Archive for செப்ரெம்பர் 3, 2010
ஒன்றுக்கு மேற்பட்ட இணையதள முகவரியை ஒரே முகவரியாக சுருக்கலாம்.
நீளமான இணையதள முகவரியை ஒரே இணையதள முகவரியாக
சுருக்க பல இணையதளங்கள் வந்துள்ளன, ஆனால் ஒன்றுக்கும்
மேற்பட்ட இணையதள முகவரிகளை சுருக்கி ஒரே முகவரியாக
எப்படி மாற்றலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஒன்றல்ல, இரண்டல்ல நம்மிடம் எத்தனை இணையதள முகவரிகள்
இருக்கின்றதோ அத்தனையையும் சுருக்கி ஒரே இணையதள
முகவரியாக மாற்றலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://fur.ly

படம் 2
எளிமையான முகப்பு பக்கம் கொண்டு இருக்கும் இந்தத்தளத்திற்கு
சென்று நாம் சுருக்க வேண்டிய இணையதளங்களை ஒன்றன் பின்
ஒன்றாக படம் 1-ல் காட்டியபடி கொடுக்கவும். எல்லா
இணையதளங்களையும் கொடுத்தபின் Go என்ற பொத்தானை
அழுத்தவும் ஒரே நொடியில் நாம் கொடுத்திருந்த அத்தனை
இணையதளங்களின் முகவரியையும் சுருக்கி ஒரே இணையதள
முகவரியாக கொடுக்கின்றனர்.படம் – 2 -ல் காட்டப்பட்டுள்ளது.
இந்த சுருக்கப்பட்ட முகவரியை டிவிட்டரிலும் , பேஸ்புக்-லும்
இருக்கும் நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு
இணையதள முகவரியையும் சுருக்கி ஒன்றன் பின் ஒன்றாக
அனுப்புவதற்கு பதில் அனைத்து இணையதள முகவரிகளையும்
சுருக்கி ஒரே இணையதள முகவரியாக மாற்றுவதால் நேரம்
மிச்சப்படும். கண்டிப்பாக இந்தத் தகவல் நமக்கு பயனுள்ளதாக
இருக்கும். உதாரணமாக நாம் சுருக்கிய இணையதள முகவரியை
இங்கு கொடுத்துள்ளோம். http://fur.ly/1pgc
வின்மணி சிந்தனை நாம் கஷ்டப்பட்டு செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு ஒரு நல்ல பாடத்தை கற்று கொடுக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியீட்ட நாடு எது ? 2.தமிழ்நாட்டின் மலர் எது ? 3.உலகின் அகலமான நதி எது ? 4.உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ? 5.திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ? 6.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ? 7.தக்காளியின் பிறப்பிடம் ? 8.மிகச்சிறிய கோள் எது ? 9.விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ? 10.குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ? பதில்கள்: 1.போலந்து, 2.செங்காந்தள் மலர், 3.அமேசான், 4.டாக்டர். இராதாகிருஷ்ணன்,5.சென்னிமலை, 6.ரோமர், 7.அயர்லாந்து, 8.புளூட்டோ,9.தாய்லாந்து,10.மெர்குரி.
இன்று செப்டம்பர் 3பெயர் : ஜேம்ஸ் சில்வெஸ்டர், பிறந்ததேதி : செப்டம்பர் 3, 1814 19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலர்களில் ஒருவர். கெய்லியுடன் கூட்டாகக் கணித ஆய்வுகள் செய்தவர். கெய்லியைப்போல் கணிதத் துறையில் பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.