Archive for ஓகஸ்ட் 19, 2010
எந்த வகை கீபோர்ட்-லும் மின்னல் வேக தட்டச்சு செய்ய புதிய வழி முறை.
தினமும் புதிது புதிதாக வரும் தட்டச்சு பலகையிலும் நாம்
திறமையான முறையில் வேகமாக தட்டச்சு செய்வது எப்படி
என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
டெஸ்க்டாப் கணினியில் மட்டும் அல்ல மடிக்கணினியிலும் நாம்
மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம், எந்த தட்டச்சு வகுப்பு
செல்ல வேண்டியதில்லை,எந்த பணச்செலவும் இல்லாமல் நம்
நேரத்தை மட்டுமே செலவு செய்து எளிதாக இருக்கும் இடத்தில்
இருந்து தட்டச்சு பலகலாம். கணினி வல்லுனர்களில் பலபேர்
தட்டச்சு செய்வதற்கு சில மணி நேரம் செலவளிக்கின்றனர்
இந்த நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் நம் தட்டச்சு வேகத்தை
அதிகப்படுத்துவதற்காகவும் ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.typinglessons-online.com/EN/
இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகை விசைப்பலகை
பயன்படுத்துகிறோம் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது
தான் அடுத்து அவர்கள் சில வகை பயிற்சிகள் கொடுக்கின்றனர்
எளிதாகவும் புதுமையாகவும் இருக்கிறது. அவர்கள் கொடுக்கும்
எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்யவேண்டும் அதில் எத்தனை
சரி என்று உடனுக்கூடனே காட்டிவிடுகின்றனர்.தட்டச்சு பலகையின்
படமும் திரையில் தெரிகிறது. தினமும் சில மணி நேரம் செலவு
செய்தால் கண்டிப்பாக நாமும் மின்னல் வேகத்தில் தட்டச்சு
செய்யலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கண்டிப்பாக இந்தப்
பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை நம் வாழ்வில் எல்லா வயதிலும் படித்துக்கொண்டே இருக்கலாம், கல்விக்கு என்றும் வயதில்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சேர மன்னர்களின் கொடியில் உள்ள சின்னம் எது ? 2.சோழ மன்னர்களின் கொடியில் உள்ள சின்னம் எது ? 3.பாண்டிய மன்னர்களின் கொடியில் உள்ள சின்னம் எது ? 4.’இந்திய தரிசனம்’ என்ற நூலின் ஆசிரியர் யார் ? 5.தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் எது ? 6.இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட வெளிநாட்டு பெண்மனி யார் ? 7.லட்சத்தீவுகள் எத்தனை தீவுகளைக்கொண்டது ? 8.’கண்ணீர் நகரம்’ எனக் குறிப்பிடப்படும் நகரம் எது ? 9.உலகிலேயே மிகப்பெரிய அஞ்சல் துறை உள்ள நாடு எது ? 10.இந்தியாவில் பிறந்த முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர் என்ன ? பதில்கள்: 1.வில்,2.புலி,3.மீன்,4.ஜவஹர்லால் நேரு, 5.ராஜராஜ சோழன், 6.அன்னிபெசன்ட்,7.27 தீவுகள், 8.ஜெருசலேம், 9.இந்தியா,10.துர்கா
இன்று ஆகஸ்ட் 19பெயர் : சங்கர் தயாள் சர்மா, பிறந்ததேதி : ஆகஸ்ட் 19, 1918 இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.