Archive for ஏப்ரல் 30, 2010
கூகுள் ஜீடாக்- சாட்டில் Autoreply செய்துவைக்க புதுமையான வழி
கூகுள் ஜீடாக்-ல் நண்பருடன் சாட் செய்து கொண்டிருப்போம் சில
நேரங்களில் நாம் வெளியே சென்றதும் நண்பர் ஏதாவது தகவல்
கொடுத்தால் Auto Reply செய்துவைத்தால் அவருக்கு உடனடியாக
தகவல் கொடுக்கப்பட்டுவிடும் எப்படி செய்யலாம் என்பதைப்
பற்றித்தான் இந்த பதிவு.

படம் 1
ஜீடாக்-ல் ஸ்டேட்டஸ் மெசேஸ் கொடுத்து வைக்கலாம் சில
நேரங்களில் நாம் பிஸியாக இருப்பதாக வைத்திருப்போம் அல்லது
பாட்டு கேட்டுகொண்டிருக்கிறோம் என்று பல Status மேசேஸ்
கொடுத்து வைத்திருப்போம் இனி அதையும் தாண்டி நாம் ஜீடாக்
ஆன் செய்துவிட்டு வெளியே சென்றாலும் நமக்கு ஜீடாக்-ல் யாராவது
தொடர்பு கொண்டால் உடனடியாக அவருக்கு என்ன பதில் கொடுக்க
வேண்டும் என்பதை முதலிலே Autoreply கொடுத்து வைக்கலாம்
இதற்க்காக ஒரு சிறப்பு மென்பொருள் உள்ளது இதை இந்த முகவரியில்
இருந்து தரவிரக்கிக்கொள்ளலாம்.
இணையதள முகவரி : http://gtalkautoreply.codeplex.com
இந்த மென்பொருளை தரவிரக்கி இன்ஸ்டால் செய்து Run செய்ததும்
படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும் இதில் நம் ஜீமெயில்
நுழைவுச்சொல்லையும் கடவுச்சொல்லையும் கொடுத்து அடுத்ததாக
Message என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்க்குள் நாம் என்ன
Autoreply செய்தி கொடுக்கவேண்டுமோ அதை கொடுத்தபின்
Save and Enable Autoreply என்ற பொத்தானை அழுத்தி சேமித்து
விட்டு வெளியே வரலாம் இனி உங்களை ஜீடாக்-ல் யாராவது தொடர்பு
கொண்டால் உடனடியாக அவருக்கும் நாம் கொடுத்து வைத்திருக்கும்
Autoreply சென்றுவிடும்.கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை ஆபத்து காலத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்யும் நபருக்கு பெயர் தான் “ நண்பன் “ நாம் சென்ற பின் நம்மை பற்றி புறங்ககூறுபவன் உண்மையான நண்பன் இல்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும் ? 2.நதிகள் இல்லாத நாடு எது ? 3.சாணத்திலிருந்து கிடைக்கும் வாயு என்ன ? 4.சோகத்தை குறிக்கும் ராகம் எது ? 5.காசநோய் எந்த உறுப்பை பாதிக்கும் ? 6.ஈரானின் பழைய பெயர் என்ன ? 7.யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும் ? 8.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ? 9.இந்தியாவின் மிகச்சிறிய வாக்குச்சாவடி எந்த மாநிலத்தில் உள்ளது ? 10.லில்லி பூக்களை உடைய நாடு எது ? பதில்கள்: 1.செவ்வாய் கிரகம்,2.சவூதி அரேபியா, 3.மீத்தேன், 4.முகாரி ,5.நுரையீரல்,6.பாரசீகம்,7. 200 லிட்டர், 8.55 மொழிகளில்,9.அருணாசலப்பிரதேசம், 10.கனடா
இன்று ஏப்ரல் 30பெயர் : தாதாசாஹெப் பால்கே, பிறந்த தேதி : ஏப்ரல் 30, 1870 தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind Phalke)இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார்.பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.அவருடைய நினைவாக தாதாசாஹெப் பால்கே விருது நிறுவப்பட்டது.