Archive for ஓகஸ்ட் 29, 2010
2011-ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ரோபோட் உங்கள் பெயரை சுமந்து செல்லும்
செவ்வாய் கிரகத்திற்கு அடுத்த ஆண்டு 2011 அக்டோபர் மாதம் செல்ல
விருக்கும் ரோபோட் உங்கள் பெயரையும் சுமந்து செல்லும் எப்படி நம்
பெயரை செவ்வாய் கிரகத்திற்கு இலவசமாக அனுப்பலாம், பங்கு
பெற்றதற்கான சான்றிதழை எப்படிப் பெறலாம் என்பதைப் பற்றித்தான்
இந்தப்பதிவு.
நாசாவிடம் இருந்து அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்தைப்பற்றி
ஆராய்ச்சி செய்வதற்காக புதிய வகை ரோபோட் ஒன்று தயாராகி
வருகிறது. இதில் இருக்கும் மைக்ரோ சிப் மூலம் நம் பெயரை
பதிவு செய்து அதை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு சேர்கிறது.
நாசாவின் இணையதளத்திற்கு சென்று நாம் நம் பெயர், நாடு
மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் போன்றவை கொடுத்தால்
போதும் உடனடியாக இலவசமாக நம் பெயரை பதிவு செய்து
நமக்கு இதில் பங்கு பெற்றதற்கான சான்றிதழையும், சான்றிதழ்
எண்ணையும் கொடுத்து விடுகின்றனர். அடுத்த ஆண்டு செவ்வாய்
கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக செல்லும் நவீன ரோபோட்
நம் பெயரையும் சுமந்து செல்லும். பல கோடி செலவு செய்து
தயாராகும் ரோபோட் நம் பெயரை செவ்வாய் கிரகம் வரை
கொண்டு செல்லும். வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்ற
ஆசை உள்ள் அனைவரும் உங்கள் பெயரை மறக்காமல் பதிவு
செய்யுங்கள். பதிவு செய்ய வேண்டிய முகவரி :
http://marsparticipate.jpl.nasa.gov/msl/participate/sendyourname/
வின்மணி சிந்தனை உலகில் நாம் பிறந்ததே மகிழ்சியான ஒன்று தான் வாழும் காலம் வரை யாருக்கும் துன்பம் கொடுக்காமல் வாழ்ந்து விட்டு செல்வோம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ? 2.மில்லினியம் டோன் எங்குள்ளது ? 3.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ? 4.பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ? 5.லில்லி பூக்களை உடைய நாடு எது ? 6.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? 7.யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ? 8.சோகத்தை குறிக்கும் ராகம் எது ? 9.நதிகள் இல்லாத நாடு எது ? 10.சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ? பதில்கள்: 1.லெனின்,2.கிரீன்விச்,3.கரையான்,4.சலவைக்கல்,5.கனடா, 6.55 மொழிகளில்,7.22 மாதம்,8.முகாரி, 9.சவூதி அரேபியா, 10.மீத்தேன்.
இன்று ஆகஸ்ட் 29பெயர் : மைக்கல் ஜாக்சன் , பிறந்த தேதி : ஆகஸ்ட் 29, 1958 அமெரிக்க பாப் இசைப் பாடகர். புகழ்பெற்ற ஜாக்சன் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 11 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரின் நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்து புகழ் அடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்