Archive for ஓகஸ்ட் 18, 2010
நோக்கியா X3 தொடுதிரையுடன் அறிமுகம் சிறப்பு வீடியோ
நோக்கியா அலைபேசியில் தற்போது தொடுதிரை வசதி மற்றும்
பல இதர வசதிகளுடன் X3 மாடல் வெளியாகியுள்ளது.
வீடியோவுடன் இதைப் பற்றிய சிறப்பு பதிவு
மொபைல் உலகில் தனக்கென்று தனி இடம் பிடித்து அதிகமான
வாசகர்களுடன் வலம் வரும் நோக்கியா அலைபேசியின் புதிய
மாடல் x3 அலைபேசி தற்போது வெளியாகியுள்ளது. தொடுதிரை
வசதியுடன் எளிமையாக உள்ளது. கூடவே இப்போது இருக்கும்
அனைத்து மொபைல் சேவைகளையும் பயன்படுத்தாலம்.
5 மெகாபிக்சல் கேமிரா, 3G, வைஃபி, புளுடுத், 2.1 மியூசிக்
பிளேயர், FM ரேடியோ,9.6 MM தடிமன் மற்றும் 5 வண்ணங்களில்
தற்போது கிடைக்கிறது.நோக்கியா x3 -ன் தற்போதைய விலை
161 டாலர் இதைப்பற்றிய சிறப்பு அறிமுக வீடியோவையும்
இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை அடுத்தவரைப் பற்றி குறை கூறுபவர்களால் ஒரு போதும் தன் காரியத்தை சிறப்பாக செய்ய முடியாது. முடிந்தவரை அடுத்தவரை குறை கூறாதீர்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.அகில இந்திய வானொலி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 2.வீடுகளுக்கு நம்பர் கொடுக்கும் பழக்கம் எப்போது உருவானது? 3.நமது நாக்கில் எத்தனை சுவை நரம்புகள் உள்ளன ? 4.பசுவுக்கு எத்தனை இரைப்பைகள் ? 5.விண்கலத்தில் பயணம் செய்யும் ஒருவருக்கு வானம் என்ன நிறமாகத் தெரியும் ? 6.நாய்க்கு எத்தனை பற்கள் உள்ளது ? 7.பிஸ்மார்க் என்பவர் எந்த நாட்டின் இரும்பு மனிதர் ? 8.மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் செடி எது ? 9.வானவெடிகளின் தாயகம் என்று அழைக்கப்படும் நாடு எது ? 10.இரு தேசியக்கொடிகள் கொண்ட நாடு எது ? பதில்கள்: 1.1936 ஆம் ஆண்டு,2.1463-ம் ஆண்டு, 3.3000, 4.நான்கு, 5.கருப்பு, 6.42,7.ஜெர்மனி, 8.கீழாநெல்லி, 9.சீனா,10.ஆப்கானிஸ்தான்
இன்று ஆகஸ்ட் 18பெயர் : சுபாஷ் சந்திர போஸ், மறைந்ததேதி : ஆகஸ்ட் 18, 1945 நேதாஜி என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்.நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர். இவர் மரணம் இன்றளவும் ஆங்கிலேயர்க்கு புரியாதபுதிராகவே உள்ளது.இந்தியமக்கள் அனைவரும் உங்களுக்காக தலை நிமிர்ந்து வணங்குகிறோம். உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.