ஜீமெயிலில் பாஸ்வேர்ட் திருட்டை தடுக்க நம் மொபைல் எண்ணை கொடுக்கலாம்.

ஜூலை 20, 2010 at 7:56 பிப 13 பின்னூட்டங்கள்

நம் இமெயிலின் கடவுச்சொல் மறந்துவிட்டது என்றால் உடனடியாக
ஜீமெயிலில் சென்று கடவுச்சொல் மறந்துவிட்டது என்று கூறினால்
போதும் நம் அலைபேசிக்கு ஜீமெயில் இருந்து கோடு ஒன்றை
அனுப்பி விடுகின்றனர். இதில் வரும் கோடை பயன்படுத்தி புதிய
கடவுச்சொல்லை உருவாக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான்
இந்தப் பதிவு.

படம் 1

ஜீமெயில் செக்யூரிட்டி சற்று வளர்ந்து கொண்டு தான் வருகிறது.
நம் அலைபேசி எண்ணை நம்முடைய ஜீமெயில் கணக்கில் சேர்ப்பதன்
மூலம் எளிதாக நம் கடவுச்சொல்லை மாற்றி அமைக்கலாம்.

https://www.google.com/accounts/ManageAccount

படம் 2

படம் 3

கூகுளின் Manage Account  என்ற இந்த பக்கத்திற்குச் சென்று
நம் ஜீமெயில் கணக்கை திறந்து கொள்ளவும். அடுத்து வரும்
திரை படம் 1- ல் காட்டியபடி இருக்கும் இதில் Change Password Recovery
options என்பதை சொடுக்கவும். அடுத்து ஒரு முறை Verify- க்காக
நம் கணக்கின் கடவுச்சொல்லை கூகிள் கேட்கும் அதற்கும் நம்
கடவுச்சொல்லை கொடுத்ததும் படம் 2-ல் உள்ளது போல் திரையில்
வரும் இதில் SMS என்பதில் Add a Mobile Phone Number என்பதை
சொடுக்கியதும் படம் 3-ல் உள்ளது போல் வரும் இதில் நாம்
இருக்கும் நாட்டையும் நம் அலைபேசி எண்ணையும் கொடுத்துவிடவும்
Save என்ற பொத்தானை அழுத்தி சேமித்துவிட்டு வெளியே
வரவும். இப்போது நம் கடவுச்சொல் மறந்துவிட்டால் கூகுளின்
ஜீமெயில் தளத்திற்கு சென்று Can’t access your account? என்பதை
சொடுக்கி நம் பயனாளர் பெயரை கொடுத்தால் மட்டும் போதும்
உடனடியாக ஒரு நான்கு இலக்க எண்ணை நம் அலைபேசிக்கு
அனுப்பி விடுகின்றனர் அடுத்துவரும் திரையில் நாம் அலைபேசியில்
வந்திருக்கும் எண்ணை கொடுத்து புதிய கடவுச்சொல் உடனடியாக
உருவாக்கிக் கொள்லலாம்.

வின்மணி சிந்தனை
வேண்டாம் என்று கூறினாலும் இறைவன் ஒருவருக்கு
செல்வம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படி
வேண்டுமானாலும் கொடுப்பார்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பசுவின் கன்றின் மூலம் தயாரிக்கப்படும் மருந்து எது ? 
2.முதல் புத்தசமய மாநாடு எங்கு நடைபெற்றது ? 
3.கைகளால் தாக்கும் விலங்கு எது ? 
4.பரங்கிக் கொடியின் வயது என்ன ?
5.’மை ட்ரூத்’ என்ற நூலை எழுதியவர் யார் ?
6.மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மறுபெயர் என்ன ?
7.முகமது நபி பிறந்த இடம் எது ? 
8.முட்டைக்கோசின் வயது என்ன ?  
9.1996-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
10.தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கியவர் யார் ?
பதில்கள்:
1.பெரியம்மை தடுப்பூசி மருந்து, 2.ராஜக்ருஷம்,3.கங்காரு,
4.180 நாட்கள்,5.இந்திராகாந்தி,6.திரெளபதை,7.மெக்கா,
8.180 நாட்கள்,9.அட்லாண்டா,10.அம்பேத்கர்.
இன்று ஜூலை 19  
பெயர் : ஆதவன்,
மறைந்ததேதி : ஜூலை 19, 1987
1960-களில் எழுதத் துவங்கி, தமிழ் சிறுகதை 
உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை
நிகழ்த்தியவர். இந்திய இரயில்வேயில் சில
ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, டெல்லியில் 
உள்ள 'நேஷனல் புக் டிரஸ்டின்' தமிழ்ப் பிரிவின்
துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடெமி
விருதினை அவருடைய "முதலில் இரவு வரும்" என்ற 
சிறுகதைக்காக வழங்கியது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

சூர்யகண்ணன் வலைப்பூவில் கணினி கொள்ளையர்கள் அட்டகாசம் மிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம்.

13 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Abbu  |  8:53 பிப இல் ஜூலை 20, 2010

  But once they hack our ID, what’s the point of giving this? They can update their mobile#. Please advice.

  மறுமொழி
  • 2. winmani  |  11:53 பிப இல் ஜூலை 20, 2010

   @ Abbu
   சரி தான் கணினி கொள்ளையர்கள் மொபைல் எண்ணை இல்லாமல் செய்து விடலாம். ஆனால் இதில் இருக்கும் பயன் என்னவென்றால் நாம் எந்த தேதிவரை நம் மொபைல் எண்
   கொடுத்திருந்தோம் என்ற தகவலை மட்டும் கூறினால் கூட உடனடியாக நாம் கடவுச்சொல் புதிதாக உருவாக்கலாம். உதாரணமாக ஜூலை 18 -ஆம் தேதி வரை எனக்கு கடவுச்சொல் சரியாக வேலை செய்தது இப்போது வேலை செய்ய வில்லை என்றதும் அவர்கள் உங்கள் அலைபேசிக்கு நான்கு இலக்க எண்ணை அனுப்ப கோரலாம்
   அவர்கள் அனுப்பியதும் நாம் கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளலாம்.
   மிக்க நன்றி

   மறுமொழி
   • 3. inamul hasan  |  5:31 முப இல் ஜூலை 21, 2010

    superb

 • 4. asfersfm  |  1:50 முப இல் ஜூலை 21, 2010

  ஆமாம். கூகிள் ஹெல்ப்பில்(help) தேடிப்பார்த்தால் ஏதும் கிடைக்கலாம். நானும் தேடுகிறேன் நீங்களும் தேடுங்கள் . தகவல் தெரிந்தால் பகிர்கிறேன்.

  மறுமொழி
 • 5. LVISS  |  2:05 முப இல் ஜூலை 21, 2010

  USEFUL INFORMATION . I HAVE GIVEN ONLY MY OTHER E MAI ID. BUT IS THERE A CHANCE OF THE HACKER GETTING OUR MOBILE NUMBER AND MISGUIDING US.

  மறுமொழி
  • 6. winmani  |  9:54 முப இல் ஜூலை 21, 2010

   @ LVISS
   பதில் ஏற்கனவே சொல்லியாச்சு பாருங்க ஐயா ,
   நன்றி

   மறுமொழி
 • 7. தாமஸ் ரூபன்  |  3:29 முப இல் ஜூலை 21, 2010

  கணினி கொள்ளையர்கள் நம்முடைய ஜி மெயில் பாஸ்வேர்ட்டை ஹேக் செய்த பிறகு அதை உபோயோகப்படுத்தி நம்முடைய செல்போன் எண் மற்றும் விவரங்களை மாற்றி விட முடியாத? அப்போது என்ன செய்யலாம்?

  நன்றி சார் .

  மறுமொழி
  • 8. winmani  |  9:53 முப இல் ஜூலை 21, 2010

   @ தாமஸ் ரூபன்
   ஏற்கனவே இதற்கு பதில் சொல்லியாச்சு , அதாவது என்றைக்கு வரை அக்கவுண்ட் உங்கள் வசம் இருந்ததோ
   அதுவரை அலைபேசி எண் மாற்றி இருக்க வாய்ப்பு இல்லை தானே , அந்த தேதி வரை கூறினால் போதும்
   உங்கள் அலைபேசி எண்ணை மாற்றி இருந்தாலும் உங்களுக்கு கடவுச்சொல் மாற்றுவதற்கான கோடை
   கூகுளில் இருந்து அனுப்பப்படும்.
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 9. தாமஸ் ரூபன்  |  3:51 முப இல் ஜூலை 21, 2010

  //கைகளால் தாக்கும் விலங்கு எது ?
  கங்காரு,//

  கங்காரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த நான்கு கால்களைக் கொண்ட விலங்கு ஆகும். கங்காருவின் முன்னங்கால்களை கைகள் என்று கூறலாமா?
  நன்றி சார் .

  மறுமொழி
  • 10. winmani  |  9:56 முப இல் ஜூலை 21, 2010

   @ தாமஸ் ரூபன்
   மிகசரி ,
   முன்னங்கால் இரண்டையும் தான் கைகள் என்று கூறுகின்றனர்.,
   நன்றி

   மறுமொழி
 • 11. K. Jayadeva Das  |  7:42 முப இல் ஜூலை 21, 2010

  Recently, Blogger Suryakannan’s all passwords [Gmail, Facebook, Twitter etc.,] were stolen and hacked. How can we avoid such a situation?

  //வேண்டாம் என்று கூறினாலும் இறைவன் ஒருவருக்கு
  செல்வம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படி
  வேண்டுமானாலும் கொடுப்பார்.//

  God has already provided sufficiently for all living beings and there is no scarcity for anybody and nobody is poor. All living beings except human, take what is absolutely necessary for the maintenance and leave the rest untouched. [ An animal can go very near a Lion which not hungry and it will not attack!] But what human beings are doing? They are greedy, and accumulate wealth for one million generations though they live only for few more years. Not only that they exploit the natural resources beyond their requirement which is very harmful to the environment that supports life on earth. This should be stopped.

  மறுமொழி
 • 13. தமிழார்வன்  |  6:26 பிப இல் ஜூலை 21, 2010

  நண்பர் அவர்களுக்கு வணக்கம்,

  ஜீமெயிலில் பாஸ்வேர்ட் திருட்டை தடுக்க அலைபேசி எண்ணை கொடுப்பதன் மூலம் என்ன பயனை அடையலாம் என்பதை இந்த பதிவில் தெளிவான படங்களையும், விரிவான தகவல்களையும் இணைத்து கொடுத்தமைக்கு நன்றி கூறுகிறேன்.

  நண்பரே, அலெக்சா ரேங்க் பட்டியல் என்றால் என்ன?
  அது எதன் அடிப்படையில் பிளாக்குகளின் தரத்தை நிர்ணயம் செய்கிறது? நமது பிளாக்கின் தரத்தை எப்படி பார்ப்பது என்பது பற்றி சொல்லுங்களேன்.

  அன்புடன்
  தமிழார்வன்.

  அன்புடன் தமிழார்வன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,752 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2010
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: