செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்

ஏப்ரல் 2, 2010 at 9:34 பிப 21 பின்னூட்டங்கள்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா
சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன்
முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்களுக்கு முன்
செவ்வாய் கிரகத்திலிருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான
தெளிவான படங்களை வெளியிட்டு உள்ளனர் இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.

பல மில்லியன் டாலர் அளவு பணத்தை கிரகங்களைப்பற்றி
ஆராய்ச்சி செய்வதற்காக பயன்படுத்துகின்றனர். இதன் மூலம்
பல கிரகங்களைப்பற்றிய தகவல்களை அறிவியல் பூர்வமாக
தெளிவாக விளக்கியுள்ளனர். இதில் ஒரு பெரிய வேடிக்கை
என்னவென்றால் இவர்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து
செவ்வாய்கிரகம் சிவப்பு என்று அறிவித்தனர். ஆனால் பல
நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் வான்வெளியில்
உள்ள செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு என்று அறிவித்துள்ளனர்
( இடைக்காட்டு சித்தர் தன் நூலில் கிரகங்களை பற்றி மேலும்
சிறப்பாக கூறியுள்ளார் ஆராய்ச்சியாளர்கள் நேரம் இருந்தால்
எங்கும் செல்லாமல் கிரகங்களை பற்றிய அனைத்து விபரங்களையும்
இந்த நூலில் இருந்து பெறலாம் ). செவ்வாய் கிரகத்திலிருந்து
எடுக்கப்பட்ட சிறப்பு படங்களை நாசா வெளியிட்டுள்ளது. அதன்
படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

படங்கள் நன்றி நாசா

வின்மணி இன்றைய சிந்தனை
எத்தனை முறை நம்மை திட்டினாலும் நம்மிடம் அதிகம்
பாசமுள்ளவள் தான் நம் தாய். ஒரு முறை கடவுள் கொடுக்கும்
இந்த பந்தத்தை எவனோ கொடுக்கும் ஒரு சில காசுக்காக நாடு
விட்டு சென்றால் நீ கண்டிப்பாக அதிர்ஷ்டம் இல்லாதவன் தான்.

TNPSC  Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.குளோரினை கண்டுபிடித்தவர் யார் ?
2.இந்தியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரின் பெயர் என்ன ?
3.சக்தியின் அலகு யாது ?
4.உலகிலே மிக உயரமான மலைத்தொடர் எது ?
5.சூரியனின் நான்காவது கிரகம் எது ?
6.உலககோப்பையில் 23 சிக்சர்கள் அடித்த வீரர் யார் ?
7.உலகிலே பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்
  நிறுவனம் எது ?
8.முதன்முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்ட திரைப்படம் எது?
9.மிக நீண்ட ஆயுளை உடைய விலங்கு எது ?
10.ஒரு நாளில் இதயம் எத்தனை முறை துடிக்கும் ?
பதில்கள்
1.k.ஷீல்லி , 2.பரம், 3.வாட் , 4.இமாலயம்-29,028 அடி,
5.செவ்வாய் , 6.கங்குலி , 7.இந்தியன் இரயில்வே,
8.ராஜா அரிச்சந்திரா 9.ஆமை , 10. 1,00,000

இன்று ஏப்ரல் 2 
பெயர் : வ. வே. சுப்பிரமணியம் ,
பிறந்த தேதி : ஏப்ரல் 2, 1881
இந்திய விடுதலைக்காக முதன்மை
பங்காற்றியவரும், சிறந்த இலக்கியவாதியும்,
மொழி பெயர்ப்பாளரும் ஆவார். 1922ல்
சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற
கல்வி நிலையத்தை தொடங்கினார். தமிழ் குருகுலத்தில்
அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில்
நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும்,
உடல் வலிவுப் பயிற்சிகளும் போதித்தார். 

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

TNPSC  Questions Group 1,Group 2,Group 3,Group 4

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

சுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை கண்டுபிடிக்கலாம். ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.

21 பின்னூட்டங்கள் Add your own

 • 1. grgpdy  |  2:38 முப இல் ஏப்ரல் 3, 2010

  நல்ல அறிவியல் பூர்வமான தகவல்களை தினமும் வழங்கிவரும் வின்மணிக்கு எனது நன்றிகள். இன்றைய சிந்தனை மிகவும் நன்றாக உள்ளது. தாய் மண்ணின் மீது தங்களுக்கு உள்ள பற்றையும், பாசத்தையும் தெளிவுபடுத்துகின்றது. வாழ்த்துக்கள் நண்பரே!

  வாழ்க வளமுடன்
  ஜிஆர்ஜி
  புதுவை.

  மறுமொழி
 • 3. charles  |  9:30 முப இல் ஏப்ரல் 3, 2010

  You too winmani, sir? what is this bluff, sir,,சித்தர்கள் ஏதொ குறுட்டாம் போக்க்ல் செவ்வாய் கிரகம் சிவப்பு நிறம் என்று அடித்துவிட்டு சென்றார்கள் Mars is a colourful world
  http://www.damianpeach.com/marscolour.htm ,,,
  It not reddish as what we say,, it orangish mostly ,,that too due to RBG colour shading,,சித்தர்களைப்போல் இல்லாமல் அறிவியல் மூலம் செவ்வாயில் தண்ணீர் இருப்பது
  கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது,,அதில் ஆக்ஸிஜன் இருப்பது (குரைவான) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
  உண்மையில் செவ்வாய் பலவகையான நிறங்களை கொண்ட நிலமாய் இருக்கிறது என்பதுதான் உண்மை

  மறுமொழி
  • 4. winmani  |  4:04 பிப இல் ஏப்ரல் 3, 2010

   நண்பருக்கு ,
   செவ்வாய் கிரகம் மட்டும் சிவப்பு என்று சொல்லவில்லை அனைத்து கிரகங்களின் நிறமும் தெளிவாக சொல்லியுள்ளனர். தண்ணீர் இருக்கிறதா அல்லது இல்லையா என்று சித்தர்கள் சொல்லவில்லை.அதோடு பல ஆண்டுகளுக்கு முன்னரே இன்று
   உள்ள காலநிலைகளை கணித்துள்ளனரே அதுவும் பொய்தானா ? மருத்துவ உலகிற்கு சித்தர்கள் செய்த சேவையை நாம் மறந்தால் நாம் மனிதர்களாக இருக்க முடியாது. எந்த விளம்பரமும் இல்லாமல் ஒரே ஒரு ஆடையுடன் உலகத்து மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தது அவர்கள் குற்றமா ? இப்போது நீங்கள் சொல்லும் விஞ்ஞானியின் பக்கம் வருவோம் இவர்கள் முதலில் பூமி உருண்டை என்றனர் அதன் பின் கோளம் என்றனர்.இப்போது சொல்ல்லுங்கள் யார் குருட்டாம்போக்குல அடிக்கிறார் என்று…செவ்வாய் கிரகம் சிவப்பு என்று இந்த முகவரியை சொடுக்கிப்பார்த்தால் தெரியும் ..
   http://www.universetoday.com/guide-to-space/mars/color-of-mars/

   நன்றி

   மறுமொழி
 • 5. s.krishnamoorthy  |  12:54 பிப இல் ஏப்ரல் 3, 2010

  நாஸாவின் ஆராய்ச்சியின் தெளிவான படங்களை நன்றாகக் கொடுத்துளீர்கள்
  நன்றி

  மறுமொழி
 • 6. winmani  |  4:17 பிப இல் ஏப்ரல் 3, 2010

  @ s.krishnamoorthy நன்றி

  மறுமொழி
 • 7. விமலன்  |  9:27 பிப இல் ஏப்ரல் 3, 2010

  வாழ்த்துக்கள் நண்பரே!

  வாழ்க வளமுடன்

  மறுமொழி
 • 9. ramanans  |  3:13 முப இல் ஏப்ரல் 4, 2010

  மிக நல்ல பதிவு. இன்றைக்கு விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பதையெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ச் சித்தர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கோவில்களில் நவகிரக சன்னதிகளை நிர்மாணித்ததுடன், அவற்றில் சூரியனை மையமாக வைத்து பிற கிரகங்கள் இயங்குவதையும் வடித்து வைத்துள்ளனர்.

  இன்று போன்று ராக்கெட் போன்ற வசதிகள் ஏதும் இல்லாத காலத்து அவர்கள் அதனை எப்படி அறிந்தனர்? சந்திரன் நீர்க்கோள், சனியின் நிறம் நீலம், புதன் இருளும் பகலும் கலந்தது உட்பட பல வானியல் உண்மைகளை அவர்களால் எப்படிக் கூற முடிந்தது?

  ’அறிவியல்’ என்பது நாம் அறிந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அவற்றைப் பற்றி மட்டுமே பேசுவது. ஆனால் சித்தர்கள் கூறும் இந்த உண்மைகள் அறிவியலுக்கு அப்பாற்பட்டது. இந்த உண்மைகளை அறிந்து கொள்ள விஞ்ஞானத்திற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ தெரியவில்லை?

  நல்ல கட்டுரைக்கு நன்றி விண்மணி சார்

  மறுமொழி
 • 11. Punitha  |  6:24 முப இல் ஏப்ரல் 5, 2010

  அருமையான புகைப்படங்கள். அறிதானதும் கூட. நன்றி !

  மறுமொழி
 • 13. a.j.rajaseker  |  6:43 முப இல் ஏப்ரல் 5, 2010

  தினம் தோறும் நல்ல தகவல்கள் குறிப்பாக பயனுள்ள தகவல்களை தந்துதவுகிறீர்கள். தரமான தகவல்களை நாள் தவறாமல் தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள் பலவும். தொடரட்டும் தங்களது இந்த பயனுள்ள சேவை.

  அன்புடன்
  அ.ஜெ.ராஜசேகர்
  ரேடியோ ஹலோ 106 .4 எப்.எம்.
  திருநெல்வேலி

  மறுமொழி
  • 14. winmani  |  3:07 பிப இல் ஏப்ரல் 5, 2010

   @ அ.ஜெ.ராஜசேகர் மிக்க நன்றி

   மறுமொழி
 • 15. micro  |  10:50 பிப இல் ஏப்ரல் 5, 2010

  “இந்த பந்தத்தை எவனோ கொடுக்கும் ஒரு சில காசுக்காக நாடு
  விட்டு சென்றால் நீ கண்டிப்பாக அதிர்ஷ்டம் இல்லாதவன் தான்”

  Hi,
  This is not fare that always blaming people who working in abroad. We are more loving our parents and relatives. Today the present situation can u go to Hospital and ask i m loving my mother more can u give treatment. Each and every step u need money.
  We are not enjoying foreign life. we are sleeping on the nails. Please stop telling people who ever with in mother land only loves their country. People who stay there in India only corrupting and spoiling all the good things. Not us.

  மறுமொழி
 • 16. winmani  |  6:46 முப இல் ஏப்ரல் 6, 2010

  @ micro
  இந்தியாவில் செய்யும் வேலைக்கு பணம் கொடுப்பதில்லையா ? அந்நிய நாடுகளில் கொடுக்கும்
  பணத்தை விட குறைவு தான் ஆனாலும் என் தாய் , தந்தை, சொந்தம் பந்தம் என்று வாழும் இந்த வாழ்க்கை
  எந்தப்பிறவியில் நமக்கு கிடைக்கும். தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் காசு இல்லாமல் மருத்துவம் பார்ப்பதில்லை ஆனால் நாம் நம் தாயின் அருகில் இருந்து அன்பான வார்த்தை பேசினாலே நோய் வராது என்று தான் சொல்கிறோம்.
  அன்று பத்துமாதம் என்னை கண்ணின் மணியைப் போல் பாதுகாத்த என் அன்னைக்கு நான் கொடுக்கும் பணம் மட்டும் எப்படி மகிழ்ச்சியை கொடுக்க முடியும். மேல்படிப்பு படித்து மிகப்பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் செய்த நம் பாரத மாணவர்கள் பல பேர் இன்னும் அரசுத்துறைகளில் குறைவான சம்பளத்தில் வேலை பார்க்கின்றனரே ? எத்தனை காலம் தான் லஞ்சம் அரசியல்வாதி சரியில்லை என்று சொல்லப்போகிறோம் நாம் இந்திய நாட்டில் தானே பிறந்தோம் நமக்கு நம் தேசத்தை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணம் எப்போது தான் வரும். ஒருவர் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினால் வெகுவிரைவில் நாடு லஞ்சம் இல்லாத பூமியாக மாறலாம் அல்லவா ? இதுவும் ஒர் சீர்திருத்தம் தான். தங்களின் பெரைக்கூட வெளியீட வில்லை எங்கள் சிந்தனை உங்களை பாதித்து இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள், பாரத நாட்டில் மருத்துவம் படித்துவிட்டு பணத்தை எதிர்பாக்காமல் கிராமத்தில் சென்று மருத்துவம் செய்கிறானே அவனும் பாரதத்தாயின் மகன் தானே அவன் காலடி பணிகிறோம்.

  மறுமொழி
 • 17. இளங்குமரன்  |  2:40 முப இல் ஏப்ரல் 10, 2010

  //எத்தனை காலம் தான் லஞ்சம் அரசியல்வாதி சரியில்லை என்று சொல்லப்போகிறோம் நாம் இந்திய நாட்டில் தானே பிறந்தோம் நமக்கு நம் தேசத்தை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணம் எப்போது தான் வரும். ஒருவர் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினால் வெகுவிரைவில் நாடு லஞ்சம் இல்லாத பூமியாக மாறலாம் அல்லவா ?//

  ஒருவர் கொடுப்பதை நிறுத்தினால் போதாது பிறர் கொடுப்பதையும் தடுக்க வேண்டும். நான் தஞ்சாவூரில் கையூட்டு கொடுக்காததால் என்னுடைய வேலைகள் இழுக்கடிக்கப்பட்டுக் கொண்டுள்ளன. ஆனாலும் போராடிக் கொண்டிருக்கின்றேன். ஆனாலும் கையூட்டு கொடுக்க மாட்டேன்.

  மறுமொழி
  • 18. winmani  |  3:38 முப இல் ஏப்ரல் 10, 2010

   @ இளங்குமரன் நன்றி

   மறுமொழி
 • 19. p.vjayasudha  |  6:49 முப இல் செப்ரெம்பர் 23, 2010

  thanks sir

  மறுமொழி
 • 20. p shanmugaraj  |  3:40 பிப இல் ஜனவரி 21, 2011

  very intresting news 7useful

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,729 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2010
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: