Archive for ஏப்ரல் 25, 2010
நாசா வெளியீட்டுள்ள சூரியனின் பிரேத்யேகமான படம் மற்றும் வீடியோக்கள்
அமெரிக்காவின் நாசா வான்வெளி ஆராய்ச்சி நிலையம் செயற்க்கைக்
கோள் உதவியுடன் சூரியனின் வெவ்வெறு விதமான படம் மற்றும்
வீடியோக்களை வெளியீட்டுள்ளது இதைப்ப்ற்றிய சிறப்பு பதிவு.
வெகுவிரைவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சூரியனின்
அரியவகை புகைப்படம் மற்றும் வீடியோவை செயற்கைகோள்
உதவியுடன் எடுக்கப்பட்டு நேற்று வெளிவந்துள்ளது. சூரியனின்
காட்சிகளைப் பார்க்கும் போது சற்றே மெய்சிலிர்க்க வைக்கிறது.
அறிவியல் பூர்வமான காட்சிகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளதான்
வேண்டும் என்றாலும் சாதாரணமாக சூரியனிடம் கூட நெருங்க
முடியாத அளவு வெப்பம் இருந்தும் அத்தனையும் தாண்டி நாசா
விஞ்ஞானிகள் அதிநவீன சிறப்பு கேமிரா ஒன்றை வடிவமைத்ததோடு
இல்லாமல் வெற்றிகரமாக அனுப்பி எதிர்பார்த்தபடி வெற்றியும்
பெற்றிருக்கின்றனர். இந்த நவீன கேமிராவால் சூரியனை சுற்றி
எடுக்கப்பட்ட படம் மற்றும் விடியோக்களை இத்துடன்
இணைத்துள்ளோம்.
படம் நன்றி நாசா
வின்மணி சிந்தனை நாம் வறுமையில் இருக்கும்போது கடவுள் நம்முடன் இருக்கிறார். நாம் பணக்காரர் ஆக இருக்கும் போது கடவுளைத் தேடி எங்கெங்கொ அலைகிறோம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சிந்துசமவெளி மக்கள் அறியாத மிருகம் எது ? 2.இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட இடம் ? 3.இந்திய இராணுவத் தினம் என்று கொண்டாடப்படுகிறது ? 4.சர்வதேச நீதிமன்றத்தின் தலமையகம் எங்குள்ளது ? 5.இந்தியாவின் முப்படைத் தலைவர் யார் ? 6.பாலே நடனத்தை கண்டுபிடித்தது எந்த நாடு ? 7.3டி சினிமா எப்போது அறிமுகமானது ? 8.ஒலிம்பிக் போட்டியில் தீபம் ஏற்றும் நாடு எது ? 9.மனித இரத்தங்களில் அபூர்வமானது ? 10.ரப்பர் டயரைக் கண்டுபிடித்தவர் யார் ? பதில்கள்: 1. குதிரை,2.கொல்கத்தா, 3.ஜனவரி 15, 4.தி ஹேக் , 5.குடியரசுத் தலைவர்,6.பிரான்ஸ் 7. 1955, 8.கிரேக்கம்,9. A-H, 10.டன்லப்
இன்று ஏப்ரல் 25பெயர் : மார்க்கோனி பிறந்த தேதி : ஏப்ரல் 25, 1874 வானொலியைக் கண்டு பிடித்தவர். "வானொலியின் தந்தை" எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை Karl Ferdinand Braun இடன் இணைந்து பெற்றார்.1890 மார்க்கோனிக்குக் கம்பியிலாத் தொலைத் தொடர்பில் ஆர்வம் ஏற்பட்டு ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். இருபத்தி ஒன்றாம் வயதில் 1895 முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில் 'திசைதிரும்பும் மின்கம்பம் [Directional Antenna] மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றியும் பெற்றார்.