Archive for செப்ரெம்பர் 14, 2010
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் துல்லியமான வெப்கேமிரா
ஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகில் மட்டும் அல்லாமல் வெப்கேமிரா
உலகிலும் இனி மைக்ரோசாப்ட் பெயர் நிலைத்து இருப்பதற்கான
அடுத்த உற்பத்தி பொருள் தயார். மைக்ரோசாப்ட்-ன் ஹை டெபினிசன்
(HD) கூடிய துல்லியமான புதிய வெப் கேமிராவைப் பற்றித்தான்
இந்தப்பதிவு.
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் எல்லா மென்பொருள் மற்றும்
வன்பொருள்கள் அனைத்தும் பயனாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்
வண்ணமும், எளிதாக பயன்படுத்தும்படியும் இருக்கும் இதுதான்
அதன் சிறப்பு. அந்த வகையில் அடுத்ததாக 1080 பிக்சல் கொண்ட
ஹை டெபினிசன் சென்சாருடன் கூடிய நவீன வெப்கேமிராவை
அறிமுகப்படுத இருக்கிறது. வெப்கேமிரா 360 டிகிரியிலும் சுழலும்
வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வெப்கேமிராவின்
சிறப்பம்சமாக Auto Focus, True color மற்றும் Clear Frame ஆகிய
வசதிகள் உள்ளது. இந்த அத்தனை வசதிகளையும் ஒரே
வெப்கேமிராவில் கொடுப்பது இதுவே முதல் முறை. விண்டோஸ்
லைவ் மெசேஞ்சர் 2011 பீட்டா வெர்சனில் வீடியோ காலிங் 16:9
என்ற பார்மட்-ல் பயன்படுத்த முடியும். இந்த வெப்கேமிராவில் விலை
$99.95 அமெரிக்க டாலர். இந்த மாதத்தின் இறுதியில் விற்பனைக்கு
வரும் என்று தெரிகிறது.
வின்மணி சிந்தனை வயதை வைத்து மனிதனின் பெருமையை கூறக்கூடாது. செய்த செயலை வைத்தே மனிதனின் பெருமையை கூற வேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார் ? 2.15 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை நெருங்கி வரும் கிரகம் எது ? 3.மிக்கிமவுஸ் கார்டூன் படத்தை தயாரித்தவர் யார் ? 4.உலக அறிவொளி இயக்கத் தினம் என்று கொண்டாடப்படுகிறது? 5.சர்வதேசக் காலண்டர் முறைக்கு என்ன பெயர் ? 6.தண்ணீரில் மிதக்கும் கல்லின் பெயர் என்ன ? 7.நேபாள நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் என்ன ? 8.ரோம் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது ? 9.இந்திய தேசிய அறிவியல் பதிவுமையம் எங்குள்ளது ? 10.இங்குலிகம் என்பது என்ன தெரியுமா ? பதில்கள்: 1.தொல்காப்பியர்,2.செவ்வாய்,3.வால்ட் டிஸ்னி, 4.செப்டம்பர் 8, 5. கிரிகோரியன் காலண்டர், 6.புமிஸ், 7.பஞ்சாயத்து,8.டைபர்,9.புதுடெல்லி,10.தாதுப்பொருள்.
இன்று செப்டம்பர் 14பெயர் : நாஸ், பிறந்த தேதி : செப்டம்பர் 14, 1973 புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர். 1994இல் இவரின் முதலாம் ஆல்பம் இல்மாட்டிக் (Illmatic) வெளிவந்தது. இன்று வரை பல ராப் இசை நிபுணர்களும் எழுத்தாளர்களும் இந்த ஆல்பம் மிகவும் உயர்ந்த ஆல்பம்களில் ஒன்றாகும் என்று கூறியுள்ளனர். 1996இல் இவரின் இரண்டாம் ஆல்பம் இட் வாஸ் ரிட்டென் வெளிவந்து இவர் புகழுக்கு வந்தார்.