Archive for செப்ரெம்பர் 17, 2010
240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்
இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளின் அஞ்சல்
குறியீட்டு எண்ணை வைத்து எந்த நாடு என்பதையும் தெருவின்
பெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்த சிறப்புப் பதிவு.
அஞ்சல் குறியீட்டு எண் வைத்து நாட்டை கண்டுபிடிக்கலாம் ஒரு
நாட்டு அஞ்சக் குறியீட்டு எண் மட்டும் அல்லாமல் 240 நாடுகளின்
அஞ்சல் குறியீட்டு எண் வைத்து எந்த ஊர் என்று எளிதாக
கண்டுபிடிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
http://www.addressdoctor.com/lookup/default.aspx?lang=en

படம் 2
இந்த முகவரியைச் சொடுக்கி இந்தத்தளத்திற்கு சென்று எந்த நாடு
என்பது தெரிந்திருந்தால் நாட்டை தேர்ந்தெடுக்கவும் தெரியாவிட்டால்
நாடு என்பதில் Worldwide எனபதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அடுத்து Postal code என்பதில் பின்கோட் ( அஞ்சல் குறியீட்டு எண்)
கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தவும். உடனடியாக
சில நொடிகளில் நமக்கு எந்த ஊர் என்று காட்டுகிறது. வரும்
முடிவின் வலது பக்கம் இருக்கும் Select என்பதை சொடுக்கி
மாவட்டம், தாலுகா, தெரு வாரியாக பார்க்கலாம். கண்டிப்பாக இந்தத்
தகவல் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக நாம்
இந்தியாவில் இருக்கும் நம் கிராமத்தின் பின்கோடு முகவரி கொடுத்து
தேடினோம் முடிவு மிகச்சரியாக இருந்தது படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது.
வின்மணி சிந்தனை நாம் செய்யும் வேலைக்கு பணம் நிர்ணயம் செய்யும் உரிமை நமக்கு உண்டு. எப்போது வேண்டுமானாலும் அது கூடலாம் குறையலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவின் இரும்பு மனிதர் ? 2.ஆசிய ஜோதி என்று அழைக்கப்பட்டவர் யார் ? 3.உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படுவது எது ? 4.முதன் முதலில் வங்கி எங்கே ஆரம்பிக்கப்பட்டது ? 5.மகாத்மா காந்தி பிறந்த ஊர் எது ? 6.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ எது ? 7.இந்தியாவின் மான்செஸ்டர் எது ? 8.தமிழ்நாட்டின் மான்செஸ்டர் எது ? 9.அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் ? 10.சீனாவின் தலைநகரம் எது ? பதில்கள்: 1.சர்தார் வல்லபாய் படேல்,2.ஜவஹர்லால் நேரு, 3.கியூபா, 4.ஜெனீவா,5.போர்பந்தர், 6.குறிஞ்சி, 7.மும்பை,8.கோயம்புத்தூர், 9.காக்ஸ்டன்,10.பீகிங்.
இன்று செப்டம்பர் 17பெயர் : ஈ. வெ. ராமசாமி, பிறந்த தேதி : செப்டம்பர் 17, 1879 பெரியார் எனப் பரவலாக அறியப்படும் இவர் சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி சமய வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்