Archive for ஜூலை 20, 2010

ஜீமெயிலில் பாஸ்வேர்ட் திருட்டை தடுக்க நம் மொபைல் எண்ணை கொடுக்கலாம்.

நம் இமெயிலின் கடவுச்சொல் மறந்துவிட்டது என்றால் உடனடியாக
ஜீமெயிலில் சென்று கடவுச்சொல் மறந்துவிட்டது என்று கூறினால்
போதும் நம் அலைபேசிக்கு ஜீமெயில் இருந்து கோடு ஒன்றை
அனுப்பி விடுகின்றனர். இதில் வரும் கோடை பயன்படுத்தி புதிய
கடவுச்சொல்லை உருவாக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான்
இந்தப் பதிவு.

படம் 1

ஜீமெயில் செக்யூரிட்டி சற்று வளர்ந்து கொண்டு தான் வருகிறது.
நம் அலைபேசி எண்ணை நம்முடைய ஜீமெயில் கணக்கில் சேர்ப்பதன்
மூலம் எளிதாக நம் கடவுச்சொல்லை மாற்றி அமைக்கலாம்.

https://www.google.com/accounts/ManageAccount

படம் 2

படம் 3

கூகுளின் Manage Account  என்ற இந்த பக்கத்திற்குச் சென்று
நம் ஜீமெயில் கணக்கை திறந்து கொள்ளவும். அடுத்து வரும்
திரை படம் 1- ல் காட்டியபடி இருக்கும் இதில் Change Password Recovery
options என்பதை சொடுக்கவும். அடுத்து ஒரு முறை Verify- க்காக
நம் கணக்கின் கடவுச்சொல்லை கூகிள் கேட்கும் அதற்கும் நம்
கடவுச்சொல்லை கொடுத்ததும் படம் 2-ல் உள்ளது போல் திரையில்
வரும் இதில் SMS என்பதில் Add a Mobile Phone Number என்பதை
சொடுக்கியதும் படம் 3-ல் உள்ளது போல் வரும் இதில் நாம்
இருக்கும் நாட்டையும் நம் அலைபேசி எண்ணையும் கொடுத்துவிடவும்
Save என்ற பொத்தானை அழுத்தி சேமித்துவிட்டு வெளியே
வரவும். இப்போது நம் கடவுச்சொல் மறந்துவிட்டால் கூகுளின்
ஜீமெயில் தளத்திற்கு சென்று Can’t access your account? என்பதை
சொடுக்கி நம் பயனாளர் பெயரை கொடுத்தால் மட்டும் போதும்
உடனடியாக ஒரு நான்கு இலக்க எண்ணை நம் அலைபேசிக்கு
அனுப்பி விடுகின்றனர் அடுத்துவரும் திரையில் நாம் அலைபேசியில்
வந்திருக்கும் எண்ணை கொடுத்து புதிய கடவுச்சொல் உடனடியாக
உருவாக்கிக் கொள்லலாம்.

வின்மணி சிந்தனை
வேண்டாம் என்று கூறினாலும் இறைவன் ஒருவருக்கு
செல்வம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படி
வேண்டுமானாலும் கொடுப்பார்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பசுவின் கன்றின் மூலம் தயாரிக்கப்படும் மருந்து எது ? 
2.முதல் புத்தசமய மாநாடு எங்கு நடைபெற்றது ? 
3.கைகளால் தாக்கும் விலங்கு எது ? 
4.பரங்கிக் கொடியின் வயது என்ன ?
5.’மை ட்ரூத்’ என்ற நூலை எழுதியவர் யார் ?
6.மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மறுபெயர் என்ன ?
7.முகமது நபி பிறந்த இடம் எது ? 
8.முட்டைக்கோசின் வயது என்ன ?  
9.1996-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
10.தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கியவர் யார் ?
பதில்கள்:
1.பெரியம்மை தடுப்பூசி மருந்து, 2.ராஜக்ருஷம்,3.கங்காரு,
4.180 நாட்கள்,5.இந்திராகாந்தி,6.திரெளபதை,7.மெக்கா,
8.180 நாட்கள்,9.அட்லாண்டா,10.அம்பேத்கர்.
இன்று ஜூலை 19  
பெயர் : ஆதவன்,
மறைந்ததேதி : ஜூலை 19, 1987
1960-களில் எழுதத் துவங்கி, தமிழ் சிறுகதை 
உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை
நிகழ்த்தியவர். இந்திய இரயில்வேயில் சில
ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, டெல்லியில் 
உள்ள 'நேஷனல் புக் டிரஸ்டின்' தமிழ்ப் பிரிவின்
துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடெமி
விருதினை அவருடைய "முதலில் இரவு வரும்" என்ற 
சிறுகதைக்காக வழங்கியது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

ஜூலை 20, 2010 at 7:56 பிப 13 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2010
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...