Archive for செப்ரெம்பர் 26, 2010
ஒரு இணையதளத்தில் உள்ள அத்தனை படங்களையும் ஒரே சொடுக்கில் தறவிரக்கலாம்.
ஒரு இணையதளத்தில் இருக்கும் முக்கியமான படங்கள்
அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு பக்கமாக
சென்று நம் கணினியில் சேமிக்க வேண்டாம். ஒரு தளத்தில்
இருக்கும் மொத்தப்படங்கள் அனைத்தையும் ஒரே சொடுக்கில்
தறவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள்
உள்ளது. Download என்ற சுட்டியை சொடுக்கி மென்பொருளை
தறவிரக்கலாம்.

படம் 1

படம் 2

படம் 3
இந்த மென்பொருளைத் தரவிரக்கி நம் கணினியில் நிறுவியதும்
படம் -1 ல் உள்ளது போல் வலது பக்கத்தின் மேல் இருக்கும் ஐகானை
சொடுக்கியதும் படம் 2-ல் இருப்பது போல் வரும் அதில் நாம்
எந்த இணையதளத்தில் இருந்து மொத்தப்படத்தையும் காப்பி
செய்ய வேண்டுமோ அந்தத் தளத்தைக் கொடுத்து Next என்ற
பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரை படம் 3-ல்
காட்டப்பட்டுள்ளது.இதில் நாம் Download All Pictures from entire
website என்பதை தேர்ந்தெடுத்து finish என்ற பொத்தானை அழுத்தி
அத்தனை படங்களையும் நம் கணினியில் சேமிக்கலாம்.
வின்மணி சிந்தனை ஆசைகள் அதிகரிக்கும் போது நம்மிடம் இருக்கும் மனிதநேயம் காணாமல் போகும். முடிந்தவரை ஆசைகளை குறைத்து வாழவேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.விண்ணில் உள்ள நட்சத்திரங்களில் நாம் வெறும் கண்களால் காணக்கூடியவை எவ்வளவு ? 2.ஜெட் இன்ஞினை கண்டுபிடித்தவர் யார் ? 3.வேர் இல்லாத தாவரம் எது ? 4.நகத்தின் அடியில் வளரும் தோலின் சிறப்புப் பெயர் என்ன ? 5.உலகத்தின் சுற்றளவு எவ்வளவு ? 6.உலகிலேயே மிகப்பெரிய சிலை எது ? 7.உயில் எழும் பழக்கத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ? 8.கடல்களுள் உப்பு மிகுந்தது எது ? 9.சொந்தமாகத்தானே உணவு தயாரிக்காத செடி எது ? 10.காற்று, நீராவி இதில் எதன் எடை குறைவு ? பதில்கள்: 1.5776, 2.பிராங் விட்டில்,3.இலுப்பை, 4.க்யூடிகிள், 5.4,16,000 கிலோ மீட்டர்,6.தாய் நாடு சிலை - ரஷ்யா, 7.ரோமானியர்கள், 8.அட்லாண்டிக்,9.காளான்கள்,10.நீராவி.
இன்று செப்டம்பர் 26பெயர் : திரு.வி.கலியாணசுந்தரனார், பிறந்த தேதி : செப்டம்பர் 26, 1883 அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்.