Archive for செப்ரெம்பர் 29, 2010
வெவ்வெறு ரிசொல்யூசன்களில் நம் இணையதளம் எப்படி இருக்கும்
நம் இணையதளம் வெவ்வெறு கணினிகளில் உள்ள ரிசொல்யூசனுக்கு
( Resolutions ) தகுந்தபடி எப்படி தெரியும் என்பதை எளிதாக பார்க்கலாம்
எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஒவ்வொரு கணினியின் திரைக்கும்( Monitor) தகுந்தபடி திரையின்
ரிசொல்யூசன் மாறி இருக்கும் இப்படி மாறி இருக்கும் ரிசொல்யூசனில்
நம் இணையதளம் எப்படி தெரிகிறது என்பதை எளிதாக அறியலாம்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://viewlike.us

படம் 2
இந்ததளத்திற்கு சென்று நம் இணையதள முகவரியை வலது பக்கத்தின்
மேல் இருக்கும் URL என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள்
கொடுத்து படம் 2-ல் உள்ளபடி எந்த ரிசொல்யூசன் வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்து Check up என்ற பொத்தானை அழுத்தவும் உடனடியாக
நமக்கு நாம் குறிப்பிட்ட ரிசொல்யூசனில் நம் தளம் எப்படி தெரியும்
என்பதைக்காட்டும் எந்த கணக்கும் தேவையில்லை எளிதாக நம்
சோதித்து பார்த்து அதற்கு தகுந்தாற் போல் மாற்றங்களை செய்து
கொள்ளலாம். கூடவே ஐபோன் திரையில் நம் இணையதளம் எப்படி
தெரியும் என்றும் பார்த்துக்கொள்ளலாம்.
வெவ்வெறு உலாவிகளில் ( web browser) நம் தளம் எப்படி
தெரிகிறது என்பதை அறிய இந்தப் பதிவை பார்க்கவும்.
உலகம் முழுவதும் நம் இணையதளம் சரியாகத் தெரிகிறதா என்று சரி பார்க்கலாம்
வின்மணி சிந்தனை நமக்கு உதவி செய்தவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது கேட்காமல் நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பாக்தாத் எந்த நதிக்கரையில் உள்ளது ? 2.இந்திய தேசிய நூலகம் எங்குள்ளது ? 3.உலகின் உயரமான இடம் எது ? 4.பாகிஸ்தானின் குடியரசு நாள் எது ? 5.மலையாள சகாப்தம் எப்போது தொடங்கிற்று ? 6.தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் ? 7.சுரங்க விளக்குகளை கண்டுபிடித்தவர் யார் ? 8.சென்னைப் பழ்கலைக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ? 9.உலகில் அதிக வெப்பமான இடம் எது ? 10.கதே பதக்கம் பெற்ற முதல் இந்தியர் யார் ? பதில்கள்: 1.டைகிரிசு, 2.கொல்கத்தாவில்,3.பாரி, திபெத் (1400 அடி), 4.23.05-1956, 5.கி.பி.824 -ல்,6.இலியாஸ்ஹோ ,1846, 7.அம்ப்ரி டேவி, 8.1857,9.அசீசியா ,லிபியா (136 டிகிரி), 10.சர்வபள்ளி எஸ்.இராதாகிருஷ்ணன்.
இன்று செப்டம்பர் 29பெயர் : என்ரிக்கோ பெர்மி, பிறந்த தேதி : செப்டம்பர் 29, 1901 ஒரு புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல் அறிஞராவார். உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கியமைக் -காகவும் குவாண்டம் கொள்கை,அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை போன்றவற்றில் இவரது பங்களிப்பு இன்றியமையாதது