Archive for செப்ரெம்பர் 11, 2010
டிவிட்டர் செய்திகளை பேச வைத்து காதால் கேட்கலாம்.
டிவிட்டர்-ல் நாம் பகிர்ந்து கொள்ளும் செய்திகளை இனி பேச வைத்து
காதால் கேட்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிவிட்டரில்
தங்களின் செய்திகளை உடனுக்கூடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்த டிவிட்டர் செய்திகளை நம் கண்ணால் படித்தால் மட்டும் போதுமா?
டிவிட்டரில் வந்திருக்கும் செய்தியை காதுகுளிர கேட்கலாம். நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :http://twejay.com/
இந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Sign in with Twitter என்ற
பொத்தானை அழுத்தி நம் டிவிட்டர் பயனாளர் கணக்கை கொடுத்து
நுழைய வேண்டும். நாம் அனுப்பிய செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக
வரும் ஒவ்வொரு டிவிட் செய்தியிலும் Play பொத்தான் இருக்கும்
இதை சொடுக்கி டிவிட்டர் செய்திகளை நாம் கேட்கலாம். டிவிட்டரின்
கணக்கில் நுழையாமல் இங்கு இருக்கும் Search என்ற கட்டத்திற்குள்
விரும்பிய வார்த்தையை கொடுத்து தேட வேண்டியது தான் வரும்
முடிவுகளை ஒவ்வொன்றாக நாம் கேட்கலாம்.
வின்மணி சிந்தனை தான் கற்ற அனுபவத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொருவரும் ஆசான் தான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இஞ்சியில் எந்த பாகம் உணவிற்கு பயன்படுகிறது ? 2.கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாட்கள் அடைகாக்கும் ? 3.தொழுநோய் ஏற்படுவதற்கு காரணமான கிருமி எது ? 4.பாரதியாரின் அரசியல் குரு யார் ? 5.யுவான் சுவாங் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இருந்தார் ? 6.பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது ? 7.பாரதரத்னா விருது முதலில் யாருக்கு வழங்கப்பட்டது ? 8.இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் எது ? 9.நிதிக்கமிஷன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது ? 10.”அரசியல் “ என்ற நூலை எழுதியவர் யார் ? பதில்கள்: 1.தண்டுக் கிழங்கு,2.21 நாட்கள்,3.பாக்டீரியா,4.பாலகங்காதர திலகர்,5.10 ஆண்டுகள், 6.பிரான்ஸ் -1819,7.ராஜாஜி, 8.டெல்லி,9.5 ஆண்டு,10.அரிஸ்டாட்டில்.
இன்று செப்டம்பர் 11பெயர் : சுப்பிரமணிய பாரதி, மறைந்த தேதி : செப்டம்பர் 11, 1921 பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரின் எழுச்சி பாடல்கள் என்றும் அழியாத இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.