Archive for செப்ரெம்பர் 28, 2010
பள்ளி,கல்லூரிகளில் எடுக்கும் குறிப்பை (Notes) புதுமையாக சேமித்து வைக்கலாம்.
பள்ளி முதல் கல்லூரி வரை எடுக்கப்படும் பாட சம்பந்தப்பட்ட
குறிப்பை புதுமையான முறையில் ஆன்லைன் மூலம் இலவசமாக
சேமிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நாம் எடுக்கும் குறிப்பை (Notes)
ஆன்லைன் -ல் இலவசமாக சேமித்து எங்கு சென்றாலும்
இணையதளம் மூலம் பார்க்கலாம். நோட்டு புத்தகங்களை எல்லாம்
தூக்கி செல்லும் காலம் விரைவில் முழுமையாக மாறப்போவதற்கு
எடுத்துக்காட்டாக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :http://www.mynoteit.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு இலவசக் கணக்கை உருவாக்கிக்
கொண்டு நாம் வகுப்பில் படித்த குறிப்பை சேமித்து வைக்கலாம்.
தினமும் ஆசிரியர்கள் வகுப்பில் கொடுக்கும் அத்தனை
குறிப்புகளையும் ஒவ்வொரு பாடம் வாரியாக சேமித்து வைக்கலாம்.
நமக்கென்று தனியாக ஒரு குழு உருவாக்கி கொண்டு அதில்
ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அல்லது ஒரே வகுப்பில்
படிக்கும் மாணவர்கள் என அனைவரும் தங்களுக்கு எழும்
சந்தேகங்களை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
புதிதாக ஆசிரியர் கொடுக்கும் Assignment பற்றி கூட விவாதித்து
கட்டுரை எழுதலாம். ஒருவர் எழுதும் குறிப்பை அனைவருடனும்
எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். காலண்டர் வசதியுடன் இருப்பதால்
குறிப்புகளை எளிதாக தேடிப்படிக்கலாம். நம் வீட்டு செல்லங்களுக்கும்
இது போன்ற இணையதளங்களைப்பற்றி கூறி அவர்களின் அறிவை
உலக அளவில் வளர்க்க நம்மால் ஆன முயற்சி செய்வோம்.
வின்மணி சிந்தனை அடுத்தவர்களுக்கு மனதாலும் துன்பம் நினைக்காமல் இருந்தால் ஒருபோதும் நமக்கு துன்பம் இல்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சதுர மரங்கள் காணப்படும் நாடு எது ? 2.தமிழ்நாட்டின் பரப்பளவு எவ்வளவு ? 3.நில நடுக்கத்தை பதிவு செய்து காட்டும் கருவியின் பெயர் என்ன ? 4.ஒரு காசுக்குக் கூட நோட்டு அச்சடித்து வெளியீடும் நாடு எது? 5.டேபிள் டென்னிஸ் விளையாட்டின் வியாபாரப் பெயர் என்ன? 6.வெட்டுக்கிளிக்கு காதுகள் எங்குள்ளன ? 7.நண்டுகளுக்கு பற்கள் எங்கே அமைந்துள்ளன ? 8.ஆதாம் தொழில் என்பது என்ன ? 9. ஒரு சிப்பியில் முத்து வளர்வதற்கு எவ்வளவு காலம் ஆகும்? 10.மனித உடலின் எத்தனை எலும்புகள் இருக்கின்றன ? பதில்கள்: 1.சீனா, 2.1,30,069 ச.கி.மீ,3.சீஸ்மோ கிராப், 4.ஹாங்காங், 5.பிங் பாங்,6.கால்களில்,7.வயிற்றில், 8.தோட்டக்கலை,9.15 ஆண்டுகளுக்கும் மேல், 10.206.
இன்று செப்டம்பர் 28பெயர் : லதா மங்கேஷ்கர், பிறந்த தேதி : செப்டம்பர் 28, 1929 இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப்போற்றப்படுபவர். இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார்.இவரது கலையுலக சேவை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.