Archive for ஏப்ரல் 3, 2010
ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.
சில இணையதளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது
பல நல்ல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருக்கலாம் அந்த
தகவல்களை பிடிஎப் ஆக மாற்றும் வசதி இருக்காது ஆனால் நாம்
அப்படி பட்ட சில முக்கியமான இணையதளங்களை சில நிமிடங்களில்
பிடிஎப் கோப்பாக மாற்றலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.

படம் 1
இணையதள முகவரி : http://www.pdfmyurl.com
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நாம்
பிடிஎப் ஆக சேமிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை கொடுக்க
வேண்டியது தான். கொடுத்து முடித்ததும் “ P ” என்ற படத்தை அழுத்தி
நம் கணினியில் பிடிஎப் ஆக சேமித்துக்கொள்ளலாம். பல இணைய
தளங்களில் இந்த வசதி இருந்தாலும் நம் தமிழில் உள்ள அத்தனை
பக்கங்களையும் சரியாக தமிழில் எந்த பிழை செய்தியும் இல்லாமல்
பிடிஎப் ஆக மாற்ற இந்த இணையதளம் உதவுகிறது.
வின்மணி இன்றைய சிந்தனை
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண்
பெற்ற சிறந்த மாணவரை தேர்ந்தெடுக்க. 90 % விழுக்காட்டுக்கு
மேல் எடுத்த மாணவர்களை நேரில் அழைத்து நேர்முக கேள்வி
கேட்டு சிறந்த மாணவரை தேர்ந்தெடுத்தால் அது மிகச்சிறப்பாக
இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1. இரத்தம் வடிதல் போன்றவற்றால் குறையும் விட்டமின் எது ? 2. பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார் ? 3. கம்ப்யூட்டரின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ? 4. சக்தி தரும் வெப்பத்தின் அழகு ? 5. உலகிலே மிக உயரமான அருவி எது ? 6. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் எது ? 7. உலககோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ? 8. தெற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ? 9. வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை எது ? 10. மூளையில் உள்ள நீயூரான்களின் எண்ணிக்கை என்ன ? பதில்கள் 1.விட்டமின் கே , 2.பிராண்ட், 3.சார்லஸ் பாபேஜ் , 4.கலோரி, 5. ஏஞ்சல் அருவி ( வெனிசுலா), 6. வியாழன், 7. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 8. சென்னை 9. மைனா 10. 1400
இன்று ஏப்ரல் 3PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்பெயர் : மார்லன் பிராண்டோ , பிறந்த தேதி : ஏப்ரல் 3, 1924 மார்லன் பிராண்டோ ஒரு திரைப்பட நடிகர். த கோட்ஃபாதர் உட்பட பல படங்களில் நடித்தவர். இரு தடவை ஆஸ்கார் விருது வென்றவர். அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் பிறந்தவர். 2004 இல் எண்பது வயதில் மரணமானார்.
