Archive for செப்ரெம்பர் 20, 2010
எந்த நாட்டின் அலைபேசிக்கு பேசினாலும் நிமிடத்திற்கு 1C சென்ட்
நம் நாட்டில் இருந்து எந்த நாட்டின் அலைபேசிக்கு பேசினாலும்
நிமிடத்திற்கு 1C என்று அறிவித்துள்ளது ஃபிரிங் இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.
இணையத்தில் இருந்து தொலைபேசிக்கு பேச வேண்டும் என்றால்
அதிகமான மக்கள் நாடுவது ஸ்கைப் மட்டும் தான் ஆனால்
இப்போது ஸ்கைப் -க்கு நேரடியாக சவால் விடும் வகையில் ஃபிரிங்
என்ற நிறுவனம் உலகத்தின் எந்த நாட்டு அலைபேசியில் இருந்து
எந்த நாட்டு அலைபேசிக்கு பேசினாலும் நிமிடத்திற்கு 1C சென்ட்
அளவில் தான் கட்டணம் வசூலிக்கின்றனர். ஏற்கனவே கூகுள்
வாய்ஸ் -ல் இருந்து எப்படி நாம் முன்னுக்கு வரலாம் என்று
நினைத்துக்கொண்டிருந்த ஸ்கைப்-க்கு அடுத்தக்கட்ட போட்டியாக
ஃபிரிங் வந்துள்ளது. ஃபிரிங் சேவையில் இருந்து இரண்டு நாட்களுக்கு
முன் அனைவரும் எதிர்பார்த்தது போலவே எந்த நாட்டிற்கு
பேசினாலும் நிமிடத்திற்கு 1C சற்றே ஆச்சர்யம் கொடுக்கும்
சேவையை அறிமுகப்படுத்தியுள்ள்னர். இதைத்தவிர இன்னும் பல
சேவைகளையும் கொடுக்கின்றனர். இதைப்பற்றிய முழுவிபரங்கள்
அறிய ஃபிரிங் தளத்தின் இந்த முகவரியைச் சொடுக்கவும்.
முகவரி : http://www.fring.com/blogs/
வின்மணி சிந்தனை நேரம் நம் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று, எப்போதும் அதை தேவையில்லாமல் விட்டுக்கொடுக்காதீர்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்திய அரசியலமைப்பின்படி ஆங்கிலம் தேசிய மொழியா ? 2.ஜெட் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார் ? 3.இந்திய உச்சநீதிமன்ற பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது என்ன ? 4.’ப்ரஷ்யா’ என்பது எந்த நாட்டினை குறிக்கும் ? 5.இந்தியாவின் பழைய தலைநகரம் எது ? 6.இந்தியாவின் பூங்காநகரம் என்று அழைக்கப்படுவது எது ? 7.தீப நகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது ? 8.உலகில் பிரமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ? 9.நார்வே நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் என்ன ? 10.ஜப்பான் நாட்டு தேசிய உடைக்கு என்ன பெயர் ? பதில்கள்: 1.இல்லை 2.பிராங் விட்டில்,3. 65 வயது, 4.ஜெர்மனி,5.கொல்கத்தா,6.பெங்களூர்,7.மைசூர், 8.சுவிட்சர்லாந்து, 9.ஸ்டோர்ட்டிங்,10.கிமோனோ.
இன்று செப்டம்பர் 20பெயர் : புரூஸ் லீ, மறைந்த தேதி : செப்டம்பர் 20, 1973 அமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன் என்ற தற்காப்புக்கலை நிபுணரும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத் தோற்றுவித்தவர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.