Archive for செப்ரெம்பர் 12, 2010
ஆன்லைன் -ல் உங்களுக்கென்று இலவசமாக கடை உருவாக்கலாம்.
ஆன்லைன் மூலம் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்ய
நமக்கென்று ஒரு கடை இலவசமாக உருவாக்கலாம் எப்படி
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நம்மிடம் இருக்கும் எந்த பொருட்களை வேண்டுமானாலும் உலகறியச்
செய்ய ஒரு முயற்சியாக ஒரு இனையதளம் உள்ளது. இந்தத்தளத்தில்
நம்மூர் மளிகை கடைகாரர் முதல் துனிக்கடை காரர் வரை அனைவரும்
தங்களுக்கென்று இலவசமாக ஆன்லைன் கடை ஒன்றை உருவாக்கி
தங்கள் பொருட்களின் மதிப்பை அனைவரும் அறியச்செய்யலாம்.
இணையதள முகவரி : http://www.bigcartel.com
யார் வேண்டுமானாலும் தொழில்நுட்பம் பற்றிய அறிவு இல்லாதவர்கள்
கூட எளிதாக தங்களுக்கென்று எளிதாக இந்தத்தளம் மூலம் கடை
உருவாக்கிக் கொள்ளலாம். பேபால் மூலம் பணம் பெற்றுக்கொண்டு
பொருட்களை அனுப்பலாம். எந்த கமிஷனும் எடுக்காமல் நேரடியாக
நமக்கும் பொருள் வாங்குபவருக்கும் பாலமாக இருக்கின்றனர்.
முதல் 5 பொருட்களை மட்டும் நாம் இலவசமாக பயன்படுத்திப்பார்த்து
பயனாளர்கள் கிடைத்தால் மேலும் அனைத்து பொருட்களையும்
கொண்டு ஆன்லைன் -ல் கடை வைக்கலாம் இதற்காக மாதம்
$10 டாலர் கட்டணம் வசூலிக்கின்றனர். எல்லா வகையான
பொருட்களையும் நாம் இந்தக்கடை மூலம் உலக மக்களுக்கு காட்டலாம்.
கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை கிடைக்கும் சில மணித்துளிகளில் கூட அடுத்தவரைப் பற்றி குறை சொல்லாதீர்கள்.அவர்கள் செய்த நல்லதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்? 2.ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ? 3.சீனாவின் முக்கிய பத்திரிகையின் பெயர் என்ன ? 4.பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது ? 5.மிகவும் வேகமாக ஓடக்கூடிய மிருகம் எது ? 6.இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது ஆரம்பிகப்பட்டது ? 7.பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை கொண்டுள்ளது ? 8.கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது? 9.பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது வழங்கப்பட்டது? 10.எக்ஸ்ரே -வை கண்டுபிடித்தவர் யார் ? பதில்கள்: 1.நிஜாமி,2.தென்கொரியா,3.பீபிள்ஸ் டெய்லி,4.ஓரிஸ்ஸா, 5. சிறுத்தை : 70 மைல், 6.1922,7.10 மாதம், 8.1900 ஆண்டு,9.பிசிராந்தையார்,10.W.C.ரான்ட்ஜன்.
இன்று செப்டம்பர் 12பெயர் : சி. வை. தாமோதரம்பிள்ளை, பிறந்த தேதி : செப்டம்பர் 12, 1832 பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து,ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி.