Archive for ஓகஸ்ட் 25, 2010
இன்று முதல் வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்.
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால
இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம்
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும்
மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன்
செய்யலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
விரைவில் வெளிவரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த கூகுளின்
சேவை இன்று முதல் நாம் அனைவரும் பயன்படுத்தலாம் அதாவது
ஜீமெயில் மூலம் இனி நாம் வெளிநாட்டில் இருப்பவருடன் குறைந்த
செலவில் போனில் பேசலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது
நம் ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக்கொண்டு சாட் என்பதில்
நுழையவும் அடுத்து Call என்பதை சொடுக்கி நாம் எந்த நாட்டிற்கு
வேண்டுமானாலும் போன் செய்யலாம். Call Phone என்பது
இல்லாவிட்டால் சாட்- என்பதில் இருக்கும் தேடலில் call என்பதை
கொடுத்ததும் வரும். Call என்பதை சொடுக்கி நாம் போன் பேசலாம்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவரிடம் இலவசமாக பேசலாம்
மற்ற நாடுகளில் இருப்பவருடன் குறைவான கட்டணம்
நிர்ணயத்துள்ளது. கட்டணம் பற்றிய விபரங்கள் :
ஒரு நிமிடத்திற்கு
இந்தியா : $0.06
யுனைடட் அரபு நாடுகள் : $0.19
மலேசியா : $0.02
பாகிஸ்தான் : $0.11
சிங்கப்பூர் : $0.02
சவுதி அரேபியா : $0.19
http://gmail.com/call என்ற முகவரியை சொடுக்கி மேலும் தகவல்கள்
தெரிந்து கொள்ளலாம். ஜீமெயில் போன் கால் பற்றிய அறிமுக வீடியோ
ஒன்றையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை நாளை நமக்கு சொந்தமில்லை இன்று மட்டுமே அதுவும் இப்போது மட்டுமே நமக்கு சொந்தம் அதனால் எப்போதும் முகத்தை புன்னகையோடு வைத்திருங்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இரத்தத்தின் முக்கிய பணி யாது ? 2.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 3.எந்த இரு நாள்கள் மட்டும் இரவும் பகலும் சமமாக இருக்கும்? 4.உலகப்புகழ் பெற்ற மோனலிஸா ஓவியம் தற்போது எங்குள்ளது? 5.நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் எது ? 6.தீபாவளி அன்று பிறந்த மத குரு யார் ? 7.வாசனைத் தபால் தலை வெளியீட்ட நாடு எது ? 8.உலகிலேயே மிக உயர்ந்த பீடபூமி எது ? 9.மகாத்மா காந்தி எந்த ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்றார் ? 10.இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானி யார்? பதில்கள்: 1.ஆக்சிஜனை எடுத்துச்செல்வது,2.1986,3.மார்ச் 21, 4.பாரிஸ் -லூவர் மியூசியம்,5.புகைபிடிப்பது,6.குருநாணக், 7.தென்னாப்பிரிக்கா,8.திபெத்,9.1914,10.மேரிக்கியூரி அம்மையார்
இன்று ஆகஸ்ட் 25பெயர் : கிருபானந்த வாரியார் , பிறந்த தேதி : ஆகஸ்ட் 25, 1906 சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதையே தவமாகக் கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.