Archive for ஓகஸ்ட், 2010
பேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி
பேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை
பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை
நம் கணினியில் எப்படி சேமித்து வைப்பது என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1
பேஸ்புக்-ல் தினமும் பல்லாயிரக்கணக்கான வீடியோ உலாவருகிறது
இதில் பல வீடியோக்கள் பயனுள்ளதாகவும், பொழுதுபோக்கு
நிறைந்துள்ளதாகவும் உள்ளது இப்படி பட்ட வீடியோக்கள் பேஸ்புக்-ல்
ஃபிளாஸ் பிளேயர் துனையுடன் இயங்குகிறது. இந்த வீடியோவை
நம் கணினியில் எளிதாக தரவிரக்கலாம்.பேஸ்புக்-ல் வரும் வீடியோ
முகவரியுடன் “down” என்ற வார்த்தையை முன்னால் சேர்த்தால்
போதும் உடனடியாக நம் கணினியில் சேமிக்கலாம்.
உதாரணமாக பேஸ்புக் வீடியோ முகவரி :
http://www.facebook.com/video/video.php?v=1179930101321
இதில் facebook எனபதற்கு முன் down என்ற வார்த்தையை
சேர்த்துள்ளோம்.
http://www.downfacebook.com/video/video.php?v=1179930101321

படம் 2
ஃபிளாஷ் பிளேயர் அப்டேடட் வெர்சன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
பிரச்சினை இல்லாமல் தரவிரக்கலாம். முகவரியை சொடுக்கியதும்
வரும் திரை படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது. Download link என்பதில்
http என்பதிலிருந்து தொடங்கி html வரை தேர்வு செய்து படம் 2-ல்
உள்ளபடி காப்பி செய்து புதிய tab திறந்து இந்த முகவரியை கொடுத்து
நம் கணினியில் சேமித்துக்கொள்ளலாம். கண்டிப்பாக இந்ததகவல்
நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை லஞ்சம் வாங்கும் மக்களின் குழந்தைகள் மட்டுமல்ல , தந்தையும் செய்த பாவத்தை தொலைத்தே ஆக வேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ? 2.இந்தியாவின் தேசிய மரம் எது ? 3.முதல் தமிழ் பத்திரிகை எது ? 4.தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ? 5.இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ? 6.தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ? 7.இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ? 8.இந்தியாவின் தேசிய காலண்டர் எது ? 9.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ? 10.இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ? பதில்கள்: 1.குறிப்பறிதல்,2.ஆலமரம்,3.சிலோன் கெஜட்,4.சுதேசமித்திரன், 5.சரோஜினி அரிச்சந்திரன்,6.பாத்திமா பீவி,7.பெங்களூர், 8.சகாப்தம்,9.Postal Index Code,10.1498 -ல்.
இன்று ஆகஸ்ட் 31பெயர் : ஜோர்ஜெஸ் பிராக் , மறைந்த தேதி : ஆகஸ்ட் 31, 1963 பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியரும், சிற்பியும் ஆவார். கியூபிசம் எனப்படும் ஓவியப் பாணியை உருவாக்கியோராகக் கருதப்படுபவர் -களுள் இவரும் ஒருவர். மற்றவர் பாப்லோ பிக்காசோ.
ஆடியோ, வீடியோ டிரைவர் மென்பொருளை பேக்கப் எடுத்து வைக்கலாம்.
நாம் பயன்படுத்தும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் ஆடியோ
வீடியோ டிரைவர் மென்பொருள்-களை பாதுகாப்பாக சேமித்துக்
கொள்வது எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.

படம் 1
நாம் கணினி வாங்கிய போது டிரைவர் CD என்று ஒன்று கொடுப்பார்கள்
அதில் தான் நம் கணினியின் ஆடியோ, வீடியோ டிரைவர் மென்பொருள்
இருக்கும். எப்போதாவது நம் கணினியில் பிரச்சினை என்றால் நாம்
உடனடியாக விண்டோஸ் – ஐ அழித்து விட்டு புதிதாக நிறுவ முயற்சி
செய்யலாம் என்று நினைத்தாலும் நம்மிடம் ஆடியோ , வீடியோ டிரைவர்
CD இல்லையே என்று இப்போதைக்கு அழிக்காமல் பிரச்சினையோடு
பயன்படுத்துவோம் என்று இருக்காமல் ஏற்கனவே நம் கணினியில்
இருக்கும் ஆடியோ வீடியோ டிரைவர் மென்பொருளை நாம் பேக்கப்
செய்து பயன்படுத்தலாம் இதற்கு பல மென்பொருள்கள் இருந்தாலும்
அத்தனையும் காசு கொடுத்து தான் பயன்படுத்த முடியும் ஆனால்
சில மென்பொருள்கள் இலவசமாக ஆடியோ,வீடியோ டிரைவர்
சேமிக்க உதவுகின்றது அப்படி இருக்கும் மென்பொருளில் Double Driver
என்ற மென்பொருளைப்பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.
இந்த சுட்டியை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் இண்ஸ்டால் செய்து
கொள்ளவும். அடுத்து Double Driver என்ற மென்பொருளை இயக்கி
படம் 1-ல் உள்ளது போல் இருக்கும் Scan Current System என்ற
பொத்தானை அழுத்தவும். நம் கணினியில் நிறுவியிருக்கும் அனைத்து
டிரைவர் மென்பொருள்களையும் நமக்கு காட்டும் இதில் எதெல்லாம்
நமக்கு தேவையோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Backup now
என்ற பொத்தானை அழுத்தி விரும்பும் இடத்தில் டிரைவர்
மென்பொருள்களை சேமித்துக்கொள்ளவும். டிரைவர் Cd இல்லாதவர்கள்
கண்டிப்பாக இப்போதே ஆடியோ, வீடியோ டிரைவர் மென்பொருள்களை
சேமித்து வைத்துக்கொள்ளவும். அவசர நேரத்தில் இணையத்தில்
சென்று தேடும் நேரமும் தரவிரக்கும் நேரமும் குறையும்.
விண்டோஸ் 98 முதல் விண்டோஸ் 7 வரை அனைத்து
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கும் துணை புரியும்.
வின்மணி சிந்தனை நாம் செய்யும் தவறுக்காக அடுத்தவர் மனம் துன்பப்படுமேயானால் கடவுள் நம்மை விட்டு உடனே சென்று விடுவார்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ? 2.திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் இருக்கும் ? 3.சீனாவின் புனித விலங்கு எது ? 4.மாம்பழத்தின் பிறப்பிடம் எது ? 5.ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ? 6.தங்கப்போர்வை நிலம் எது ? 7.தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ? 8.கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ? 9.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ? 10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ? பதில்கள்: 1.பாடலிபுத்திரம்,2.8 ஆயிரம் லிட்டர்,3.பன்றி,4.இந்தியா, 5.கிமோனா,6.ஆஸ்திரேலியா,7.மூன்று,8.வில்லோ மரம், 9.நீயூசிலாந்து,10.பிட்மேன்.
இன்று ஆகஸ்ட் 30பெயர் : என். எஸ். கிருஷ்ணன் , மறைந்த தேதி : ஆகஸ்ட் 30, 1957 தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.49 ஆண்டுகள் வாழ்ந்து ஆயிரம் ஆண்டு காலச் சாதனையை கலைத்துறை மூலம் செய்து காட்டியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள். கூத்தாடிகளாக, குறை மனிதர்களாக, அரிதார வேலைக்காரர்களாகக் கருதி ஒதுக்கித் தள்ளப்பட்ட நடிகர் சமுதாயத்தில், அறிவு விளக்கேற்றி வைத்து மக்களுக்குத் தொண்டு செய்யப் பிறந்தவர்கள் என்ற நிலையை உருவாக்கியவர்.
2011-ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ரோபோட் உங்கள் பெயரை சுமந்து செல்லும்
செவ்வாய் கிரகத்திற்கு அடுத்த ஆண்டு 2011 அக்டோபர் மாதம் செல்ல
விருக்கும் ரோபோட் உங்கள் பெயரையும் சுமந்து செல்லும் எப்படி நம்
பெயரை செவ்வாய் கிரகத்திற்கு இலவசமாக அனுப்பலாம், பங்கு
பெற்றதற்கான சான்றிதழை எப்படிப் பெறலாம் என்பதைப் பற்றித்தான்
இந்தப்பதிவு.
நாசாவிடம் இருந்து அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்தைப்பற்றி
ஆராய்ச்சி செய்வதற்காக புதிய வகை ரோபோட் ஒன்று தயாராகி
வருகிறது. இதில் இருக்கும் மைக்ரோ சிப் மூலம் நம் பெயரை
பதிவு செய்து அதை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு சேர்கிறது.
நாசாவின் இணையதளத்திற்கு சென்று நாம் நம் பெயர், நாடு
மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் போன்றவை கொடுத்தால்
போதும் உடனடியாக இலவசமாக நம் பெயரை பதிவு செய்து
நமக்கு இதில் பங்கு பெற்றதற்கான சான்றிதழையும், சான்றிதழ்
எண்ணையும் கொடுத்து விடுகின்றனர். அடுத்த ஆண்டு செவ்வாய்
கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக செல்லும் நவீன ரோபோட்
நம் பெயரையும் சுமந்து செல்லும். பல கோடி செலவு செய்து
தயாராகும் ரோபோட் நம் பெயரை செவ்வாய் கிரகம் வரை
கொண்டு செல்லும். வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்ற
ஆசை உள்ள் அனைவரும் உங்கள் பெயரை மறக்காமல் பதிவு
செய்யுங்கள். பதிவு செய்ய வேண்டிய முகவரி :
http://marsparticipate.jpl.nasa.gov/msl/participate/sendyourname/
வின்மணி சிந்தனை உலகில் நாம் பிறந்ததே மகிழ்சியான ஒன்று தான் வாழும் காலம் வரை யாருக்கும் துன்பம் கொடுக்காமல் வாழ்ந்து விட்டு செல்வோம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ? 2.மில்லினியம் டோன் எங்குள்ளது ? 3.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ? 4.பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ? 5.லில்லி பூக்களை உடைய நாடு எது ? 6.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? 7.யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ? 8.சோகத்தை குறிக்கும் ராகம் எது ? 9.நதிகள் இல்லாத நாடு எது ? 10.சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ? பதில்கள்: 1.லெனின்,2.கிரீன்விச்,3.கரையான்,4.சலவைக்கல்,5.கனடா, 6.55 மொழிகளில்,7.22 மாதம்,8.முகாரி, 9.சவூதி அரேபியா, 10.மீத்தேன்.
இன்று ஆகஸ்ட் 29பெயர் : மைக்கல் ஜாக்சன் , பிறந்த தேதி : ஆகஸ்ட் 29, 1958 அமெரிக்க பாப் இசைப் பாடகர். புகழ்பெற்ற ஜாக்சன் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 11 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரின் நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்து புகழ் அடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்
கணினி பயன்படுத்துபவர்கள் முதல் புரோகிராமர் வரை அனைவரின் பிரச்சினைக்கும் தீர்வு.
கணினியில் இப்போது தான் காலடி எடுத்து வைத்திருக்கிறேன் அதற்குள்
என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்
கணினியின் புரோகிரமருக்கும் சில நேரங்களின் மண்டை குடைச்சலை
கொடுக்கும் புரோகிராம் பிழை (Error) -க்கும் எளிதான வகையில் தீர்வு
கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினியில் வித்தியாசமாக ஏதோ பிழை செய்தி காட்டுகிறது நானும்
கூகுளில் சென்று தேடினேன் பல முடிவகள் கொடுத்தாலும் என்னால்
எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்,
புரோகிராம்-ல் சாதாரண Array Function தான் இப்படி எல்லாம் பிழை
செய்தி காட்டுமா என்று எனக்கு இப்போது தான் என்று தெரிகிறது என்று
சொல்வபவர்களுகும் இதற்கு தீர்வு தேடி பல தளங்கள் செல்லவேண்டாம்
ஒரே தளம் அனைத்து கணினி பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்கிறது
இணையதள முகவரி : http://www.errorhelp.com
பிழை உதவி ( Error Help) இதைதான் மையமாக வைத்து இந்தத்தளம்
செயல்படுகிறது. மற்றதளங்களைப்போல அல்லாமல் பிரச்சினையை
நாம் கூறினால் போதும் அதற்கான தீர்வை இலவசமாக தேடிக்
கொடுக்கின்றனர். இதை ஏற்கனவே எத்தனை பேர் பயன்படுத்தி
உள்ளனர். எந்ததளத்தில் நம் பிரச்சினைக்கான தீர்வு இருக்கிறது
அதன் இணையதள முகவரி என்ன என்று தெளிவாக நமக்கு
காட்டுகிறது, நீங்கள் கேட்கும் பிரச்சினை இதுவரை வரவில்லை
என்றால் 48 மணி நேரத்திற்க்குள் சரியான பதிலை கொடுக்க
முயற்சி செய்கிறோம் என்றும் கூகுளில் நம் பிரச்சினையைத்
தேடி அதற்கான தீர்வையும் இவர்களின் இணையப்பக்கதிலே
காட்டுகின்றனர். கண்டிப்பாக இந்தத் தகவல் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை அன்பும், கொடைத்தன்மையும் தமிழர்களின் பரம்பரைச் சொத்து எப்போதும் அதை மறக்காதீர்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ? 2.இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது ? 3.இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் தலைவர் யார் ? 4.விவசாய உற்பத்தியில் முன்னனியில் வசிக்கும் மாநிலம் எது? 5.வங்காளம் பிரிக்கப்பட்ட ஆண்டு எது ? 6.இந்தியா மயிலை தேசிய பறவையாக அறிவித்த ஆண்டு எது? 7.தென்துருவத்தின் தீர்க்கரேகை அளவு என்ன ? 8.சோமநாத் கோவில் எதனால் கட்டப்பட்டது ? 9.அஜந்தா குகை மொத்தம் எத்தனை குகைகளைக் கொண்டது? 10.உலகில் எவ்வளவு மக்கள் சீன மொழி பேசுகின்றனர் ? பதில்கள்: 1.ஆறுகள்,2.அரிசி,3.டாக்டர் இராஜேந்திரபிரசாத், 4.பஞ்சாப்,5.1905,6.1964,7.90 டிகிரி,8.செங்கல்,மரம், 9.29 குகைகள்,10.975 மில்லியன் மக்கள்.
இன்று ஆகஸ்ட் 28பெயர் : ராபர்ட் கால்டுவெல் , மறைந்த தேதி : ஆகஸ்ட் 28, 1891 ராபர்ட் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார்.
தினமும் ஒரு நவீன ஆங்கில வார்த்தையை எளிதாக கற்கலாம்.
தினமும் ஒரு நவீன வித்தியாசமான ஆங்கில வார்த்தையை
எளிதாக கற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இதுவரை நாம் ஆங்கிலத்தில் அதிகமாகப் பயன்படுத்தாத நவீன
வார்த்தைகளை நமக்கு தேர்ந்தெடுத்து தினமும் ஒரு வார்த்தையை
நமக்கு கொடுக்கின்றனர். இந்த ஆங்கில வார்த்தைக்கு டிவிட்டர்
மூலம் யார் வேண்டுமானாலும் நமக்கு தெரிந்த பொருளை கூறலாம்.
அடுத்த நாள் இதற்கான நவீன சிறந்த விளக்கத்தையும் சரியான
அர்த்தம் கொடுத்தவர்களின் பெயரையும் இவர்கள் தளத்தில்
காட்டுகின்றனர்.
இணையதள முகவரி : http://www.artwiculate.com
டிவிட்டர் முகவரி : http://twitter.com/artwiculate
நம் ஆங்கில அறிவின் திறமையை வளர்ப்பதாகவும் தினமும்
சில நிமிடங்கள் செலவு செய்து தினமும் ஒரு நவீன ஆங்கில
வார்த்தையை எளிதாக கற்றுகொள்ளலாம். டிவிட்டர் மூலம்
அன்றைய தினம் கொடுக்கும் வார்த்தைக்கு நமக்கு தெரிந்த
அர்த்தத்தையும் கொடுத்து நாமும் போட்டியில் பங்கு பெறலாம்.
உங்கள் பதில் சரியாக இருந்தால் உங்கள் பெயர் அடுத்த நாள்
இந்த தளத்தில் வரும். ஆங்கில வார்த்தைகள் அதிகம்
கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை சுயநலவாதிகளை விட்டு எப்போதும் விலகி இருங்கள் அவர்களால் நம் இறை குணம் காணாமல் போகும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பாரதப்போர் நடந்த இடம் எது ? 2.சூரியமண்டலம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ? 3.ரேடியேட்டர் என்பது என்ன ? 4.லிப்ட் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ? 5.குலா சிகரம் எந்தக்கிரகத்தில் உள்ளது ? 6.அரபிக்கடலின் ராணி என்பது எந்த மாநிலம் ? 7.மூக்கில் பல் உள்ள விலங்கு எது ? 8.நின்றபடியே தூங்கும் பிராணி எது ? 9.தோலினால் சுவாசிக்கும் உயிரினம் எது ? 10.நீர் குடிக்காத விலங்குகள் எவை ? பதில்கள்: 1.குருஷேத்திரம்,2.கோபார் நிக்கஸ்,3.குளிர்விக்கும் கருவி, 4.ஓடிஸ்,5.வெள்ளி,6.கேரளா,7.முதலை,8.குதிரை,9.மண்புழு, 10.எலி, கங்காரு
இன்று ஆகஸ்ட் 27பெயர் : மவுண்ட்பேட்டன் பிரபு , மறைந்த தேதி : ஆகஸ்ட் 27, 1979 பர்மாவின் முதலாவது கோமகன் மவுண்ட் பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் (Viceroy) விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் (Governor-General) இருந்தவர்.
மடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம்
மடிக்கணினிகளில் குறிப்பிட்ட அளவு தான் ஒலி நமக்கு கேட்கும்
அந்த குறிப்பிட்ட அளவை விட மேலும் ஒலியின் அளவை
அதிகமாகக் கூட்டலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
மடிக்கணினிகள் இன்று இல்லாத இடம் இல்லை என்று சொல்லும்
அளவுக்கு எல்லா இடங்களிலிலும் மடிக்கணினிகளின் தாக்கம்
அதிகமாகவே இருக்கிறது. நமக்கு பிடித்த இசையின் ஒலி அளவை
மடிக்கணினிகளின் குறிப்பிட்ட அளவு வரை தான் கேட்க முடியும்
என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால்
மடிக்கணினிகளில் ஒலியின் அளவை மேலும் கூட்டலாம். இதற்க்காக
ஒரு மென்பொருள் உள்ளது. மென்பொருளின் மூலம் எப்படி இருக்கும்
ஒலியின் அளவைக்க்கூட்ட முடியும் என்று சற்று வேடிக்கையாக
தோன்றினாலும் பயன்படுத்திப்பாருங்கள் உண்மை புரியும்.
மென்பொருளின் பெயர் VLC Media player இந்த மென்பொருளை
நம் கணினியில் தரவிரக்க இந்த சுட்டியை சொடுக்கவும்.
இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவியதும்,
இந்த மென்பொருளை இயக்கி நமக்கு பிடித்த ஆடியோ அல்லது
வீடியோ பாடல்களை open செய்து கொள்ளுங்கள். அடுத்து
படம் 1 -ல் உள்ளது போல் Volume சொடுக்கி ஒலியின் அளவை
அதிகரித்துக் கொள்ளலாம். Ctrl + Up arrow ஐ அழுத்து நமக்கு
தேவையான அளவு அதிகரித்துக்கொள்ளலாம். கண்டிப்பாக
இந்தத் தகவல் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை மது அருந்துபவர் தன்னை மட்டுமல்ல தன் குடும்பத்தின் பெயரை மட்டுமல்ல, தன் பரம்பரையின் பெயரையும் கெடுத்துக்கொள்கிறார்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தீபாவளிப்பண்டிகையை தபால்தலையில் வெளியீட்ட நாடு எது? 2.தபால் தலையை வட்ட வடிவமாக வெளியீட்ட நாடு எது ? 3.உலகிலேயே மிக உயரமான கோபுரம் எந்த நாட்டில் உள்ளது? 4.வறட்சியைத்தாங்கும் ஒரே புல் எது ? 5.மகாத்மா காந்தியின் தாயார் பெயர் என்ன ? 6.மீன்கள் எதனால் சுவாசிக்கிறது ? 7.தமிழக அரசின் சின்னம் எது ? 8.எழு என்பது என்ன ? 9.ஏசு கிறிஸ்து எங்கு பிறந்தார் ? 10.ஊசியால் எந்த நோயையும் குணப்படுத்தும் சீன முறைக்கு என்ன பெயர் ? பதில்கள்: 1.சிங்கப்பூர்,2.மலேசியா,3.நீயூசிலாந்து, 4.ஆஸ்திரேலியாப்புல்,5.புத்லிபாய்,6.செவிள்களால், 7.கோபுரம்,8.ஒரு பறவை,9.பெத்தலஹேம்,10.அக்குபஞ்சர்
இன்று ஆகஸ்ட் 26பெயர் : அன்னை தெரேசா , பிறந்த தேதி : ஆகஸ்ட் 26, 1910 அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரிஆவார்.ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.
இன்று முதல் வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்.
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால
இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம்
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும்
மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன்
செய்யலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
விரைவில் வெளிவரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த கூகுளின்
சேவை இன்று முதல் நாம் அனைவரும் பயன்படுத்தலாம் அதாவது
ஜீமெயில் மூலம் இனி நாம் வெளிநாட்டில் இருப்பவருடன் குறைந்த
செலவில் போனில் பேசலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது
நம் ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக்கொண்டு சாட் என்பதில்
நுழையவும் அடுத்து Call என்பதை சொடுக்கி நாம் எந்த நாட்டிற்கு
வேண்டுமானாலும் போன் செய்யலாம். Call Phone என்பது
இல்லாவிட்டால் சாட்- என்பதில் இருக்கும் தேடலில் call என்பதை
கொடுத்ததும் வரும். Call என்பதை சொடுக்கி நாம் போன் பேசலாம்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவரிடம் இலவசமாக பேசலாம்
மற்ற நாடுகளில் இருப்பவருடன் குறைவான கட்டணம்
நிர்ணயத்துள்ளது. கட்டணம் பற்றிய விபரங்கள் :
ஒரு நிமிடத்திற்கு
இந்தியா : $0.06
யுனைடட் அரபு நாடுகள் : $0.19
மலேசியா : $0.02
பாகிஸ்தான் : $0.11
சிங்கப்பூர் : $0.02
சவுதி அரேபியா : $0.19
http://gmail.com/call என்ற முகவரியை சொடுக்கி மேலும் தகவல்கள்
தெரிந்து கொள்ளலாம். ஜீமெயில் போன் கால் பற்றிய அறிமுக வீடியோ
ஒன்றையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை நாளை நமக்கு சொந்தமில்லை இன்று மட்டுமே அதுவும் இப்போது மட்டுமே நமக்கு சொந்தம் அதனால் எப்போதும் முகத்தை புன்னகையோடு வைத்திருங்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இரத்தத்தின் முக்கிய பணி யாது ? 2.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 3.எந்த இரு நாள்கள் மட்டும் இரவும் பகலும் சமமாக இருக்கும்? 4.உலகப்புகழ் பெற்ற மோனலிஸா ஓவியம் தற்போது எங்குள்ளது? 5.நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் எது ? 6.தீபாவளி அன்று பிறந்த மத குரு யார் ? 7.வாசனைத் தபால் தலை வெளியீட்ட நாடு எது ? 8.உலகிலேயே மிக உயர்ந்த பீடபூமி எது ? 9.மகாத்மா காந்தி எந்த ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்றார் ? 10.இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானி யார்? பதில்கள்: 1.ஆக்சிஜனை எடுத்துச்செல்வது,2.1986,3.மார்ச் 21, 4.பாரிஸ் -லூவர் மியூசியம்,5.புகைபிடிப்பது,6.குருநாணக், 7.தென்னாப்பிரிக்கா,8.திபெத்,9.1914,10.மேரிக்கியூரி அம்மையார்
இன்று ஆகஸ்ட் 25பெயர் : கிருபானந்த வாரியார் , பிறந்த தேதி : ஆகஸ்ட் 25, 1906 சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதையே தவமாகக் கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்.
கணினி பயன்படுத்தும் நாம் அனைவருவே தெரிந்து வைத்துக்கொள்ள
வேண்டிய முக்கியமான தகவல் தான் இந்தப்பதிவு கீபோர்ட்-ல் எந்த
கீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் தட்டச்சு செய்யலாம்.

படம் 1

படம் 2
இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து நண்பர் கிருஷ்ணன்
அவரது மடிக்கணினியில் இரண்டு கீ (பொத்தான்) வேலை
செய்யவில்லை இதனால் அந்த குறிப்பிட்ட கீயைப் பயன்படுத்த
முடியவில்லை என்றும் கூறி இருந்தார். சரி நாமும் இவருக்காக
தேடிய போது சில மென்பொருட்கள் கிடைத்தது. கூடவே அதிசயமான
ஒன்றும் கிடைத்தது இதுவரை நாம் இதைப் பயன்படுத்தி இருப்போமா
என்று கூட தெரியவில்லை எந்த மென்பொருளும் இல்லாமல்,
ஆன்லைன் கூட செல்லாமல், நம் கணினியில் Start – > Run
சென்று OSk என்று கொடுத்தால் போதும் ஆன் ஸ்கிரின் கீபோர்ட்
ஒன்று நம் கண்முன்னால் வருகிறது. எந்த கீ தட்டச்சு செய்ய
வேண்டுமோ அந்த கீ மேல் மவுஸ்-ஐ வைத்து சொடுக்கினால்
போதும் எளிதாக நாம் அந்த கீ-யைப் பயன்படுத்த முடிகிறது.

படம் 3
குழந்தைகள் பயன்படுத்தும் சிலவகையான மடிக்கணினியில்
கண்டிப்பாக சில கீ பொத்தான் வேலை செய்யாமல் இருக்கும்
அவர்களுக்கும், கணினி பயன்படுத்தும் நாமும் தெரிந்து
வைத்திருக்க வேண்டிய முக்கியமான பதிவாக இது இருக்கும்.
வின்மணி சிந்தனை பகையாளியாக இருந்தாலும் உதவி என்று நம்மிடம் வரும்போது நாம் கண்டிப்பாக உதவ வேண்டும். எனென்றால் நாம் இந்த பூமிக்கு வந்த விருந்தாளிகள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்? 2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ? 3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ? 4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ? 5.பாம்புகளே இல்லாத கடல் எது ? 6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ? 7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ? 8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ? 9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ? 10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது ? பதில்கள்: 1.சாணக்கியர்,2.நைல் நதிக்கரையில்,3.பிராமி,4.6 கி.மீ, 5.அட்லாண்டிக் கடல்,6. காரியம் , களிமண், மரக்கூழ், 7.70 ஆயிரம் வகைகள்,8.அலகாபாத்,9.பாலைவனத்தில், 10.கேரளா.
இன்று ஆகஸ்ட் 24பெயர் : வே. இராமலிங்கம் , மறைந்த தேதி : ஆகஸ்ட் 24, 1972 தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திய பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.
ஆன்லைன் -மூலம் எல்லா வகையான பார்கோடும் படிக்கலாம்
பார்கோட் வைத்து அதன் தகவலையும் நிறுவனத்தின் பெயரையும்
நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
நாம் வாங்கும் அனைத்துப் பொருட்களிலும் பார்கோட் என்ற
அடையாள கோடு என்று இருப்பது நமக்கு தெரியும். ஆனால்
இந்த பார்கோட் வைத்து எந்த நிறுவனத்தின் பொருள் என்று
எளிதாக ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்காலம்.
இணையதள முகவரி : http://www.onlinebarcodereader.com
இந்தத்தளத்திற்கு சென்று நம்மிடம் இருக்கும் பார்கோட் படமான
jpg கோப்பை choose என்ற பொத்தானை அழுத்தி அப்லோட் செய்ய
வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் அப்லோட் செய்த
பார்கோட்-ன் நிறுவனத்தின் பெயரை துல்லியமாக எடுத்துக்
கொடுக்கும்.UPC-A, UPC-E, EAN-8, EAN-13, Code 39, Code 128
போன்ற அனைத்து வகையான பார்கோட்-ன் தகவல்களையும் நாம்
இதன் மூலம் கண்டுபிடிக்கலாம். எந்த வகையான ரெஸிஸ்டேரேசனும்
தேவையில்லை. உடனடியாகவும் எளிதாகவும் நாம் பார்கோட்-ஐ
படிக்கலாம். சில போலி நிறுவனங்களின் பொருட்களையும் நாம்
இந்த பார்கோட் வைத்து கண்டுபிடிக்கலாம். கண்டிப்பாக இந்தத்
தளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை ஞானம் இல்லாதவரிடம் பேசுவதை விட ஊமையாக இருப்பதே நலம், தான் பேசுவதை மட்டும் வேத வாக்காக எண்ணும் நபர்கள் தான் ஞானம் இல்லாதவர்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.மிகப்பெரிய தேசியக்கொடி உள்ள நாடு எது ? 2.முதல் உலகப்போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது ? 3.எந்தப்பறவை பெரிய முட்டையிடும் ? 4.ஜப்பான் நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் என்ன ? 5.அதிக நாள் உயிர் வாழும் மிருகம் எது ? 6.ஒரு செல் தாவரம் எது ? 7.சீன மொழியில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன ? 8.ஒளிபுகக்கூடிய ஒரே திரவம் எது ? 9.இருபதான் நூற்றாண்டின் முதல் தேதி என்ன ? 10.முதலாவது உலகக்கோப்பை கால்பந்து போட்டி எந்த வருடம் நடைபெற்றது ? பதில்கள்: 1.டென்மார்க்,2.3 ஆண்டுகளும் 2 நாட்களும்,3.நெருப்புக்கோழி, 4.டயட்,5.ஆமை - 120 ஆண்டுகள்,6.கிளாமிடாமோனாஸ், 7.1500 எழுத்துக்கள்,8.மைக்கா,9.1901 ஜனவரி 1 ,10.1930.
இன்று ஆகஸ்ட் 23பெயர் : வ. ராமசாமி, மறைந்த தேதி : ஆகஸ்ட் 23, 1951 தமிழ் வசனநடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய ஒரு முன்னோடி. வ. ராமசாமி ஒரு முற்போக்கு சிந்தனையாளராகவும் தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீராகவும் விளங்கினார்.அய்யங்கார்கள் பூணூல் அணிவது வழக்கம், இவர் அதைத் தவிர்த்தார்.