Archive for ஓகஸ்ட் 22, 2010
ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.
லினக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூகுள்
நிறுவனம் அறிவித்துள்ளது. லினக்ஸ்-ல் ஜீமெயில் வாடிக்கையாளர்கள்
இனி வாய்ஸ்ஸ் மற்றும் வீடியோ சாட் பயன்படுத்தலாம். லினக்ஸ்-ல்
இந்த சேவையை சேர்ப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவு.
வைரஸ் தாக்காத பாதுகாப்பான இலவச ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்ற
வகையில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வரும் லினக்ஸ்
ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் ஜீமெயில் பயனாளர்கள் இனி வாய்ஸ்
மற்றும் வீடியோ சாட் செய்யும் வசதி சேர்ந்துள்ளது. உபுண்டு
மற்றும் லினக்ஸ்-ன் அப்டேட் ஆக வெளிவரும் தற்போதையை
அனைத்து பதிப்புகளிலும் நாம் இந்த சேவையைப்பயன்படுத்தலாம்.
இந்த வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் சேவையை சேர்ப்பதற்கு
கூகுளின் இந்தப்பக்கத்திற்கு செல்லவும்.
வரும் திரையில் Install voice and video chat என்ற பொத்தானை
அழுத்தவும். அடுத்து நம் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட்-ங்கிற்கு
தேவையான கோப்பு பதிவிறக்கம் செய்து நம் கணினியில்
நிறுவிக்கொள்ளவும். இனி எளிதாக நாம் நம்முடைய ஜீமெயிலில்
வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் செய்யலாம்.
வின்மணி சிந்தனை தமிழரிடம் கூட தமிழில் பேசாத நபர் உண்மையான தமிழராகவும், தமிழ் அன்னையின் மைந்தர் எனவும் சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.மக்மகான் எல்லைக்கோடு எந்த நாடுகளைப்பிரிக்கிறது ? 2.இந்தியாவின் முதல் வைசிராய் யார் ? 3.இந்தியா முதன் முதலில் அனுவெடிப்பு சோதனை நடத்திய இடம் எது ? 4.தாகூர் நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது ? 5.இந்திய மண்ணில் நுழைந்த முதல் ஐரோப்பியர் யார் ? 6.புராணங்கள் எத்தனை உள்ளன ? 7.நம் உடலில் உள்ள எலும்புகளில் நீளமான எலும்பு எது ? 8.வேதிப்பொருள்களின் அரசன் யார் ? 9.சூரியனின் குறுக்களவு என்ன ? 10.கிரகங்களின் சுழற்சியை கண்டறிந்தவர் யார் ? பதில்கள்: 1. இந்தியா - சீனா,2. கானிங் பிரபு,3.ராஜஸ்தான்,4.1913, 5.அலெக்ஸாண்டர்,6.18,7.தொடை எலும்பு, 8.கந்தக அமிலம்,9.13,84,000 கி.மீ ,10.கெப்ளர்.
இன்று ஆகஸ்ட் 22பெயர் : ஆனந்த குமாரசுவாமி, பிறந்த தேதி : ஆகஸ்ட் 22, 1877 இலங்கையை சேர்ந்த ஆனந்த குமாரசுவாமி கீழைத்தேயக் கலைகளுக்கும், இந்துமதத்துக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர்,கலைத் திறனாய்வாளர் (விமரிசகர்), ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்.