Archive for செப்ரெம்பர் 19, 2010
தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம்.
நம் இணையதளம் அல்லது பிளாக் -ல் வெளிவரும் பதிவுகளை
அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் தானகவே மாறும்
பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம் இதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.
உங்கள் தளத்தின் சிறப்பு செய்தியை அனைவருடன் பகிர்ந்து
கொள்ளும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை உருவாக்கலாம்
இதற்கு RSS Feed முகவரி நமக்கு தேவை. இந்த முகவரியை
பிளாக் மற்றும் வேர்டுபிரஸ்-ல் தானாக வந்துவிடும்.

படம் 1

படம் 2
படம் 1-ல் இருப்பது போல் இருக்கும். RSS Feed இல்லாதவர்கள்
http://feeds.feedburner.com இந்தத் தளத்திற்கு சென்று தங்கள்
வலைப்பக்கத்தின் முகவரியை கொடுத்து புதிதாக ஒரு RSS Feed
உருவாக்கிக்கொள்ளுங்கள். உருவாக்கிய பின் அந்த RSS முகவரியை
காப்பி செய்து கொள்ளுங்கள். அதன் பின் இந்தத்தளத்திற்கு சென்று
http://www.widgeteasy.com படம் 2 -ல் காட்டியபடி கட்டத்திற்குள்
Rss முகவரியை கொடுத்து easy என்ற பொத்தானை அழுத்தவும்
அடுத்ததிரையில் நம் பிளாக் அட்டை தயார்.

படம் 3
நாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த பிளாக் அட்டையை
இணையதளத்தில் பகிர்ந்து கொள்ள படம் -3ல் காட்டியபடி
இருக்கும் ஜாவா ஸ்கிரிப்ட் கோடிங்-ஐ நம் பிளாக்-ல் விரும்பும்
இடத்தில் கொடுக்கவும். கண்டிப்பாக நம் பதிவை பலரும் பகிர்ந்து
கொள்ளும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை உருவாக்க இந்தத்
தளம் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல். எக்காரணத்திற்காகவும் அடுத்தவரை துன்பப்படுத்தக்கூடாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவின் உயரமான அனை எது ? 2.அதிகாலை அமைதி நாடு எது ? 3.வெள்ளை நகரம் என்று அழைக்கப்படுவது எது ? 4.சாகும் வரை வளர்ச்சி அடைடையும் உயிரினம் ? 5.ஸ்ரீலங்காவின் தேசிய விலங்கு எது ? 6.நான்கு வேதங்களின் மிகவும் தொன்மையானது எது ? 7.நாட்டியத்தின் கரணங்கள் எத்தனை ? 8.பூடானின் தலைநகர் எது ? 9.பாணினி என்பவர் யார் ? 10.இந்தியாவின் வாயில் என்று அழைக்கப்படும் நகரம் எது ? பதில்கள்: 1.பக்ரா அணை 2.கொரியா,2.பாமீர் பீடபூமி,3.பெல்கிரேடு, 4.மீன்,5.சிங்கம்,6.ரிக் வேதம்,7.108,8.திம்பு, 9.வடமொழி இலக்கணம் செய்தவர்,10.மும்பை.
இன்று செப்டம்பர் 19பெயர் : கே. பி. சுந்தராம்பாள், மறைந்த தேதி : செப்டம்பர் 19, 1980 கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள். தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.