Archive for செப்ரெம்பர், 2010

விளையாட்டு செய்திகளை உங்கள் பிளாக்-ல் தெரிய வைப்பது எப்படி

உலக அளவில் நடக்கும் அத்தனை விளையாட்டு செய்திகளையும்
உங்கள் பிளாக்-ல் தெரிய வைக்கலாம்  அப்போதைய செய்திகள்
தானகவே மாறி கொண்டு இருக்கும். நம் பிளாக் அல்லது
இணையதளத்தில் இதை எப்படி சேர்க்கலாம் என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.


படம் 1

விளையாட்டு செய்திகளை ஒவ்வொரு தளமாக சென்று பார்க்க
வேண்டி இருக்கிறது இந்த விளையாட்டு செய்திகளை என் பிளாக்-ல்
தெரிய வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் அனைவருக்கும்
கூகுள் வெப் எலமெண்ட்ஸ் ( Google web elements ) – நமக்கு இந்த
சேவையை இலவசமாக கொடுக்கிறது. பல பேர் இந்த சேவையைப்
பயன்படுத்தி இருக்கலாம்.  வெப் எலமெண்ட்ஸ் பற்றி அறிய விரும்பும்
புதியவர்களுக்காக இந்தப்பதிவு.

முகவரி : http://www.google.com/webelements/news/

படம் 2

படம் 3

கூகுள் வெப் எலமெண்ட்ஸ் -ன் இந்தப்பக்கத்திற்கு சென்று நாம்
படம் 2-ல் காட்டியபடி Size என்பதில் விரும்பும் அளவை தேர்ந்தெடுத்து
அடுத்து Sports என்பதை தேர்ந்த்டுத்துக்கொள்ளவும். அடுத்து படம் 1-ல்
காட்டியபடி Preview என்பது தெரியும்.  அடுத்து படம் 3-ல் காட்டியபடி
இருக்கும் கோடிங் -ஐ காப்பி செய்து நம் பிளாக் அல்லது இணைய
தளத்தில் எங்கு வேண்டுமோ அங்கு பயன்படுத்தலாம். வேர்டுபிரஸ்-ல்
இதைப்பயன்படுத்த இப்போதைக்கு அனுமதியில்லை.

வின்மணி சிந்தனை
மது அருந்துபவன் தன் சந்தோஷத்திற்காக தன் குடும்ப
அமைதியை கெடுக்கிறான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எந்த நாட்டிற்கு மூன்று தலைநகரங்கள் உள்ளன ?
2.இந்தியாவின் மிக நீளமான இரயில் பாதை எது ? 
3.பெரியார் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
4.ரஷ்யாவின் மிக நீளமான நதி எது ?
5.புனித பூமி என்று உலக அரங்கில் கூறப்படும் நாடு எது ?
6.சர்வதேச நதி எது ? 
7.புறா எதனுடைய அடையாளமாக கருதப்படுகிறது ? 
8.உலகிலேயே அதிகமான வாக்காளர்களை கொண்ட நாடு எது?
9.விசைத்தறியை கண்டுபிடித்த அறிவியல் வித்தகர் யார் ?
10.சேக்கிழாருக்கு எங்கு கோவில் உள்ளது ? 
பதில்கள்:
1.தென் அமெரிக்கா, 2.திருவனந்தபுரம் -கெளஹாத்தி,3.கேரளா,
4.வால்கா, 5.பாலஸ்தீனம்,6.ரைன்,7.அமைதி, 8.இந்தியா,
9.ஸ்பின்டன்,10.குன்றத்தூர்.
இன்று செப்டம்பர் 30 
நாள் : செப்டம்பர் 30, 2003
தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்ட நாள்
விக்கிப்பீடியா என்பது தளையற்ற உள்ளடக்
-கங்களைக் கொண்ட ஒரு இலவச வலைத்தளம்
மற்றும் கூட்டு முயற்சியால் பல மொழிகளில்
கட்டமைக்கப்படும் கலைக்களஞ்சியமாகும்.
தமிழர்களுக்காக தன் சேவையை தமிழிலும் ஆரம்பித்த
மகத்தான நாள்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

செப்ரெம்பர் 30, 2010 at 10:25 பிப 8 பின்னூட்டங்கள்

வெவ்வெறு ரிசொல்யூசன்களில் நம் இணையதளம் எப்படி இருக்கும்

நம் இணையதளம் வெவ்வெறு கணினிகளில் உள்ள ரிசொல்யூசனுக்கு
( Resolutions ) தகுந்தபடி எப்படி தெரியும் என்பதை எளிதாக பார்க்கலாம்
எப்படி  என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஒவ்வொரு கணினியின் திரைக்கும்( Monitor) தகுந்தபடி திரையின்
ரிசொல்யூசன் மாறி இருக்கும் இப்படி மாறி இருக்கும் ரிசொல்யூசனில்
நம் இணையதளம் எப்படி தெரிகிறது என்பதை எளிதாக அறியலாம்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://viewlike.us

படம் 2

இந்ததளத்திற்கு சென்று நம் இணையதள முகவரியை வலது பக்கத்தின்
மேல் இருக்கும் URL என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள்
கொடுத்து படம் 2-ல் உள்ளபடி எந்த ரிசொல்யூசன் வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்து Check up என்ற பொத்தானை அழுத்தவும் உடனடியாக
நமக்கு நாம் குறிப்பிட்ட ரிசொல்யூசனில் நம் தளம் எப்படி தெரியும்
என்பதைக்காட்டும் எந்த கணக்கும் தேவையில்லை எளிதாக நம்
சோதித்து பார்த்து அதற்கு தகுந்தாற் போல் மாற்றங்களை செய்து
கொள்ளலாம். கூடவே ஐபோன் திரையில் நம் இணையதளம் எப்படி
தெரியும் என்றும் பார்த்துக்கொள்ளலாம்.
வெவ்வெறு உலாவிகளில் ( web browser) நம் தளம் எப்படி
தெரிகிறது என்பதை அறிய  இந்தப் பதிவை பார்க்கவும்.

உலகம் முழுவதும் நம் இணையதளம் சரியாகத் தெரிகிறதா என்று சரி பார்க்கலாம்

வின்மணி சிந்தனை
நமக்கு உதவி செய்தவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க
வேண்டும் அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது கேட்காமல்
நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பாக்தாத் எந்த நதிக்கரையில் உள்ளது ? 
2.இந்திய தேசிய நூலகம் எங்குள்ளது ? 
3.உலகின் உயரமான இடம் எது ? 
4.பாகிஸ்தானின் குடியரசு நாள் எது ? 
5.மலையாள சகாப்தம் எப்போது தொடங்கிற்று ? 
6.தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் ?
7.சுரங்க விளக்குகளை கண்டுபிடித்தவர் யார் ? 
8.சென்னைப் பழ்கலைக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ? 
9.உலகில் அதிக வெப்பமான இடம் எது ? 
10.கதே பதக்கம் பெற்ற முதல் இந்தியர் யார் ? 
பதில்கள்:
1.டைகிரிசு, 2.கொல்கத்தாவில்,3.பாரி, திபெத் (1400 அடி),
4.23.05-1956, 5.கி.பி.824 -ல்,6.இலியாஸ்ஹோ ,1846,
7.அம்ப்ரி டேவி, 8.1857,9.அசீசியா ,லிபியா (136 டிகிரி),
10.சர்வபள்ளி எஸ்.இராதாகிருஷ்ணன்.
இன்று செப்டம்பர் 29  
பெயர் : என்ரிக்கோ பெர்மி,
பிறந்த தேதி : செப்டம்பர் 29, 1901
ஒரு புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல்
அறிஞராவார். உலகின் முதலாவது 
அணுக்கரு உலையை உருவாக்கியமைக்
-காகவும் குவாண்டம் கொள்கை,அணுக்கரு
இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை
போன்றவற்றில் இவரது பங்களிப்பு இன்றியமையாதது

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

செப்ரெம்பர் 29, 2010 at 9:03 பிப 6 பின்னூட்டங்கள்

பள்ளி,கல்லூரிகளில் எடுக்கும் குறிப்பை (Notes) புதுமையாக சேமித்து வைக்கலாம்.

பள்ளி முதல் கல்லூரி வரை எடுக்கப்படும் பாட சம்பந்தப்பட்ட
குறிப்பை புதுமையான முறையில் ஆன்லைன் மூலம் இலவசமாக
சேமிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நாம் எடுக்கும் குறிப்பை (Notes)
ஆன்லைன் -ல் இலவசமாக சேமித்து  எங்கு சென்றாலும்
இணையதளம் மூலம் பார்க்கலாம். நோட்டு புத்தகங்களை எல்லாம்
தூக்கி செல்லும் காலம் விரைவில் முழுமையாக மாறப்போவதற்கு
எடுத்துக்காட்டாக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :http://www.mynoteit.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு இலவசக் கணக்கை உருவாக்கிக்
கொண்டு நாம் வகுப்பில் படித்த குறிப்பை சேமித்து வைக்கலாம்.
தினமும் ஆசிரியர்கள் வகுப்பில் கொடுக்கும் அத்தனை
குறிப்புகளையும் ஒவ்வொரு பாடம் வாரியாக சேமித்து வைக்கலாம்.
நமக்கென்று தனியாக ஒரு குழு உருவாக்கி கொண்டு அதில்
ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அல்லது ஒரே வகுப்பில்
படிக்கும் மாணவர்கள் என அனைவரும் தங்களுக்கு எழும்
சந்தேகங்களை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
புதிதாக ஆசிரியர் கொடுக்கும் Assignment  பற்றி கூட விவாதித்து
கட்டுரை எழுதலாம். ஒருவர் எழுதும் குறிப்பை அனைவருடனும்
எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். காலண்டர் வசதியுடன் இருப்பதால்
குறிப்புகளை எளிதாக தேடிப்படிக்கலாம். நம் வீட்டு செல்லங்களுக்கும்
இது போன்ற இணையதளங்களைப்பற்றி கூறி அவர்களின் அறிவை
உலக அளவில் வளர்க்க நம்மால் ஆன முயற்சி செய்வோம்.

வின்மணி சிந்தனை
அடுத்தவர்களுக்கு மனதாலும் துன்பம் நினைக்காமல் இருந்தால்
ஒருபோதும் நமக்கு துன்பம் இல்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சதுர மரங்கள் காணப்படும் நாடு எது ? 
2.தமிழ்நாட்டின் பரப்பளவு எவ்வளவு ? 
3.நில நடுக்கத்தை பதிவு செய்து காட்டும் கருவியின் பெயர்
  என்ன ?
4.ஒரு காசுக்குக் கூட நோட்டு அச்சடித்து வெளியீடும் நாடு எது?
5.டேபிள் டென்னிஸ் விளையாட்டின் வியாபாரப் பெயர் என்ன?
6.வெட்டுக்கிளிக்கு காதுகள் எங்குள்ளன ? 
7.நண்டுகளுக்கு பற்கள் எங்கே அமைந்துள்ளன ? 
8.ஆதாம் தொழில் என்பது என்ன ? 
9. ஒரு சிப்பியில் முத்து வளர்வதற்கு எவ்வளவு காலம் ஆகும்?
10.மனித உடலின் எத்தனை எலும்புகள் இருக்கின்றன ? 
பதில்கள்:
1.சீனா, 2.1,30,069 ச.கி.மீ,3.சீஸ்மோ கிராப்,
4.ஹாங்காங், 5.பிங் பாங்,6.கால்களில்,7.வயிற்றில்,
8.தோட்டக்கலை,9.15 ஆண்டுகளுக்கும் மேல், 10.206.
இன்று செப்டம்பர் 28 
பெயர் : லதா மங்கேஷ்கர்,
பிறந்த தேதி : செப்டம்பர் 28, 1929
இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பாடகியாவார்.
இந்தியாவின் இசைக்குயில் எனப்போற்றப்படுபவர்.
இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா
விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர்
ஒருவராவார்.இவரது கலையுலக சேவை 60 ஆண்டுகளுக்கும்
மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு
ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப்
பாடியுள்ளார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

செப்ரெம்பர் 28, 2010 at 9:32 பிப 3 பின்னூட்டங்கள்

ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை தேடித்தர புதுமையான தேடுபொறி

இணையத்தில் படங்களை தேடவேண்டும் என்றால் நாம் தேடும்
படங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை இந்தக் குறையைப்
போக்குவதற்காகவும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை
எளிதாக தேடவும் புதிதாக ஒரு தேடுபொறி வந்துள்ளது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

கூகுளில் சென்று தேடினாலும் நாம் தேடும் படங்களைத் தவிர மற்ற
அனைத்து வகையான படங்களை காட்டும் இதே நிலமைதான் அனைத்து
தேடுபொறிகளிலும், இந்தக் குறையை போக்குவதற்காக ஒரு தளம்
உள்ளது.

இணையதள முகவரி : http://www.kalooga.com

படம் 2

இந்தத்தளத்திற்குச் சென்று நாம் தேட விரும்பும் படத்தின் பெயரை
கொடுத்து தேடியதும். நாம் தேடும் படத்துடன் தொடர்புடைய படங்களை
சேர்த்து நமக்கு காட்டும் இது பார்ப்பத்ற்கு சிறிய சேவை போல்
தெரிந்தாலும் பல நேரங்களில் நாம் தேடும் சில வகையான
படங்களுடன் தொடர்புடைய படங்களை கண்டுபிடிப்பது மிகவும்
எளிதாக இருக்கிறது.உதாரணமாக நாம் Sun rise என்று கொடுத்து
தேடிப்பார்த்தோம் கிடைக்கும் முடிவை படம் 2-ல் காட்டியுள்ளோம்.
கூகுளிலும் தொடர்புடைய படங்களை தேடும் சேவை இருந்தாலும்
இந்தத்தளம் மூலம் தொடர்புடைய படங்களை தேடும் வாசகர்கள்
எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது ஏனென்றால்
50 மில்லியனுக்கும் மேல் புகைப்பட கேலரிகளை கொண்டுள்ளது.
இனி நமக்கும் தொடர்புடைய படங்களை தேடுவது கண்டிப்பாக
எளிதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
நல்லவர்களுக்கு மட்டும் தான் சோதனை வரும், தீயவர்களுக்கு
ஒருபோதும் சோதனை வருவதில்லை, சோதனைக்கு 
உள்ளாகுபவர்கள் தான் வெற்றியை சுவைக்கின்றனர்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஆப்பிரிக்காவில் உள்ள உயரமான மலைச்சிகரம் எது ?
2.உலகிலேயே மிகவும் கசப்பான பொருள் எது ? 
3.பக்ராநங்கல் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
4.உலக்காடுகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்தத் தேதியில்
 கொண்டாடப்படுகிறது ? 
5.வைரத்திற்கு அடுத்தபடியாக கனம் உள்ள மிகக்கடினமான
  கல் எது ?
6.பூமி நீள்வட்டமாக இருப்பது ஏன் ?
7.அணு உட்கருவின் ஆரம் எவ்வளவு ?
8.சிமெண்டைக் கண்டுபிடித்தவர் யார் ? 
9.முட்டை அடைகாக்கப்பட்டு கோழிக் குஞ்சு வெளிவர
  எவ்வளவு நாட்கள் ஆகின்றன ? 
10.இந்தியாவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் எத்தனை 
   சதவிகிதம் காடுகள் உள்ளது ? 
பதில்கள்:
1.கிளிமாஞ்சரோ, 2.டினடோனியம் சக்கரைடு,3.சட்லஜ்,
4.மார்ச் 21-ம் தேதி, 5.சபையர்,6.மையம் நோக்கிச் சுற்றும்
  விசை,7.10.13 செ.மீ, 8.ஜோசப் ஆஸ்ப்டின்,9.21 நாட்கள்,
10.22.8 சதவிகிதம்.
இன்று செப்டம்பர் 27 
பெயர் : பகத் சிங்,
பிறந்த தேதி : செப்டம்பர் 27, 1907
இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும்
இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய
புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர்
சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் 
(சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர்
இந்தியாவின் முதலாவது மாக்சியவாதி எனவும் சில 
வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படுகிறார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

செப்ரெம்பர் 27, 2010 at 7:31 பிப பின்னூட்டமொன்றை இடுக

ஒரு இணையதளத்தில் உள்ள அத்தனை படங்களையும் ஒரே சொடுக்கில் தறவிரக்கலாம்.

ஒரு இணையதளத்தில் இருக்கும் முக்கியமான படங்கள்
அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு பக்கமாக
சென்று நம் கணினியில் சேமிக்க வேண்டாம். ஒரு தளத்தில்
இருக்கும் மொத்தப்படங்கள் அனைத்தையும் ஒரே சொடுக்கில்
தறவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள்
உள்ளது.  Download என்ற சுட்டியை சொடுக்கி மென்பொருளை
தறவிரக்கலாம்.

படம் 1

படம் 2

படம் 3

Download

இந்த மென்பொருளைத் தரவிரக்கி நம் கணினியில் நிறுவியதும்
படம் -1 ல் உள்ளது போல் வலது பக்கத்தின் மேல் இருக்கும் ஐகானை
சொடுக்கியதும் படம் 2-ல் இருப்பது போல் வரும் அதில் நாம்
எந்த இணையதளத்தில் இருந்து மொத்தப்படத்தையும் காப்பி
செய்ய வேண்டுமோ அந்தத் தளத்தைக் கொடுத்து Next என்ற
பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரை படம் 3-ல்
காட்டப்பட்டுள்ளது.இதில் நாம் Download All Pictures from entire
website என்பதை தேர்ந்தெடுத்து finish என்ற பொத்தானை அழுத்தி
அத்தனை படங்களையும் நம் கணினியில் சேமிக்கலாம்.

வின்மணி சிந்தனை
ஆசைகள் அதிகரிக்கும் போது நம்மிடம் இருக்கும் மனிதநேயம்
காணாமல் போகும். முடிந்தவரை ஆசைகளை குறைத்து 
வாழவேண்டும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.விண்ணில் உள்ள நட்சத்திரங்களில் நாம் வெறும் கண்களால்
 காணக்கூடியவை எவ்வளவு ? 
2.ஜெட் இன்ஞினை கண்டுபிடித்தவர் யார் ?
3.வேர் இல்லாத தாவரம் எது ? 
4.நகத்தின் அடியில் வளரும் தோலின் சிறப்புப் பெயர் என்ன ?
5.உலகத்தின் சுற்றளவு எவ்வளவு ?
6.உலகிலேயே மிகப்பெரிய சிலை எது ?
7.உயில் எழும் பழக்கத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள்
  யார் ?
8.கடல்களுள் உப்பு மிகுந்தது எது ? 
9.சொந்தமாகத்தானே உணவு தயாரிக்காத செடி எது ?
10.காற்று, நீராவி இதில் எதன் எடை குறைவு ?
பதில்கள்:
1.5776, 2.பிராங் விட்டில்,3.இலுப்பை, 4.க்யூடிகிள்,
5.4,16,000 கிலோ மீட்டர்,6.தாய் நாடு சிலை - ரஷ்யா,
7.ரோமானியர்கள், 8.அட்லாண்டிக்,9.காளான்கள்,10.நீராவி.
இன்று செப்டம்பர் 26 
பெயர் : திரு.வி.கலியாணசுந்தரனார்,
பிறந்த தேதி : செப்டம்பர் 26, 1883
அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல 
துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை
எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர்.
தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை
ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின்
உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

செப்ரெம்பர் 26, 2010 at 10:02 பிப பின்னூட்டமொன்றை இடுக

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் கேள்விக்கும் பதில் ஒரே இடத்தில்

குழந்தைகள் தினமும் புதிது புதிதாக பல கேள்விகள் கேட்டுக்கொண்டே
இருக்கும் இதில் நமக்கு பதில் தெரிந்திருந்தாலும் சொல்லிக்கொடுக்க
சில சமயங்களில் நேரம் இருப்பதில்லை இந்த குறையை நீக்கி
குழந்தைகளின் கேள்விக்கு இணையம் மூலம் பதில் கிடைக்கும்
எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

குழந்தைகள் சுட்டித்தனமாக மட்டுமல்ல அறிவுப்பூர்வமாகவும் பல
நேரங்களில் கேள்வி கேட்பதுண்டு அந்த வகையில் நம் குழந்தைகள்
கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லி நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.whyzz.com

இந்தத்தளத்திற்கு சென்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை
அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பலத்துறைக்கான
கேள்வி பதில்கள் இடம் பெற்றுள்ளது. செடிகொடிகள் , விலங்குகள்
எந்திரன்,ரோபோட், மனித உடல் வரை அனைத்து தரப்பு செய்திகளும்
விளக்கமாக எப்படி வேலை செய்கிறது அதன் பயன் என்ன என்பதை
தெளிவாக கூறியுள்ளனர். இண்டெர்நெட் என்றால் என்ன என்பதில்
தொடங்கி பலத்துறைகளுக்கான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன,
நமக்கு தேவையான துறையைத் தேர்ந்தெடுத்து தகவல்களை
எளிதாக அறிந்து கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் அனைவரும்
எளிதாக படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான
ஆங்கிலத்தில் தகவல்கள் இருப்பதும் இதன் சிறப்பு. கண்டிப்பாக
இந்தப்பதிவு நம் குழந்தைகளுக்கும் பல துறைகள் பற்றி ஆராய்ச்சி
செய்யும் நபர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
மக்கள் நலனுக்காக சேவை செய்யும் நபர்களிடம் இருந்து பணம்
பறிக்கும் அரசியல்வாதிக்கு தகுந்த நேரத்தில் இறைவன் தண்டனை
கொடுப்பான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பஞ்சவர்ண ஏரி எங்குள்ளது ? 
2.வாலிபால் இந்தியாவில் எந்த ஆண்டு முதல் 
  விளையாடப்படுகிறது ? 
3.அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் எந்த நாட்டுக்காரர்?
4.இந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
5.ஹாவாய்த் தீவுகளை கண்டுபிடித்தவர் யார் ?
6.பல்லக்குத் தூக்கிகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
7.யானைக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் காணப்படும்
  பெரிய மிருகம் எது ?
8.இந்தியாவில் சூரிய பகவான் கோவில் எங்குள்ளது ?
9.எந்த நாட்டில் பிரெஞ்சும் ஆங்கிலமும் அலுவலக 
  மொழியாக உள்ளது ?
10.உலகின் மிகச்சிறிய மரம் எது ?
பதில்கள்:
1.ஆர்டிக் சமுத்திரத்தில், 2.1920,3.இத்தாலி,
4.எஸ்.ஆர்.அரங்கநாதன்,5.ஜேம்ஸ் குக்,6.சரோஜினி நாயுடு,
7. காண்டா மிருகம், 8.ஓரிஸா கொனார்க்,9.கனடா, 
10.குள்ளன் வில்லோ (மூன்று அங்குலம்).
இன்று செப்டம்பர் 25 
பெயர் : உடுமலை நாராயணகவி,
பிறந்த தேதி : செப்டம்பர் 25, 1899
முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும்,
நாடக எழுத்தாளரும் ஆவார். அற்புதமான
சீர்திருத்தப் பாடல்களால் புகழ்பெற்ற இவர்
தொழிலால்தான் ஜாதி என்று நாராயணகவி
என்று பெயர் சூட்டிக் கொண்டு கவிஞர் இனமென்று
தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

செப்ரெம்பர் 25, 2010 at 12:22 பிப பின்னூட்டமொன்றை இடுக

ஒவ்வொரு குறியீட்டுக்கும் (Symbol) அதன் அர்த்தத்தை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

நம் நிறுவனத்திற்க்கு லோகோ உருவாக்க வேண்டும் என்றால் எந்த
குறியீட்டுக்கு என்ன அர்த்தம் என்று பார்க்க விரும்பும் அனைவரும்
ஒவ்வொரு குறியீட்டின் அர்த்தத்தை எளிதாக கண்டுபிடிக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஒரு நிறுவனம்  திறம்பட உருவாக்க வேண்டும் என்று நினைக்கும்
அனைவரும் முதலில் அதிக முக்கித்துவத்துடன் நினைப்பது
லோகோ என்று சொல்லக்கூடிய குறியீடு தான்.காரணம் அந்த
குறியீடு தான் அந்த நிறுவனத்தை மக்கள் மத்தியில் கொண்டு
சேர்க்கும் அங்குசம் என்று சொன்னாலும் அது மிகையில்லை.
அந்த அளவிற்கு குறியீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமக்கு
ஒவ்வொரு குறியீட்டின் அர்த்ததை அறிந்து கொள்வதற்காக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.symbols.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் 2,500 -க்கும் மேற்பட்ட குறியீட்டின்
விளக்கத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு குறியீடும்
எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. அதன் நன்மை தீமை என்ன
எந்த அளவிற்கு மக்களுக்கு பிடிக்கும் என்று முழுமையாகவும்
துல்லியமாகவும் விவரிக்கின்றனர். ஏதோ நினைத்ததை லோகோ
என்ற பெயரில் உருவாக்குவதை விட நாம் விரும்பும் வகையில்
குறியீட்டின் அர்த்தத்தை உணர்ந்து வெற்றி தரும் லோகோ-வின்
குறியீட்டை நாம் உருவாக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு புதிய
நிறுவனத்தில் லோகோ உருவாக்க நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாக
இருக்கும்.

வின்மணி சிந்தனை
ஒருவனை ஏமாற்றுவது நாம் செய்யும் செயல்களில் மிகவும்
இழிவான செயலாகும்.உண்மையான நம் மக்கள் ஒரு போதும்
யாரையும் ஏமாற்றுவதில்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நீயுட்ரான்கள் இருப்பதை சொன்னவர் யார் ?
2.எதை உபயோகித்து வெப்பத்தை மின்சாரமாக மாற்ற முடியும்?
3.பிரெஞ்சுப் புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது ?
4.டென்னிஸ் மைதானத்தின் நீளம் எவ்வளவு ?
5.சூயஸ் கால்வாய்க்கு போக்குவரத்து எந்த ஆண்டில்
  திறக்கப்பட்டது?
6.இத்தாலி நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
7.செய்ற்கை மழை பெய்ய உதவும் அமிலம் எது ?
8.இந்தியாவில் கரும்பு எந்த மாநிலத்தில் அதிகம் விளைகிறது?
9.தீக்குச்சி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?
10.எத்தனை வகை யோகாசனங்கள் தற்போது பயன்பாட்டில்
   இருக்கின்றது ? 
பதில்கள்:
1.சேட்விக், 2.தெர்மோகப்பிள்,3.1789,4.சராசரியாக 26 மீட்டர்
 (78 அடி),5.1869-ல்,6.லிரா, 7.சில்வர் ஐயோடைட்,
8.உத்திரப்பிரதேசம்,9.1844, 10.72 வகைகள்.
இன்று செப்டம்பர் 24 
பெயர் : பத்மினி ,
மறைந்த தேதி : செப்டம்பர் 24, 2006
பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ்,தெலுங்கு,
மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய
மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும்
 புகழ் பெற்றவர்.நாட்டியப் பேரொளி
எனப் பெயர் எடுத்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

செப்ரெம்பர் 24, 2010 at 12:11 பிப பின்னூட்டமொன்றை இடுக

புதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம்.

ஆங்கிலத்தில் இருக்கும் கோடிக்கணக்கான எழுத்துருக்களில் சிறந்த
எழுத்துருவை (Font)  எளிதாக இலவசமாக ஒரே இடத்தில் இருந்து
தரவிரக்கலாம். இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆங்கிலத்தின் பலவகையான எழுத்துருக்கள் இலவசமாக
கிடைக்கின்றன ஆனால் அழகான ஆங்கில எழுத்துக்கள்
வித்தியாசமாக உள்ள எழுத்துருக்கள் காசுக்கு தான்
கிடைக்கின்றன. ஒரு சில இடங்களில் தான் இது போன்ற
அரிவகை எழுத்துருக்கள் இலவசமாக கிடைக்கின்றன என்றாலும்
அந்த இடங்களில் கூட எல்லாவகையான எழுத்துருக்களும்
கிடைப்பதில்லை ஒரு சில எழுத்துருக்கள் மட்டும் தான்
கிடைக்கின்றன. இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு
தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.ffonts.net

படம் 2

இந்தத்தளத்திற்கு சென்று நாம் விரும்பும் வகையில் எந்த எழுத்துரு
பிடித்திருந்தாலும் உடனடியாக Download என்ற பொத்தானை அழுத்தி
தரவிரக்கலாம். 3D Fonts முதல் Cartoon Fonts வரை , Classic Fonts
முதல்  Crazy Fonts வரை அத்தனை எழுத்துருவும் தனித்தனியாக
வகை பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நமக்கு எந்த வகை எழுத்துரு
வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து படம் 2 -ல் காட்டியபடி இருக்கும்
Download என்ற பொத்தானை அழுத்தி தரவிரக்கலாம். கண்டிப்பாக
இந்தப்பதிவு நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
எதையும் ஒரே கோணத்தில் யோசிப்பவன் சாதாரன
மனிதன், எதையும் பல கோணங்களில் யோசிப்பவன்
புத்திசாலி மனிதன்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை எங்குள்ளது ?
2.மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் எது ?
3.காலத்தை கணக்கிடுவதற்கான அறிவியல் பெயர் என்ன ?
4.உலகிலேயே மக்கள் தொகை குறைவாக உள்ள நாடு எது ?
5.திருப்பதி கோவிலை கட்டிய சோழ மன்னர் யார் ?
6.லெனின் பரிசு பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் யார் ?
7.தைவான் நாட்டின் மறுபெயர் என்ன ?
8.முதலாவது இந்தியப் பெண் விஞ்ஞானி யார் ?
9.இந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண் யார் ?
10.தனக்கென்று கூடுகட்டிக்கொள்ளாத பறவை எது ?
பதில்கள்:
1.ரஷ்யா, 2.சிங்கம்,3.ஹோராலகி,4.அவர் அலாஸ்கா,
5.கருணாகரத் தொண்டைமான்,6.சர்.சி.வி.ராமன்,
7.பார்மோஸா,8.அபலாபோஸ்,9.முத்துலெட்சுமி ரெட்டி,
10.குயில்.
இன்று செப்டம்பர் 23 
பெயர் : டி. எஸ். பாலையா,
பிறந்த தேதி : செப்டம்பர் 23, 1914
தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 
60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின்
தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
1936ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி  இவரது முதல்
படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில்
முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை
வேடங்களிலும் புகழ் பெற்றார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

செப்ரெம்பர் 23, 2010 at 9:27 முப 2 பின்னூட்டங்கள்

விண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.

விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL
பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத
ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிறதா என்று பார்த்து அதையும் சரி
செய்யும் தீர்வாக ஒரு மென்பொருள் வந்துள்ளது. இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் வைரஸ் தாக்கம் குறைவாக
இருக்கிறது என்றாலும் அதற்கு மேல் ஸ்பைவேர் மற்றும்
தேவையில்லாத DLL கோப்புகள் அடிக்கடி பிழை செய்திகள்
காட்டுவதுண்டு. ஆண்டிவைரஸ் மென்பொருளால் கூட சில நேரங்களில்
இது போன்ற ஸ்பைவேர் நீக்க முடிவத்தில்லை இந்தப்பிரச்சினைக்குத்
தீர்வாக ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது. இந்தச்சுட்டியை
சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.

Download

இந்த மென்பொருளை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய
தேவையில்லை நேரடியாக பயன்படுத்தலாம். மென்பொருளை
இயக்கியதும் படம் 1-ல் உள்ளது போல்  Start Scan என்ற
பொத்தானை அழுத்தவும் உடனடியாக நம் கணினியில்
ஏதாவது Dll பிரச்சினை செய்கிறது என்றால் அதைப்பற்றிய
விபரங்களுடன் காட்டுகிறது. தேவையில்லை என்றால்
உடனே ரீமுவ் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 7-ல்
அடிக்கடி ஏற்படும் DLL மற்றும் ஸ்பைவேர் பிரச்சினைக்கு
தீர்வாக இந்த மென்பொருள் இருக்கும். விண்டோஸ் 7 – ஐ
மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மென்பொருள்
விண்டோஸ் Xp -லும் இயக்கலாம்.

வின்மணி சிந்தனை
பணம் இருப்வனுக்கு கொடுக்கும் மரியாதையை பணம்
இல்லாதவனிடமும் கொடுக்க வேண்டும். சில நேரங்களில்
நேரடியாக மரியாதை கொடுக்க முடியாமல் போனால் கூட
மனதால் மரியாதை கொடுக்க வேண்டும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.திரைப்படங்களுக்கு எந்த தணிக்கையும் இல்லாத நாடு எது ?
2.சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை 
 எப்போது கட்டப்பட்டது ? 
3.ஆங்கிலேயரின் தேசியப்பறவை என்ன ? 
4.உலகில் மிகப்பெரிய அனை எது ? 
5.நாய்கடி நோயினை எவ்வாறு அழைக்கின்றனர் ? 
6.யானையைப் பிடிக்கும் முறைக்கு என்ன பெயர் ?
7.அதிக தூரம் தாண்டும் மிருகம் எது ? 
8.இரும்பு துருப்பிடிப்பதன் முக்கிய காரணம் எது ? 
9.மிகப்பெரிய நில மிருகம் எது ?
10.மிக அதிக எடையுள்ள உலோகம் எது ?
பதில்கள்:
1.பிரான்ஸ், 2.1936,3.அன்னம்,4.பாகிஸ்தான் சுக்கூர் அனை,
5.ரேபீஸ்,6.கெத்தா,7.கங்காரு - 13 மீட்டர்,8.ஆக்ஸிசன்,
9.ஆப்பிரிக்க யானை,10.இரிடியம்.
இன்று செப்டம்பர் 22 
பெயர் : மைக்கேல் பரடே,
பிறந்த தேதி : செப்டம்பர் 22, 1791
பிரிட்டனைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும்,
இயற்பியலாளரும் ஆவார்.இவர் மின்காந்தவியல்,
மின்வேதியியல்  ஆகிய துறைகளுக்குக் 
குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான
ஒரு கருவுயாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற
பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

செப்ரெம்பர் 22, 2010 at 4:35 முப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,723 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: