Archive for செப்ரெம்பர் 18, 2010
கணினியின் விசைப்பலகையை (Keyboard) சுத்தப்படுத்தும் சிறப்பு வீடியோ.
கணினியின் முக்கியமான உள்ளீட்டு கருவியான விசைப்பலகையை
சுத்தப்படுத்துவது எப்படி என்பதை சொல்லிக்கொடுக்கும் சிறப்பு
வீடியோவைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
எத்தனையோ முக்கியமான கடவுச்சொல்லை தட்டசுச்செய்ய நாம்
பயன்படுத்தும் கீபோர்ட் சுத்தமாக வைத்திருப்பதும் கீபோர்ட்-ல் உள்ள
ஒவ்வொரு விசைப்ப்பொத்தானும் (Key button) தட்டச்சு செய்வதற்கு
எளிதாக இருப்பதும் முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் கீபோர்ட்
சுத்தப்படுத்துவது எப்படி என்பதைப்பற்றி சிறப்பு வீடியோ ஒன்றை
இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை மனிதனின் குணம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம், ஆனால் அன்பு என்றும் எப்போதும் மாறாதது ஒரே மாதிரி இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவிலுள்ள மாநிலங்களில் மிகச்சிறியது எது ? 2.உலகின் கூரை எனப்படுவது எது ? 3.இந்தியாவில் மொத்தம் எத்தனை கலங்கரை விளக்குகள் உள்ளது ? 4.இந்தியாவிலே மிக நீண்ட நதி எது ? 5.நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ? 6.தார் பாலைவனத்தின் வழியாக ஓடும் நதி எது ? 7.சுமத்ரா தீவு எந்த நாட்டிற்கு சொந்தமானது ? 8.அண்டார்டிகா கண்டத்திலுள்ள உயரமான எரிமலை எது ? 9.பனிச்சிறுத்தைகள் எந்த கண்டத்தில் அதிகம் ? 10.மவுண்ட் ஒலிம்பஸ் எந்த நாட்டில் உள்ளது ? பதில்கள்: 1.சிக்கிம்,2.பாமீர் பீடபூமி,3.150, 4.கங்கை,5.நார்வே, 6.சிந்து,7.இந்தோனேசியா,8.எரிபஸ், 9.ஆசியா,10.கிரீஸ்.
இன்று செப்டம்பர் 18பெயர் : சாமுவேல் ஜோன்சன், பிறந்த தேதி : செப்டம்பர் 18, 1709 ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கியவர். ஆங்கிலேயரான இவர் ஒரு விமர்சகரும், இலக்கிய ஆர்வலரும் ஆவார். இவரது அகராதி 1755 ஆம் ஆண்டில் வெளியானது.