Archive for ஜூலை, 2010
உங்கள் வீட்டை இனி பார்ப்பதற்கு அழகாக மாற்ற ஒரு புதிய முயற்சி
புதிய வீடு கட்டியாகிவிட்டது என்ன வண்ணம் எந்த அறையில் பூசினால்
நன்றாக இருக்கும் இதற்காக எந்த பணமும் செலவு செய்ய வேண்டாம்
எந்த வண்ணம் நம் வீட்டிற்கு நன்றாக இருக்கும் என்று ஆன்லைன்
மூலம் தெரிந்து கொள்ளலாம் இதைப் பற்றித் தான் இந்தப்பதிவு.
வீட்டிற்கு வண்ணம் தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய கலைதான் என்றாலும்
வண்ணத்தை இவ்வளவு சுலமாக தேர்ந்தெடுக்கலாம் என்றால்
ஆச்சர்யமாகத் தான் இருக்கும் ஆனாலும் உண்மை தான் நம் வீட்டின்
புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன வண்ணம்
கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை ஆன்லைன் மூலமே
தேர்ந்தெடுக்கலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://colorjive.com/home.action
இந்தத்தளத்திற்கு சென்று நம் வண்ணம் பூச விரும்பும் நம் வீட்டின்
முகப்பு புகைப்படத்தையோ அல்லது வீட்டின் அறையோ புகைப்படம்
எடுத்து இந்ததளத்தில் தரவேற்றம் (அப்லோட்) செய்ய வேண்டியது
தான். உடனடியாக நம் புகைப்படம் அடுத்தத்திரையில் வந்துவிடும்
இதில் நமக்கு பிடித்த அழகான வண்ணததை தேர்ந்தெடுத்து
பார்க்க வேண்டியது தான் எல்லாமே எளிமையாகத் தான்
இருக்கிறது. நமக்கு பிடித்த அழகான வண்ணத்தை அப்படியே
பிரிண்ட் ஸ்கிரின் செய்து சேமித்து அப்படியே வண்ணம் பூசுபவர்களிடம்
கொடுத்துவிட வேண்டியது எந்த வண்ணம் நன்றாக இருக்கும்
என்பதே முன்னமே தேர்ந்தெடுத்துவிடுவதால் நம் நேரமும்
பணமும் மிச்சம் கூடவே நமக்கு பிடித்த வண்ணத்தை
தேர்ந்தெடுத்துள்ளோம் என்ற மகிழ்ச்சியும் இருக்கும்.
வின்மணி சிந்தனை அடுத்தவரைப் பற்றிக் குறைகூறும் முன் நம்மை பற்றி ஒரு போதும் பெருமையாக நினைக்காதீர்கள், அவர்கள் பக்கம் இருந்து அடுத்த தரப்பு நியாயத்தையும் பாருங்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.வங்காளவிரிகுடாவில் கலக்காத நதி எது ? 2.குளிர்காலத்தில் அதிக மழைபெரும் மாநிலம் எது ? 3.தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் மாவட்டம் எது ? 4.ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது ? 5.ஜோக் நீர்வீழ்ச்சி எங்குள்ளது ? 6.உலகின் முதல் விண்வெளி வீரர் யார் ? 7.மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இடம் எது ? 8.சில்கா ஏரி காணப்படும் இடம் எது ? 9.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது ? 10.எலிபெண்டா குகைகள் எங்குள்ளன ? பதில்கள்: 1.நர்மதை, 2.தமிழ்நாடு,3.கோயம்புத்தூர்,4.பஞ்சாப், 5.கர்நாடகம், 6.யூரி ககாரின், 7.உதகமண்டலம், 8.மகாநதிச் சமவெளி,9.சென்னை,10.மும்பை
இன்று ஜூலை 31பெயர் : செய்குத்தம்பி பாவலர், பிறந்தததேதி : ஜூலை 31, 1874 தமிழ்ப் பெரும் புலவர். சீறாப்புராணத்திற்குச் சிறந்தோர் உரையெழுதியவர். கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் ‘'சதானவதானம்' என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்.
பொதுமக்கள்,குழந்தைகளின் காதுக்கு இனிய ஒலியைத் தரவிரக்கலாம்.
அலைபேசியில் செய்தி வந்தால் ஒரு சத்தமும் அழைப்பு வந்தால்
வேறு சத்தமும் வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். சிலர்
அலைபேசியில் புதுமையான அழகான ஒலியை வைக்க
விரும்புவர்கள் இவர்களுக்கு உதவுவதற்க்காகத் தான் இந்தப்பதிவு.
ஒரே அலைபேசியில் எத்தனை வகை ஒலிகளையும்
சத்தங்களையும் வைத்தாலும் மேலும் மேலும் என்ற எண்ணம்
மட்டும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது குருவி
சத்தத்தில் இருந்து குழந்தை சத்தம் வரை , மாடு சத்தத்தில்
இருந்து மனிதன் சத்தம் வரை அனைத்துமே தாங்கி ஒரு
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.audiencesounds.com
மற்றதளங்களை காட்டிலும் இந்தத்தளத்தில் ஒலியை சற்று
உடனடியாகவே கேட்கலாம் ஒரே நேரத்தில் பல ஒலியையும்
தேர்ந்தெடுத்து சொடுக்கி கேட்கலாம். எளிமையான முகப்பு பக்கம்
கொண்டு வலம் வருகிறது இந்தத்தளம். சத்தங்களை கேட்டால்
மட்டும் போதுமா அதை நம் அலைபேசியில் சேமிக்க வேண்டும்
என்ற எண்ணம் உள்ளவர்கள் இதை அப்படியே தரவிரக்கிக்
கொள்ளலாம்.கண்டிப்பாக இந்த தளம் உங்களுக்கு பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை தெரிந்த வித்தை கூட சில நேரங்களில் நமக்கு பயனளிப்பதில்லை அதனால் சரியாக வித்தை செய்யாதவரை நாம் திட்டவும் வேண்டாம் அவரைப்பற்றி பேசவும் வேண்டாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவின் மிக நீளமான நதி எது ? 2.பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் எது ? 3.நிலநடுக்கத்தை அறிய உதவும் கருவி என்ன ? 4.எந்த நாடு அதிக தங்க உற்பத்தி செய்கிறது ? 5.மிக முக்கியமான பணப்பயிர் எது ? 6.இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது ? 7.நிலக்கரி உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலம் எது ? 8.சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது ? 9.எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது ? 10.உயரத்தை அளவிட பயன்படும் கருவி எது ? பதில்கள்: 1.கங்கை, 2.தமிழ்நாடு,3.சீஸ்மோகிராப்,4.தென் ஆப்பிரிக்கா, 5.பருத்தி, 6.கர்நாடகம், 7.பீகார்,8.மேற்கு வங்காளம், 9.மகாராட்டிரம்,10.ஆல்டிமீட்டர்
இன்று ஜூலை 30பெயர் : சனத் ஜெயசூரியா, பிறந்தததேதி : ஜூலை 30, 1969 இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னணித் துடுப்பாளர். இவர் மாத்தறை சென் சவதியஸ் கல்லூரியில் கல்விகற்றார். புளூம்பீல்ட் அணிசார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய சனத் 1989-90 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற ஒருநாட் போட்டியில் அறிமுகமானார்.இன்று பல சாதனைகளுக்கு சொந்தகாரர்.
சுரங்கப்பாதையிலும் இனி வைஃபை ( Wi-Fi ) பயன்படுத்தலாம் விஞ்ஞானிகள் சாதனை
சுரங்கப்பாதையில் இண்டெர்நெட் கிடைக்கவில்லை, போன் சிக்னல்
கிடைக்கவில்லை என்ற பேச்சுக்கு இனி இடம் இல்லை Wi-Fi -ஐ
சுரங்கப்பாதையிலும் பயன்படுத்தி விஞ்ஞானிகள் வெற்றி
அடைந்துள்ளனர் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
சுரங்கப்பாதையில் wifi வசதி கொடுப்பதற்காக பல இலட்சம் டாலர்
பணத்தை உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் செலவழித்து வந்த
நிலையில் தற்போது இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
சிங்கப்பூர் ,பெர்லின் ,டோக்கியோ போன்ற நாடுகளில் எல்லாம்
இப்போது டியூப் மூலம் தான் சுரங்கத்தில் wifi இணைப்பு
பயன்படுத்தப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின்
டிரான்ஸிட் வயர்லஸ் LLC என்ற நிறுவனம் அமெரிக்காவின்
நீயூயார்க் மாகானத்தில் உள்ள சுரங்கப்பாதையில் இந்த
முயற்சியை தொடங்கி இன்று wifi – ஐ வெற்றிகரமாக சோதித்துள்ளது.
(Smoke detector-size) ஸ்மோக் டிடக்டர் அளவே இருக்கும்
ஆண்டனா இதற்காக பயன்படுத்தப்படுகிறது.
நீயூயார்க்-ல் இருக்கும் 271 பிளாட்பார்ம்-க்கும் சேர்த்து wifi
கொடுப்பதற்கு மொத்தமாக 200 மில்லியன் டாலர் பணத்தை
LLC நிறுவனம் நிர்ணயத்துள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்த
சேவை அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளனர்.
சுரங்கப்பாதையில் இனி இண்டெர்நெட் இணைப்பு மட்டுமல்ல
அலைபேசியும் பயன்படுத்தலாம் சிக்கனல் பற்றிய பிரச்சினை
இருக்காது.
வின்மணி சிந்தனை அடுத்தவர் பற்றி குறை கூறுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளுங்கள். நம் வெற்றிக்கு எந்தத் தடையும் இருக்காது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.உலகில் எங்கும் காண இயலாத தாவர விலங்கினங்கள் எந்த நாட்டில் உள்ளது ? 2.அயர்லாந்து நாட்டின் தலைநகரம் எது ? 3.உலகிலே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது ? 4.உலகிலேயே மிக அகலமான இரண்டாவது பெரிய கடற்கரை எங்குள்ளது ? 5.அந்தமான் தீவுகளில் உள்ள குன்றுகளில் மிகப்பெரிய குன்று எது ? 6.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ? 7.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் எப்போது நிறுவப்பட்டது? 8.இந்தியாவில் PIN Code முறை எப்போது தொடங்கப்பட்டது? 9.தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய வனவிலங்கு புகலிடம் எங்குள்ளது ? 10.கொத்தடிமை தொழிலார் ஒழிப்புச் சட்டம் இந்தியாவில் எப்போது கொண்டுவரப்பட்டது ? பதில்கள்: 1.ஆஸ்திரேலியா, 2.டப்ளின்,3.இந்தியா, 4.சென்னை மெரினா கடற்கரை,5.ஹரியட், 6.ஜானகி இராமச்சந்திரன், 7.1971 ஆம் ஆண்டு,8.1972 ஆம் ஆண்டு, 9.முதுமலை,10. 1976 ஆம் ஆண்டு
இன்று ஜூலை 29பெயர் : வ. ஐ. சுப்பிரமணியம், மறைந்ததேதி : ஜூலை 29, 2009 வடசேரி ஐயம்பெருமாள் சுப்பிரமணியம் மொழியியல் அறிஞரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும் ஆவார்.கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்.
பேஸ்புக்-ல் நமக்கென்று தனிப்பக்கம் உருவாக்க எந்த கோடிங் அனுபவமும் தேவையில்லை.
சமூக வலைதளங்களில் அதிகமான மக்களின் எண்ணிக்கையில்
வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்-ல் நமக்கென்று தனிப்பக்கம்
எந்த கோடிங் அறிவும் இல்லாமல் அழகாக உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பேஸ்புக் பயனாளர்கள் தங்களுக்கென்று தனிப்பக்கம் உருவாக்கலாம் ,
தங்களுக்கு பிடித்த படங்களை சேர்க்கலாம் வலதுபக்கம், இடது பக்கம்
மேல் கீழ் என எந்தப்பக்கத்தில் வேண்டுமானாலும் படங்களையும்
அழகான எழுத்துக்களையும் சேர்க்கலாம் எல்லாம் இலவசமாக இந்த
சேவையை வழங்க ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.pagemodo.com
இந்தத் தளத்திற்கு சென்று நம் பேஸ்புக்-ன் கணக்கை திறந்து
வைத்துக்கொண்டு நாம் பேஸ்புக்-ல் நமது பக்கத்தை வடிவமைக்கலாம்
பேஸ்புக்-ல் நமது பக்கத்தின் Background color மற்றும் styles
போன்ற அத்தனையும் நாம் மாற்றிக்கொள்ளலாம். 2 வேறுபட்ட
பக்கத்தின் layout இருக்கிறது இதில் எதுவேண்டுமோ அதைக்
கூட நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த தளத்தில் பேஸ்புக்-ன்
அழகான பக்கம் உருவாக்க நமக்கு எந்த கோடிங் அறிவும்
தேவையில்லை உடனடியாக நாம் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கலாம்.
வின்மணி சிந்தனை எல்லா மனிதருக்கும் இரண்டு குணம் இருக்கிறது, இதில் நாம் அன்பான குணத்தை மட்டுமே எல்லோருக்கும் காட்ட வேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.ஹிட்லரை சந்தித்த தமிழ்நாட்டவர் யார் ? 2.விளையாட்டு வீராங்கணை மல்லேஸ்வரி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? 3.உலகத்துன்பத்திற்கு காரணம் அச்சம் என்று கூறியவர் யார்? 4.ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய நகரம் எது ? 5.பூமியில் முதன் முதலாக தோன்றிய உயிர் எது ? 6.நாயை விட பல மடங்கு மோப்ப சக்தி உடைய உயிரினம் எது? 7.பேருந்தை கண்டுபிடித்தவர் யார் ? 8.அமெரிக்கஅதிபரின் வெள்ளைமாளிகை எப்போது கட்டப்பட்டது? 9.குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள குறைந்தபட்ச வயது என்ன ? 10.பில்லியர்ட்ஸ் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் யார் ? பதில்கள்: 1.ஜி.டி.நாயுடு, 2.ஆந்திரா,3.சுவாமி விவேகானந்தர், 4.டோக்கியோ,5.ஒற்றை செல் உயிரி புரோட்டோசோவா, 6.விலாங்கு மீன், 7.ஹென்றி போர்டு,8.11-10-1800, 9.12 வயது,10.கீத் சேத்தி
இன்று ஜூலை 28பெயர் : பிரான்ஸ் பேர்டினண்ட், பிறந்ததேதி : ஜூலை 28, 1914 ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசரும், ஹங்கேரி, மற்றும் பொஹேமியாவின் இளவரசரும் ஆவார். அத்துடன் 1896 முதல் இறக்கும் வரையில் ஆஸ்திரிய-ஹங்கேரியின் பட்டத்துக்கு உரியவரும் ஆவார்.
104 வயதான பாட்டியின் நெஞ்சம் உருக்கிய டிவிட்டர் செய்தி
இங்கிலாந்தில் வசிக்கும் 104 வயதான பாட்டியின் கடைசி டிவிட்டர்
செய்தியைப் பற்றித் தான் இந்தப்பதிவு.
சமூகவலைதளங்களில் தனி இடத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும்
டிவிட்டரின் மிகப் பழமையான பயனாளர் தான் ஐவி பீன் இங்கிலாந்தில்
பிரெட்போர்ட் பகுதியில் வசிக்கும் 104 வயதான பாட்டியின் கடைசி
டிவிட்டர் செய்தி நம் நெஞ்சத்தை உருக்கும் வகையில் இருக்கிறது.
தினமும் தனது அன்றாட வேலைகளை டிவிட்டரில் பதிவதும் தான்
செல்லவிருக்கும் நிகழ்ச்சி என அத்தனையும் டிவிட்டரில் பகிர்ந்து
கொள்வது இந்த பாட்டியின் சிறப்பு.102 வயதில் தான் இந்த பாட்டி
டிவிட்டரில் இணைந்திருக்கிறார் 58,986 பேர்கள் நேற்று வரை
இவரை பின் தொடர்ந்துள்ளனர், இதுவரை 1349 செய்திகளை
டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே எனக்கு
உடல் நிலை சரியில்லை என்ற செய்தி வந்து கொண்டிருந்தது.
நேற்று இரவு சரியாக 8 மணி நேரத்திற்கு முன்பு அவர் அனுப்பிய
செய்தியில் “ இன்று காலை 12.08 மணிக்கு நான் அமைதியாக இந்த
உலகத்தில் இருந்து விடை பெறுகிறேன் ” இதுவரை என்னை பின்
தொடர்ந்த அத்தனை அன்பான நண்பர்களிடம் இருந்து விடை
பெறுகிறேன். இந்த செய்தியை கேட்ட அவரது அத்தனை நண்பர்களும்
ஐவீ பீன்- க்காக தங்களது டிவிட்டரில் அஞ்சலியை செலுத்தி
வருகின்றனர். சமூக வலைதளங்களில் அத்தனை முக்கியமான
செய்திகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்கு இந்த பாட்டி
ஒரு முன் உதாரணம்.
வின்மணி சிந்தனை அன்பான மனிதன் இந்த உலகை விட்டுச் சென்ற பின்னும் புகழுடன் வாழ்வான் என்பது சத்தியமான உண்மை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி அதிகமாக கிடைக்கும் இடம் எது? 2.தமிழ்நாட்டில் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது ? 3.இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ள இடம் எது ? 4.மகாபாரதத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன ? 5.எட்டு முறை மத்திய பட்ஜெட்-ஐ தாக்கல் செய்தவர் யார் ? 6.இந்தியாவில் முதன் முதலாக கார் சாலை எங்கு போடப்பட்டது? 7.இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை எப்போது பெற்றது? 8.’புலிட்சர்’ விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது? 9.முதல் சர்வதேச திரைப்பட விழா எந்த ஆண்டு நடைபெற்றது? 10.கால்பந்து விளையாட்டு எந்த ஆண்டு ஆசிய விளையாட்டில் சேர்க்கப்பட்டது ? பதில்கள்: 1.நெய்வேலி, 2.வேடந்தாங்கல்,3.புதுடெல்லி,4.ஜெயா, 5.மொரார்ஜி தேசாய், 6.கல்கத்தா 1825 ஆம் ஆண்டு, 7.1959 ஆம் ஆண்டு,8.பத்திரிகைத் துறை,9.1952 ஆம் ஆண்டு, 10.1951 ஆம் ஆண்டு
இன்று ஜூலை 27பெயர் : தேசிக விநாயகம் பிள்ளை, பிறந்ததேதி : ஜூலை 27, 1876 20 நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்டகவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என பலவற்றை இயற்றியவர்.
வயர்களை இணைக்க தொழில்நுட்பத்தில் ஒரு புதுமை
வயர்களை இணைப்பதில் எங்கு பார்த்தாலும் ஒரே குழப்பமாகவும்,
முடிச்சுகளுடன் இருக்கும் இந்த பெரும் பிரச்சினைக்கு எளிமையாக
புதுமையான முறையில் தற்போது தீர்வு கண்டிருக்கின்றனர் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினி அலுவலகத்தில் மட்டுமல்ல எங்கு அதிகமாக வயர்களைப்
பயன்படுத்த வேண்டி இருக்கிறதோ அங்கெல்லாம் நமக்கு சில
நேரங்களில் தலைசுற்றும் அளவிற்கு வயர்களின் முடிச்சுகள்
பார்க்கவே முடியாதபடி இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு எளிய
முறையில் புதுமையாக தீர்வு வந்துள்ளது.வயர்களை மொத்தமாக
இணைக்க நாம் பயன்படுத்துவது போல் அதே இணைப்பில்
இப்போது இலை வடிவம் மற்றும் சிறு பொம்மை என சற்றே
வித்தியாசமாக மாற்றி உள்ளனர். ஐபாட் வயர் முதல் யூஎஸ்பி
வயர் வரை அனைத்தையும் பல்வேறு வடிவங்களில் எப்படி
எல்லாம் வயரின் முடிச்சுகளை இணைக்கலாம் என்று பார்க்கும்
போது சற்று வித்தியாசமாகவே இருக்கிறது.வயர்களை இணைக்கும்
பல்வேறு வடிவங்களின் படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை ஒருவருக்கு மட்டும் தான் தீங்கு இழைக்கிறோம் என்று நாம் செய்யும் காரியங்கள் பல நேரங்களில் அனேக மக்களைப் பாதிக்கிறது அதனால் யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்த ஆண்டின் பெண்மனி என்ற சங்கம் எப்போது தொடங்கப்பட்டது ? 2.நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார் ? 3.ஆசியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தீபகற்பம் எது ? 4.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது ? 5.தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது ? 6.வருமான வரி செலுத்தாத நாடு எது ? 7.ஜெருசலம் எந்த நாட்டின் தலைநகரமாகும் ? 8.பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது ? 9.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின் பெயர் என்ன ? 10.ரேடியத்தை கண்டிபிடித்த மேரிகியூரியின் சொந்தநாடு எது? பதில்கள்: 1.1945 ஆம் ஆண்டு, 2.கிரேக்கர்கள்,3.இந்தியா, 4.அமெரிக்கா,5.ஸ்வீடன், 6.குவைத், 7.இஸ்ரேல்,8.ரஷ்யா, 9.மாலைப் பாடல்கள்,10.போலந்து
இன்று ஜூலை 26பெயர் : மு. கு. ஜகந்நாதராஜா, பிறந்ததேதி : ஜூலை 26, 1933 ஒரு பன்மொழிப் புலவர். தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,சமஸ்கிருதம்,பாலி, ஹிந்தி, ஆங்கிலம், துளு எனப் பல இந்திய மொழிகளை அறிந்தவர். மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத ( சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988 ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்தார்.1989 ஆம் ஆண்டு இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றார். முதன் முதலில் தமிழில் மொழிபெயர்ப்பு விருது பெற்ற நூல்.
47 மில்லியன் வழிகாட்டி புத்தகங்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.
புத்தகங்களை இணையத்தில் தேடுவது எளிதான காரியம் என்றாலும்
இங்கே ஒன்றல்ல இரண்டல்ல 47 மில்லியன் புத்தகங்களை ஒரே
இடத்தில் இருந்து தேடலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
எந்த புத்தகம் வேண்டும் , புத்தகத்தைப்பற்றிய எந்த விபரம் உங்களுக்குத்
தெரியும் இது மட்டும் போதும் இனி அந்த புத்தகம் சில நிமிடங்களில்
உங்கள் கையில் சற்றே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. காலத்தின்
வேகமான மாற்றம் தான் இந்தத் தளத்திற்குச் சென்று நாம் எளிதாகத்
தேடலாம்.
இணையதள முகவரி : http://theguidedb.com
தேடவேண்டிய புத்தகத்தின் பெயரை மட்டும் கொடுத்து Search என்ற
பொத்தானை அழுத்தினால் மட்டும் போதும் உடனடியாக நமக்கு
இலட்சக்கணக்கான புத்தகங்களை கொட்டிக் கொடுக்கிறது. மற்ற
தளங்களை விட இந்தத் தளத்தில் இருந்து கொண்டே வேறு எந்தத்
தளத்திற்கும் செல்லாமல் நேரடியாக புத்தகங்களை தரவிரக்கலாம்.
உதாரணமாக நாம் Java என்பதை கொடுத்து தேடினோம். வரும்
முடிவை படம் -2ல் காட்டியுள்ளோம். இதிலிருக்கும் Download என்ற
பொத்தானை அழுத்தி நாம் நேரடியாக தரவிரக்கலாம். கண்டிப்பாக
இந்தத் தளம் மாணவர்கள் , ஆசிரியர்கள் என அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை நல்ல காரியம் செய்ய வேண்டும் சில நேரங்களில் நாம் செய்யும் முயற்சி வெற்றி இழுபறியாக இருந்தாலும் முடிவில் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் எது ? 2.தமிழ்நாட்டில் எந்த வகை மரம் அதிக அளவில் காகிதம் செய்யப் பயன்படுகிறது ? 3.நாரிலிருந்து காகிதம் தயாரிப்பது எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது ? 4.பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ? 5.’காந்தி’ திரைப்படத்தை தயாரித்தவர் யார் ? 6.1951-1952-ல் ஆசிய விளையாட்டுப்போட்டி எங்கு நடைபெற்றது? 7.’கிரிக்கெட் மை ஸ்டைல் ‘ என்ற நூலின் ஆசிரியர் யார்? 8.வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது ? 9.’அர்ஜூனா ‘ பதக்கம் எந்தத் துறையில் இருப்பவருக்கு வழங்கப்பப்படுகிறது ? 10.இந்தியாவில் தேக்கு மரம் எங்கு அதிகமாக கிடைக்கிறது ? பதில்கள்: 1.கி.பி. 16 ஆம் நூற்றாண்டு, 2.யூகலிப்டஸ்,3.எகிப்து, 4.மும்பை,5.ரிச்சர்டு அட்டன்பரோ, 6.டெல்லி, 7.கபில்தேவ்,8.கயத்தாறு, 9.விளையாட்டுத்துறை,10.கேரளா
இன்று ஜூலை 25பெயர் : ஜிம் கார்பெட், பிறந்ததேதி : ஜூலை 25, 1875 புகழ்பெற்ற புலி வேட்டைக்காரர், இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனி தாலில் பிறந்தவர்.ஆங்கில வம்சாவளியினர். இயற்கையைப் பேணுவதில்ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர். புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர்.
சமையலறையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபேட் சிறப்பு வீடியோ
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான புதிய ஐபேட்
மாடல் தற்போது வெளியாகியுள்ளது வீடியோவுடன் இதைப்பற்றிய
சிறப்புப் பதிவு.
வெளிவந்த சில நாட்களிலே அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து
இன்று வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆப்பிள்
நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான ஐபேட் மாடல் இப்போது
வெளிவந்துள்ளது. இதில் என்ன புதுமை என்றால் சமையலறையில்
நாம் இந்த ஐபேட்-ஐ பயன்படுத்தலாம் பிரத்யேகமாக இதற்காக
வடிவமைக்கப்பட்டுள்ளது. சமையலறையில் இருந்து கொண்டு
ஐபேட் -ஐ பயன்படுத்தினால், தண்ணீர் இதன் மேல் பட்டாலும்
பாதிப்பு ஏதும் இருக்காத வண்ணம் இதன் மேல் உயர்தர
பிளாஸ்டிக்கிலான மேல்பாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐபேட்-ல் விரலால் தொட்டு நாம் சாம்பார் எப்படி வைக்க
வேண்டும் என்பதை கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை,
இதைப்பற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை நம் நாட்டை சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டு பயணிகளிடம் பல்லைக்காட்டி பணம் கேட்காதீர்கள், நாம் பிச்சைகாரர்கள் அல்ல தானம் கொடுப்பவர்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.அறிவியல் மையங்களின் 2 -வது உலக மாநாடு எங்கு நடைபெற்றது? 2.1998 -ம் ஆண்டுக்கான ஞானபீட விருதைப் பெற்றவர் யார் ? 3.கணிப்பொறி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது ? 4.ஜி-15 -ன் 9 வது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது ? 5.5- வது தேசிய விளையாட்டுப்போட்டி எங்கு நடந்தது ? 6.இந்தியாவில் எப்போது தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டது ? 7.ஆசிய விளையாட்டுப்போட்டி முதலில் எங்கு ஆரம்பிக்கப்பட்டது? 8.’துறவை விட இல்லறமே நல்லறம்’ என்று போதிக்கும் மதம் எது? 9.இந்தியாவின் முதல் வானெலிநிலையம் எங்கு தொடங்கப்பட்டது? 10.விண்வெளியில் மனிதனுக்கு முன் பறந்த உயிரினம் எது ? பதில்கள்: 1.கல்கத்தாவில், 2.கிரிஷ் கர்னாட்,3.1952 -ம் ஆண்டு, 4.ஜமைக்காவில்,5.மணிப்பூரில், 6.ஜூலை 1,1854, 7.1951 -டெல்லியில்,8.சீக்கிய மதம், 9.சென்னை,10.நாய்
இன்று ஜூலை 24பெயர் : கார்ல் மலோன், பிறந்ததேதி : ஜூலை 24, 1963 முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த வலிய முன்நிலைகளின் ஒன்றாவார் என்று பல கூடைப்பந்து நிபுணர்கள் கூறுகின்றனர்.என்.பி.ஏ. வரலாற்றில் இரண்டாவது மிகவும் அதிக புள்ளிபெற்றவர் ஆவார்
ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க
இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல
ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள்
நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை
பாதுக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணினியில் புகுந்து
விளையாடுகிறான் என்று சொல்லும் பெற்றோர்கள் முதலில் புரிந்து
கொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை மட்டும்
வளர்க்க கூடிய இடம் இணையதளம் அல்ல, அவர்களின்
எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் ஒரு இடம் தான் இணையதளம்.
இணையதளத்தில் உங்கள் குழந்தை செய்யும் அனைத்தையும்
நேரடியாக பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு சில உண்மை
புரியும் உங்கள் குழந்தை கூகுளில் சென்று ஏதாவது பாடம்
அல்லது விளையாட்டு சம்பந்தமாக தேடினாலும் வரும் முடிவில்
சில ஆபாச இணையதளங்களும் இருக்கும் இது தான் நிதர்சனமான
உண்மை. இதிலிருந்து உங்கள் கணினியை மட்டுமல்ல நம்
குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் தான் நாம்
இப்போது இருக்கிறோம்.
எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாமாகவே
ஆபாசதளங்களை நம் கணினியில் வராமல் தடை செய்யலாம்
இதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றிய
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். கண்டிப்பாக
இந்தப் பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும்
பாதுகாப்பாகவும் இருக்கும்.
வின்மணி சிந்தனை உங்களை திட்டியவருக்காக ஒரு நிமிடம் மனதால் மன்னிப்பு அளியுங்கள், அவர்களின் அறியாமை விரைவில் அகலும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.எந்த நம்பரைக் குறிக்கும் எழுத்து ரோமானிய மொழியில் இல்லை ? 2.இந்தியாவுக்குள் ஊடுருவிய முதல் ஐரோப்பியர் யார் ? 3.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற அன்னிபெசண்ட அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ? 4.கோடைகாலத்தில் கானல் நீர் தோன்ற காரணம் என்ன ? 5.பைரோ மீட்டர் என்ற கருவி எதற்க்குப் பயன்படுகிறது ? 6.படகு ஒட்டம் எந்த மாநிலத்தின் பண்டிகை விளையாட்டு ? 7.இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் யார்? 8.மனித உடலில் எவ்வளவு நரம்புகள் உள்ளன ? 9.உலகிலேயே ஒரே ஒரு இந்துமத நாடு எது ? 10.தமிழ்நாட்டில் குழந்தைகள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் யார் ? பதில்கள்: 1.பூஜ்யம், 2.அலெக்ஸாண்டர்,3.அயர்லாந்து, 4.ஒளி பிரதிபலிப்பு,5.உயர் வெப்ப நிலையை அளக்க, 6.கேரளா,7.பெண்டிங் பிரபு,8.72 ஆயிரம் நரம்புகள், 9.நேபாளம்,10.அழ.வள்ளியப்பா
இன்று ஜூலை 23பெயர் : பெ. வரதராஜுலு நாயுடு, மறைந்ததேதி : ஜூலை 23, 1957 இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மருத்துவரும், பத்திரிக்கையாளருமான இவர் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.