Archive for ஓகஸ்ட் 12, 2010
நம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை
நம் இமெயிலின் கடவுச்சொல்லைத் திருடும் புதிய பாப்அப்
இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கடவுச்சொல்லை
மட்டுமே குறிவைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது இதிலிருந்து
நம் இமெயில்-ஐ பாதுகாக்கும் வழிமுறையைப் பற்றித்தான்
இந்த சிறப்புப்பதிவு.
இந்தப் பதிவை தொடங்கும் முன் முதலில் பாப்அப் என்றால் என்ன
என்று பார்ப்போம். அதாவது நாம் ஒரு வலைப்பக்கத்தை உலாவியில்
திறக்கும் போது கூடவே குட்டியாக தோன்றும் ஒரு சிறிய விண்டோ
பெயர் தான் பாப்அப். பாப்அப் விண்டோ முதலில் உருவாக்கப்பட்ட தன்
காரணம் தளத்தில் இருக்கும் முக்கியமான செய்திகளையும்
ஆஃபர் போன்ற தகவல்களையும் அறிவிப்பதற்காகத்தான். இரண்டு
நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் செய்தி படிக்கும் இணையதளத்தில்
சென்று விட்டு வெளியே வந்த போது அவர் இமெயில் கடவுச்சொல்
திருடப்பட்டுவிட்டதாக கூறினார். நாமும் ரெக்கவரி வழி முறைகளைச்
சொல்லி சாதாரணமாக விட்டுவிட்டோம். நேற்று மூன்று நண்பர்கள்
தங்கள் கடவுச்சொல் திருடப்பட்டுவிட்டது என்று மட்டும் மொட்டையாக
கூறினர், உடனடியாக நாம் கேட்டது நீங்கள் கடைசியாக
சென்ற இணையதளங்களைப் பற்றி கூறுங்கள் என்றோம். உடனடியாக
அவர்கள் சென்ற இணையதளங்களை கூறினார் இதில் என்ன ஆச்சர்யம்
என்றால் முந்தைய நாள் ஒருவர் தான் சென்ற செய்தித்தளத்தின் மூலம்
தன் கடவுச்சொல் திருடப்பட்டிருக்கலாம் என்று கூறினார் அல்லவா
அதே தளத்தை இவர்களும் பயன்படுத்தி இருக்கின்றனர். உடனடியாக
நாமும் அந்த தளத்திற்கு சென்ற போது கூடவே ஒரு பாப் அப் வந்தது.
பெரும்பாலும் நாம் பாப் அப்-கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை
என்றாலும் இது ஒவ்வொரு பக்கம் செல்லும் போது வந்து கொண்டே
இருந்தது அந்த பாப் அப் விண்டோவில் Close என்ற பொத்தான்
தெரிந்தது. அந்த close பொத்தானை சொடுக்கினால் நம் உலாவியில்
சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கடவுச்சொல் அவர்களுக்கு செல்லும்படி
வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த செய்திதளத்திற்கும் உடனடியாக
கண்டனத்தை இவர்கள் அனுப்பினர்.உடனடியாக அவர்களும் விளம்பர
நிறுவனத்திற்காக கொடுத்த இடத்தில் தவறான தகவல் வந்திருக்கிறது
என்று விளக்கம் கூறி நிறுத்தினர். இந்ததளத்தில் இப்போது இது இல்லை
என்றாலும் பல தளங்களில் இன்று வேகமாக பரவிவருகிறது.உங்கள்
கணினியை வைரஸ் தாக்கி இருக்கிறது உடனடியாக இலவசமாக
அதை நீக்க இங்கே சொடுக்குங்கள், இன்று மட்டும் நீங்கள் உருவாக்கும்
இணையதளம் இலவசம் என்ற செய்திகளில் இவை வலம் வருகின்றன.
இப்படிவரும் பாப்அப் விண்டோவை மூட கீபோர்ட்-ல் Alt + F4 என்ற
பொத்தானை அழுத்துங்கள். பாப் அப் விண்டோவில் இருக்கும் எதை
சொடுக்கினாலும் உங்கள் தகவல் திருடப்படலாம். பல உலாவிகள்
பாப் அப் அனுமதிப்பதில்லை என்றாலும் இது போன்ற பாப்அப்
களை கட்டுப்படுத்த முடியவில்லை , உலாவியில் கூடுமானவரை
கடவுச்சொல்லை சேமித்து வைப்பதை தவிர்த்துவிடுங்கள். இமெயிலை
திறந்து வைத்துக்கொண்டும் பல தளங்களுக்கு செல்லுவதையும்
தவிர்த்தால் கண்டிப்பாக இந்த பாப் அப் நம்மை ஒன்றும் செய்யாது.
வின்மணி சிந்தனை உன் தாயப்ப்பற்றியோ சகோதரனைப் பற்றியோ அடுத்தவர் குறை கூறினால் தாங்க முடியாது என்கிறாயே , நீ மட்டும் அடுத்தவரை குறைகூறலாமா.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.15 நிமிடங்களே அரசராக இருந்தவர் யார் ? 2.அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்தவர் யார் ? 3.பிரான்ஸ் நாட்டில் செவாலியர் விருது பெற்ற முதல் இந்தியர் யார்? 4.சுதந்திர இந்தியாவின் கடைசி வைஸ்ராய் யார் ? 5.இந்தியாவின் மிக நீளமான இரயில் பாலம் எது ? 6.சீன நாட்டின் தேசிய விளையாட்டு எது ? 7.செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் யார் ? 8.காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் எப்போது இணைந்தது ? 9.உலகின் பெரும்பாலான மக்களளால் பேசப்படும் மொழி என்ன? 10.பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ? பதில்கள்: 1.14 ம் லூயி,2.ஆபிரகாம் லிங்கன் 3.சிவாஜி கணேசன், 4.மெளண்ட்பேட்டன் பிரபு, 5.சோன் பாலம்,6.பிங்பாங், 7.ஹன்றி டுனண்ட் 8.1947-ல், 9.மாண்டரின் - சீன மொழி, 10.முகம்மது அலி ஜின்னா
இன்று ஆகஸ்ட் 12பெயர் : வில்லியம் ஷாக்லி , மறைந்த தேதி : ஆகஸ்ட் 12, 1989 டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரிட்டனில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன், வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.