Archive for செப்ரெம்பர் 9, 2010
அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.
கணினிகளில் பெரும்பாலும் யுஎஸ்பி மூலம் வைரஸ் தாக்கம்
அதிகமாக இருந்து வருகிறது. கணினியில் நம் அனுமதி இல்லாமல்
யுஎஸ்பி பயன்படுத்துவதைத் தடுக்க ஒரு இலவச மென்பொருள்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.
பள்ளி முதல் கல்லூரி வரை அனைவரின் கணினியிலும் அனுமதி
இல்லாமல் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க ஒரு இலவச
மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் நம் கணினியில்
யாரவது யுஎஸ்பி டிரைவ் மாட்டினால் உடனடியாக கடவுச்சொல்
கேட்கும் 10 நொடிகளுக்குள் கடவுச்சொல் ஏதும் கொடுக்கவில்லை
என்றால் அலாரம் மூலம் நமக்கு உணர்த்தும். இப்போதைய
சூழ்நிலையில் கண்டிப்பாக நம் அனைவருக்கும் தேவையான
மென்பொருள். இந்த சுட்டியை சொடுக்கி இந்த மென்பொருளை
தரவிரக்கிக்கொள்ளலாம்.
இந்த மென்பொருளைப் பயன்படுத்தி யுஎஸ்பி டிரைவ் – ஐ கணினியில்
நம் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாத வண்ணம் செய்யலாம்.
வின்மணி சிந்தனை சுயநலம் பார்க்காமல் நாம் செய்யும் உதவி கடவுளுக்கு நேரடியாக உதவி செய்வதாகும். பலன் விரைவில் கிடைக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது ? 2.நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ? 3.நோபல் பரிசை ஏற்படுத்தியவர் யார் ? 4.அணுவை பிளந்து காட்டியவர் ? 5.சுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை ? 6.யூதர்களின் புனித நூல் எது ? 7.மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன? 8.மனித உடலின் மிக கடினமான பகுதி எது ? 9.சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடி எது ? 10.கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் ? பதில்கள்: 1.கெர் சோப்பா, 2.சிரியஸ், 3.ஆல்ஃபிரட் நோபல், 4.ரூதர் போர்டு, 5.தமனிகள், 6.டோரா, 7.8 எலும்புகள், 8.பல்,9.குழி ஆடி,10.லாச்ரிமல் கிளாண்டஸ்.
இன்று செப்டம்பர் 9பெயர் : கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, பிறந்ததேதி : செப்டம்பர் 9, 1899 புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் இவரின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.