240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்
செப்ரெம்பர் 17, 2010 at 6:39 பிப 10 பின்னூட்டங்கள்
இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளின் அஞ்சல்
குறியீட்டு எண்ணை வைத்து எந்த நாடு என்பதையும் தெருவின்
பெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்த சிறப்புப் பதிவு.
அஞ்சல் குறியீட்டு எண் வைத்து நாட்டை கண்டுபிடிக்கலாம் ஒரு
நாட்டு அஞ்சக் குறியீட்டு எண் மட்டும் அல்லாமல் 240 நாடுகளின்
அஞ்சல் குறியீட்டு எண் வைத்து எந்த ஊர் என்று எளிதாக
கண்டுபிடிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
http://www.addressdoctor.com/lookup/default.aspx?lang=en

படம் 2
இந்த முகவரியைச் சொடுக்கி இந்தத்தளத்திற்கு சென்று எந்த நாடு
என்பது தெரிந்திருந்தால் நாட்டை தேர்ந்தெடுக்கவும் தெரியாவிட்டால்
நாடு என்பதில் Worldwide எனபதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அடுத்து Postal code என்பதில் பின்கோட் ( அஞ்சல் குறியீட்டு எண்)
கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தவும். உடனடியாக
சில நொடிகளில் நமக்கு எந்த ஊர் என்று காட்டுகிறது. வரும்
முடிவின் வலது பக்கம் இருக்கும் Select என்பதை சொடுக்கி
மாவட்டம், தாலுகா, தெரு வாரியாக பார்க்கலாம். கண்டிப்பாக இந்தத்
தகவல் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக நாம்
இந்தியாவில் இருக்கும் நம் கிராமத்தின் பின்கோடு முகவரி கொடுத்து
தேடினோம் முடிவு மிகச்சரியாக இருந்தது படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது.
வின்மணி சிந்தனை நாம் செய்யும் வேலைக்கு பணம் நிர்ணயம் செய்யும் உரிமை நமக்கு உண்டு. எப்போது வேண்டுமானாலும் அது கூடலாம் குறையலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவின் இரும்பு மனிதர் ? 2.ஆசிய ஜோதி என்று அழைக்கப்பட்டவர் யார் ? 3.உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படுவது எது ? 4.முதன் முதலில் வங்கி எங்கே ஆரம்பிக்கப்பட்டது ? 5.மகாத்மா காந்தி பிறந்த ஊர் எது ? 6.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ எது ? 7.இந்தியாவின் மான்செஸ்டர் எது ? 8.தமிழ்நாட்டின் மான்செஸ்டர் எது ? 9.அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் ? 10.சீனாவின் தலைநகரம் எது ? பதில்கள்: 1.சர்தார் வல்லபாய் படேல்,2.ஜவஹர்லால் நேரு, 3.கியூபா, 4.ஜெனீவா,5.போர்பந்தர், 6.குறிஞ்சி, 7.மும்பை,8.கோயம்புத்தூர், 9.காக்ஸ்டன்,10.பீகிங்.
இன்று செப்டம்பர் 17பெயர் : ஈ. வெ. ராமசாமி, பிறந்த தேதி : செப்டம்பர் 17, 1879 பெரியார் எனப் பரவலாக அறியப்படும் இவர் சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி சமய வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: 240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்.
1.
rajan | 6:21 முப இல் செப்ரெம்பர் 18, 2010
உலகில் மொத்தம் 195 நாடுகள் மட்டுமே உள்ளது என்று கேள்விபட்டேன்
சரியான தகவல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்
2.
winmani | 7:50 முப இல் செப்ரெம்பர் 18, 2010
@ rajan
There are 243 countries in the world at present…
http://en.wikipedia.org/wiki/List_of_countries
நன்றி
3.
shareef | 7:37 முப இல் செப்ரெம்பர் 18, 2010
VERY USEFUL ANNA
4.
winmani | 7:51 முப இல் செப்ரெம்பர் 18, 2010
@ shareef
மிக்க நன்றி
5.
abulbazar | 4:33 பிப இல் செப்ரெம்பர் 18, 2010
பயனுள்ள பதிவு.தெரியாத ஊர்களை பின் கோடு கொண்டு கண்டெறிந்தேன்.உங்கள் வலைப்பூவின் மாதிரி படத்தில் குலசேகர பட்டினம் என்ற ஊரை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்களே
அந்த ஊருக்கு ஏதும் விசேச முக்கியத்துவம் இருக்கிறதா. கேட்பதற்குக் காரணம் : நானும் அந்த மண்ணின் மைந்தனே.
பயனுள்ள பதிவிற்கு வாழ்த்துக்கள்.
6.
winmani | 6:08 பிப இல் செப்ரெம்பர் 18, 2010
@ abulbazar
நண்பருக்கு ,
இந்தியாவின் மிகப்பெரிய பிராஜெக்ட் ஆன அனல்மின்நிலையம் அமைய தேர்ந்த்தெடுத்து
வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊர். நாம் பிறந்த ஊர்.
மிக்க நன்றி
7.
sknatarajan | 6:02 பிப இல் செப்ரெம்பர் 18, 2010
240 நாடுகள் இருக்க வாய்ப்பே இல்லை
193 நாடுகள் இருப்பதாக தமிழக அரசின் பாட புத்தகங்களில் உள்ளதே
எது சரி ?
முடிந்தால் உலகின் அனைத்து நாடுகளின் பெயர்களை தர முடியுமா
8.
winmani | 6:23 பிப இல் செப்ரெம்பர் 18, 2010
@ sknatarajan
http://www.addressdoctor.com/en/countries_data/countries5.asp
நன்றி
9.
Thanigasalam | 1:22 பிப இல் செப்ரெம்பர் 20, 2010
ஏங்க வின்மணி! பின்கோடை வைத்து ஊரைக் கண்டுபிடிப்பதுபோல் இதே இணையதளத்தில் ஊரின் பின்கோடை அறிந்துகொள்ள வழி உள்ளதா?
10.
winmani | 3:46 பிப இல் செப்ரெம்பர் 20, 2010
@ Thanigasalam
நண்பருக்கு,
வழி இருக்கிறது , கண்டிப்பாக விரைவில் ஒரு பதிவு கொடுக்கிறோம்.
நன்றி