீர்ப்பது
சற்று கடினம் தான். பாம்பின் கால் பாம்பறியும்.  இதே போல்
முந்தைய பேஸ்புக் வைரஸைப்பற்றிய நம் பதிவைப்
பார்க்க இங்கே சொடுக்கவும்.

பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

வின்மணி சிந்தனை
வயதான பெரியவர்கள்களிடம் அன்பு காட்டுங்கள் காதலை
விட சிறந்த அன்பு அதுதான் என்று உணர முடியும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வெள்ளை பெயிண்டில் உள்ள பொருள் என்ன ?
2.உலகில் இரண்டாவது உயர்ந்த கோபுரம் ?
3.அமெரிக்க எந்த ஆண்டில் சுதந்திரம் பெற்றது ?
4.இந்தியாவின் முதல் செயற்க்கைகோள் எது ?
5.அணுக்கதிர் வீச்சினால் அழியாத உயிரினம் ?
6.நம் உடலில் பித்த நீரை சுரக்கும் சுரப்பி எது ?
7.மிசோரத்தின் தலைநகரம் எது ?
8.தமிழ்நாடு மின்சார வாரியம் எப்போது தொடங்கப்பட்டது ?
9.மனிதனைப்போல் நடக்கும் பறவை எது ?
10.’காற்று நகரம்’ என்று எந்த நகரத்தைக் குறிப்பிடுகின்றோம் ?
பதில்கள்:
1.துத்தநாக ஆக்சைடு, 2.மிரத் கோபுரம், 3.1888,
4.ஆரியப்பட்டா,5.கரப்பான் பூச்சி, 6.கல்லீரல்,
7.ஐஸ்வாஸ்,8.1957,9.பென்குவின் ,10.சிகாகோ
இன்று மே 24 
பெயர் : விக்டோரியா ,
பிறந்த தேதி : மே 24, 1819
இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 
மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும் 
வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம்
63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை
பிரிட்டனை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விட அதிகம்
ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட
ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

மே 25, 2010 at 5:58 முப பின்னூட்டமொன்றை இடுக

ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் சொல்லிக்கொடுக்கும் பயனுள்ள தளம்

ஆங்கில வார்த்தைகள் சிலவற்றை அல்ல, பலவற்றை நாம் தவறாகத்
தான் உச்சரித்துக்கொண்டிருக்கிறோம் இப்படி இருக்க ஆங்கில
வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லித்தர ஒரு
அருமையான இணையதளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

படம் 2

ஆங்கில மொழி நாட்டுக்கு நாடு உச்சரிக்கும் விதம் வேறுபட்டிருப்பது
நாம் அறிந்தது தான் ஒவ்வொரு நாட்டிலும் ஆங்கில மொழி
வார்த்தைகளை உச்சரிப்பு விதம் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
ஆங்கில மொழியின் உண்மையான வார்த்தை உச்சரிப்பை நாம்
இணையதளம் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.வேலைக்கு
சேர இருக்கும் நண்பர்களுக்கும் , மாணவர்களுக்கும் , ஆங்கிலப்
புலமை பெற்றவர்களுக்கும் சில வார்த்தை எப்படி உச்சரிக்க வேண்டும்
என்ற சந்தேகம் இருக்கலாம் அனைத்துக்கும் தீர்வாக இந்த
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.inogolo.com
இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி உள்ள
கட்டத்திற்க்குள் எந்த வார்த்தைக்கான உச்சரிப்பு வேண்டுமோ அதை
கொடுத்தபின் seaech names என்ற பொத்தனை அழுத்தவும் சில்
நொடிகளில் நாம் தேடிய வார்த்தையைப்பற்றிய விபரங்களுடன் அதை
எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் படம் 2-ல் இருப்பது போல்
காட்டப்படும். இதில் இருக்கும் play என்ற ஐகானை சொடுக்கி நாம்
எப்படி உச்சரிக்க வேண்டும் என்று ஆன்லைன் மூலம் கேட்டுக்
கொள்ளலாம்.உதாரணமாக நாம் india என்ற வார்த்தையை கொடுத்து
சோதித்துப்பார்த்துள்ளோம். கண்டிப்பாக இந்தத் தளம் அணைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
தன் தாய் மொழி வளர்ச்சிக்காக ஒருவன் செய்யும் உதவி தன் தாய்க்கு செய்யும் உதவி போன்றதாகும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.சூரிய குடும்பத்தின் மிகச்சிறிய கிரகம் எது ?
2.மின் விசிறியை கண்டுபிடித்தவர் யார் ?
3.நைஜீரியாவின் தலைநகரம் எது ?
4.’கதக்’ என்பது எந்த மாநிலத்தின் நடனமாகும் ?
5.ஏழைகளின் சஞ்சீவி எனப்படுவது எது ?
6.’மாலவன் குன்றம்’ எனப்படுவது எது ?
7.புதன் சூரியனை சுற்ற எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது ?
8.ஈக்களுக்கு பிடிக்காத நிறம் எது ?
9.நேபாள நாட்டு நாடாளுமன்றத்தின் பெயர் ?
10.சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெடை சமர்ப்பித்தவர் யார் ?

பதில்கள்:
1.புளுட்டோ, 2.ஆய்லர் எஸ்.வீலர், 3.லாகோஸ்,
4. உத்திரபிரதேசம்,5.பூண்டு, 6.திருப்தி,7.88 நாட்கள்,
8.நீலம்,9.நேஷனல் பஞ்சாயத் ,10.  ஆர்.கே.சண்முகம்

இன்று மே 23 

பெயர் : ஹென்ரிக் இப்சன் , 
பிறந்த தேதி : மே 23, 1906
நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்.
நார்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும்,கவிஞரும் 
ஆவார்.ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர்.
இவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது. 

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

மே 23, 2010 at 8:04 பிப 6 பின்னூட்டங்கள்

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2010
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: