Archive for ஓகஸ்ட் 5, 2010
கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்
கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும்
கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது
தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்
நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள்
நுழையலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.
கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது
face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை
கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம்
முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல
மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய
முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த
முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த
மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள
வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும்
கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான்
இனி உள்ளே செல்லலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும்
விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட்
மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு
8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை
இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம்
முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை
விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும். இந்த
முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்
வின்மணி சிந்தனை நம்முடன் சிரித்து பேசிவிட்டு பின் சென்று நம்மைப் பற்றி குறைகூறுபவர்களைப் பற்றி ஒரு போதும் கவலைப்படாதீர்கள் அவர்கள் மனிதப்பிறவி அல்ல.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சப்ர்மதி ஆஸ்ரமம் எங்குள்ளது ? 2.புத்தகயா எங்குள்ளது ? 3.இந்தியா கேட் எங்குள்ளது ? 4.அரிக்கமேடு எந்த மாநிலத்தில் உள்ளது ? 5.இந்தியாவின் ஹாலிவுட் எது ? 6.நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் உருவானது ? 7.தேக்கடி வன விலங்குகள் சரணாலயம் எங்குள்ளது ? 8.சேர மன்னர்களைப் பற்றி கூறும் நூல் எது ? 9.மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ? 10.நற்றினையில் எத்தனை பாக்கள் உள்ளன ? பதில்கள்: 1.குஜராத் மாநிலத்தில் உள்ளது, 2.பீகார் மாநிலம்,3.டெல்லியில் 4.பாண்டிச்சேரி, 5.மும்பை,6.பீகார்,7.கேரள மாநிலத்தில், 8.பதிற்றுப்பத்து,9.தொல்காப்பியம்,10.400 பாக்கள்.
இன்று ஆகஸ்ட் 5பெயர் : நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தேதி : ஆகஸ்ட் 5, 1930 சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதராவார். ஜூலை 20, 1969இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின்,மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்ராங் முதலில் சந்திரனில் காலடி வைத்த மனிதரானார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார்.