Archive for செப்ரெம்பர் 15, 2010
புதுமையாக எந்த நாட்டு நேரத்தையும் ஒரே நொடியில் பார்க்கலாம்.
உலகநாடுகளின் நேரத்தை நாம் எந்த நாட்டில் இருந்தும் ஒரே நொடியில்
பார்க்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
உலகநாடுகளில் நாம் பார்க்க விரும்பும் நாட்டின் நேரத்தையும் நாம்
இருக்கும் நாட்டின் நேரத்தையும் உடனுக்குடன் எளிதாக தெரிந்து
கொள்ளலாம். உலக நாடுகளின் நேரத்தை கணக்கிட பல இணைய
தளங்கள் இருந்தாலும் அத்தனையும் விட எளிதாகவும்
புதுமையாகவும் நமக்கு உலகநாடுகளின் நேரத்தை பார்க்க ஒரு
தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.timezonecheck.com
இந்ததளத்திற்கு சென்றால் மேப் வடிவமைப்பில் நமக்கு அனைத்து
நாடுகளும் அதனுடன் நேரமும் தெரிகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும்
தகுந்தாற் போல் ஒவ்வொரு நாட்டில் நேரமும் துல்லியமாக மாறிக்
கொண்டுவருகிறது.நாம் எந்த நாட்டில் இருந்து பார்க்கிறோமோ
அந்த நாட்டின் நேரம் My Time என்ற பெயரில் முதலில் தெரிகிறது.
இதைத்தவிர முக்கியமான நகரத்தின் பெயரை இணையதளத்தின் கீழ்
இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம்.இந்தத்தளத்தின் மூலம்
உலகில் இருக்கும் எந்த நாட்டின் நேரத்தையும் துல்லியமாக எளிதாக
கண்டுபிடிக்கலாம்.
வின்மணி சிந்தனை ஒரு முறைக்கு பல முறை யோசித்து உதவி செய்வதாக சொல்வது நல்லது. சில நேரங்களில் நாம் உதவ முடியாமல் போனால் அவர்கள் மனம் நம்மால் வருத்தப்பட நேரிடும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பரிசுச் சீட்டு முறையை அறிமுகப்படுத்திய நாடு எது ? 2.பீகார் மாநிலத்தில் உள்ள கோடைவாசஸ்தலம் ? 3.இந்தியாவின் எலக்ட்ரானிக் சிட்டி என்று வர்ணிக்கப்படும் நகரம் எது ? 4.ஒரு நாட்டின் பசுமைத்தங்கம் என்று வர்ணிக்கப்படுவது எது ? 5.சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் யார் ? 6.போயர் போர் எந்த நாட்டில் நடந்தது ? 7.அதிகமாக காப்பி அருந்தும் மக்கள் எந்த நாட்டினர் ? 8.ஆசியாவிலே மிகப்பெரிய சந்தை எங்கே உள்ளது ? 9.POLICE என்ற சொல்லின் விரிவாக்கம் என்ன ? 10.சீன தேசத்தின் பழைய பெயர் என்ன ? பதில்கள்: 1.இங்கிலாந்து,2.ராஞ்சி,3.பெங்களூர், 4.பசுமைக்காடுகள், 5.டன்லப், 6.தென் ஆப்பிரிக்கா, 7.பிரான்ஸ்,8.இந்தியாவிலுள்ள சோன்பூர்,9.Prtoection Of Life In Civil Establishment, 10.காதே.
இன்று செப்டம்பர் 15பெயர் : கா.ந.அண்ணாதுரை, பிறந்த தேதி : செப்டம்பர் 15, 1909 தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர். மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர்.குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன்,அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். ”ஒன்றே குலம், ஒருவனே தேவன்”,"கடவுள் ஒன்று, மனிதநேயமும் ஒன்று தான்"என்ற உயர்ந்த தத்துவங்களை கொண்டவர்.கடமை கண்ணியம் கட்டுபாடு என்ற கொள்கை பிடிப்புள்ளவர்.