ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை தேடித்தர புதுமையான தேடுபொறி
செப்ரெம்பர் 27, 2010 at 7:31 பிப பின்னூட்டமொன்றை இடுக
இணையத்தில் படங்களை தேடவேண்டும் என்றால் நாம் தேடும்
படங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை இந்தக் குறையைப்
போக்குவதற்காகவும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை
எளிதாக தேடவும் புதிதாக ஒரு தேடுபொறி வந்துள்ளது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
கூகுளில் சென்று தேடினாலும் நாம் தேடும் படங்களைத் தவிர மற்ற
அனைத்து வகையான படங்களை காட்டும் இதே நிலமைதான் அனைத்து
தேடுபொறிகளிலும், இந்தக் குறையை போக்குவதற்காக ஒரு தளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.kalooga.com

படம் 2
இந்தத்தளத்திற்குச் சென்று நாம் தேட விரும்பும் படத்தின் பெயரை
கொடுத்து தேடியதும். நாம் தேடும் படத்துடன் தொடர்புடைய படங்களை
சேர்த்து நமக்கு காட்டும் இது பார்ப்பத்ற்கு சிறிய சேவை போல்
தெரிந்தாலும் பல நேரங்களில் நாம் தேடும் சில வகையான
படங்களுடன் தொடர்புடைய படங்களை கண்டுபிடிப்பது மிகவும்
எளிதாக இருக்கிறது.உதாரணமாக நாம் Sun rise என்று கொடுத்து
தேடிப்பார்த்தோம் கிடைக்கும் முடிவை படம் 2-ல் காட்டியுள்ளோம்.
கூகுளிலும் தொடர்புடைய படங்களை தேடும் சேவை இருந்தாலும்
இந்தத்தளம் மூலம் தொடர்புடைய படங்களை தேடும் வாசகர்கள்
எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது ஏனென்றால்
50 மில்லியனுக்கும் மேல் புகைப்பட கேலரிகளை கொண்டுள்ளது.
இனி நமக்கும் தொடர்புடைய படங்களை தேடுவது கண்டிப்பாக
எளிதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை நல்லவர்களுக்கு மட்டும் தான் சோதனை வரும், தீயவர்களுக்கு ஒருபோதும் சோதனை வருவதில்லை, சோதனைக்கு உள்ளாகுபவர்கள் தான் வெற்றியை சுவைக்கின்றனர்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.ஆப்பிரிக்காவில் உள்ள உயரமான மலைச்சிகரம் எது ? 2.உலகிலேயே மிகவும் கசப்பான பொருள் எது ? 3.பக்ராநங்கல் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? 4.உலக்காடுகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது ? 5.வைரத்திற்கு அடுத்தபடியாக கனம் உள்ள மிகக்கடினமான கல் எது ? 6.பூமி நீள்வட்டமாக இருப்பது ஏன் ? 7.அணு உட்கருவின் ஆரம் எவ்வளவு ? 8.சிமெண்டைக் கண்டுபிடித்தவர் யார் ? 9.முட்டை அடைகாக்கப்பட்டு கோழிக் குஞ்சு வெளிவர எவ்வளவு நாட்கள் ஆகின்றன ? 10.இந்தியாவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவிகிதம் காடுகள் உள்ளது ? பதில்கள்: 1.கிளிமாஞ்சரோ, 2.டினடோனியம் சக்கரைடு,3.சட்லஜ், 4.மார்ச் 21-ம் தேதி, 5.சபையர்,6.மையம் நோக்கிச் சுற்றும் விசை,7.10.13 செ.மீ, 8.ஜோசப் ஆஸ்ப்டின்,9.21 நாட்கள், 10.22.8 சதவிகிதம்.
இன்று செப்டம்பர் 27பெயர் : பகத் சிங், பிறந்த தேதி : செப்டம்பர் 27, 1907 இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மாக்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படுகிறார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை தேடித்தர புதுமையான தேடுபொறி.
Subscribe to the comments via RSS Feed