Archive for ஏப்ரல் 22, 2010

நமக்கு பிடித்த இணையதளங்களை எளிதாக ஆன்லைன் மூலம் சேமிக்கலாம்

தினமும் பல இலட்சம் இணையதளம் வந்து கொண்டுதான் இருக்கிறது
இதில்  நமக்கு பிடித்த இணையதளங்களை ஆன்லைன் மூலம் எளிதாக
எப்படி சேமிக்கலாம் என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.

நண்பர் புதுவை சிவா ஆன்லைன் மூலம் இணையதளங்களை சேமிக்க
ஏதாவது வழி இருக்கிறதா என்று கேட்டிருந்தார் தேவையான கேள்வியை
சரியான நேரத்தில் கேட்டிருக்கிறார் நன்றி . நாம் பார்க்கும் பல இணைய
தளங்களில் சில இணையதளங்களை நம் கணினியில் சேமித்து
வைப்பதை விட ஆன்லைன் மூலம் சேமித்து வைத்தால் நாம் எங்கு
சென்றாலும் இந்த இணையதளங்களுக்கு எளிதாக செல்லலாம் நமக்கு
உதவுவதற்க்காக ஒரு இணையதளம் இருக்கிறது.

இணையதள முகவரி : http://www.transferr.com

படம் 2

படம் 3

இந்த இணையதளத்திற்க்கு சென்று Register என்பதை அழுத்தி படம் 1-ல்
காட்டியபடி ஒரே நிமிடத்தில் உங்கள் கணக்கை உருவாக்கி
கொள்ளலாம். உங்கள் கணக்கை உருவாக்கி முடித்ததும் உங்கள்
பயனாளர் பெயரையும் கடவுச்சொல்லையும் கொடுத்து உள்ளே
செல்லவும். அடுத்து 1 முதல் 15  வரை கட்டங்கள் கொடுக்கப்
பட்டிருக்கும் இதில் உங்களுக்கு பிடித்த எண்ணின் மேல் வைத்து
சொடுக்கி படம் 2 -ல் காட்டியபடி இனையதளத்துக்கான
தலைப்பையும் முகவரியையும் கொடுத்து சேமித்துக்கொள்ளவும்.
இப்படி உங்களுக்கு பிடித்த இணையதளங்களை பிடித்த எண்ணில்
சேமித்துக் கொள்ளலாம். படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது இனி நாம்
எங்கு சென்றாலும் இந்த இணையதளத்தில் நம் கணக்கை திறந்து
நாம் சேமித்து வைத்த இணையதளங்களுக்குள் எளிதாக செல்லலாம்.
கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
அதிக கணினி அறிவு உள்ளவன் பணிவாக இருப்பான் ஆனால்
அரை குறை படித்தவன் சும்மா இருக்காமல் படம் போட்டுக் கொண்டே
காலத்தை நகர்த்துவான் என்றாவது ஒரு நாள் உண்மை வெளிச்சத்தில் வரும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து
 வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சென்னை வானொலியில் முதலில் ஒலிபரப்பான பாடல் எது?
2.புக்கர் பரிசு எதற்க்காக வழங்கப்படுகிறது ?
3.இராமாயணத்தை வடமொழியில் இயற்றியவர் யார் ?
4.கீதாஞ்சலியின் ஆசிரியர் யார் ? 
5.புரோட்டீன்களில் காணப்படும் தனிமம் எது ? 
6.காஸ்பியன் கடல் எந்த நாட்டில் உள்ளது ? 
7.உலகமக்கள் நல்வாழ்வு அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது?
8.மழை நீரின் வேகம் என்ன ?
9.பாலில் உள்ளதைவிட அதிகமாக கால்சியம் உள்ள காய்கறி எது?
10.தமிழக அரசின் சின்னம் எது ?
பதில்கள்:
1.திருவடி சரணம்,2.இலக்கிய சேவைக்கு, 3.வால்மீகி, 4.இரவீந்தரநாத் தாகூர்,
5.நைட்ரஜன்,6.ஈரான்,7.ஜெனிவா, 8.மணிக்கு 7 மைல், 9. வெங்காயம், 10.கோபுரம்

இன்று ஏப்ரல் 22 
பெயர் : இம்மானுவேல் கண்ட் 
பிறந்த தேதி : ஏப்ரல் 22, 1724
ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர். இவர் கிழக்குப் பிரஷ்யாவின்,
கோனிக்ஸ்பர்க் (இன்றைய ரஷ்யாவிலுள்ள கலினின்கிராட்) என்னும்
இடத்தைச் சேர்ந்தவர். நவீன ஐரோப்பாவின், செல்வாக்கு மிக்க 
சிந்தனையாளராகக் கருதப்படுகிறார். இவரது முதலாவது தத்துவ நூல்
(Thoughts on the True Estimation of Living Forces) 
1749 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

ஏப்ரல் 22, 2010 at 6:05 பிப 19 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,746 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2010
தி செ பு விய வெ ஞா
« மார்ச்   மே »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: