புதுமையாக எந்த நாட்டு நேரத்தையும் ஒரே நொடியில் பார்க்கலாம்.

செப்ரெம்பர் 15, 2010 at 1:07 முப 7 பின்னூட்டங்கள்

உலகநாடுகளின் நேரத்தை நாம் எந்த நாட்டில் இருந்தும் ஒரே நொடியில்
பார்க்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

உலகநாடுகளில் நாம் பார்க்க விரும்பும் நாட்டின் நேரத்தையும் நாம்
இருக்கும் நாட்டின் நேரத்தையும் உடனுக்குடன் எளிதாக தெரிந்து
கொள்ளலாம். உலக நாடுகளின் நேரத்தை கணக்கிட பல இணைய
தளங்கள் இருந்தாலும் அத்தனையும் விட எளிதாகவும்
புதுமையாகவும் நமக்கு உலகநாடுகளின் நேரத்தை பார்க்க ஒரு
தளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://www.timezonecheck.com

இந்ததளத்திற்கு சென்றால் மேப் வடிவமைப்பில் நமக்கு அனைத்து
நாடுகளும் அதனுடன் நேரமும் தெரிகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும்
தகுந்தாற் போல் ஒவ்வொரு நாட்டில் நேரமும் துல்லியமாக மாறிக்
கொண்டுவருகிறது.நாம் எந்த நாட்டில் இருந்து பார்க்கிறோமோ
அந்த நாட்டின் நேரம் My Time என்ற பெயரில் முதலில் தெரிகிறது.
இதைத்தவிர முக்கியமான நகரத்தின் பெயரை இணையதளத்தின் கீழ்
இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம்.இந்தத்தளத்தின் மூலம்
உலகில் இருக்கும் எந்த நாட்டின் நேரத்தையும் துல்லியமாக எளிதாக
கண்டுபிடிக்கலாம்.

வின்மணி சிந்தனை
ஒரு முறைக்கு பல முறை யோசித்து உதவி செய்வதாக
சொல்வது நல்லது. சில நேரங்களில் நாம் உதவ முடியாமல்
போனால் அவர்கள் மனம் நம்மால் வருத்தப்பட நேரிடும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பரிசுச் சீட்டு முறையை அறிமுகப்படுத்திய நாடு எது ? 
2.பீகார் மாநிலத்தில் உள்ள கோடைவாசஸ்தலம் ? 
3.இந்தியாவின் எலக்ட்ரானிக் சிட்டி என்று வர்ணிக்கப்படும்
 நகரம் எது ? 
4.ஒரு நாட்டின் பசுமைத்தங்கம் என்று வர்ணிக்கப்படுவது எது ?
5.சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் யார் ? 
6.போயர் போர் எந்த நாட்டில் நடந்தது ? 
7.அதிகமாக காப்பி அருந்தும் மக்கள் எந்த நாட்டினர் ?
8.ஆசியாவிலே மிகப்பெரிய சந்தை எங்கே உள்ளது ? 
9.POLICE என்ற சொல்லின் விரிவாக்கம் என்ன ? 
10.சீன தேசத்தின் பழைய பெயர் என்ன ? 
பதில்கள்:
1.இங்கிலாந்து,2.ராஞ்சி,3.பெங்களூர், 4.பசுமைக்காடுகள், 
5.டன்லப், 6.தென் ஆப்பிரிக்கா, 7.பிரான்ஸ்,8.இந்தியாவிலுள்ள
சோன்பூர்,9.Prtoection Of Life In Civil Establishment,
10.காதே.
இன்று செப்டம்பர் 15 
பெயர் : கா.ந.அண்ணாதுரை,
பிறந்த தேதி : செப்டம்பர் 15, 1909
தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர்.
மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில்
பிறந்தவர்.குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி
அமைத்த முதல் திராவிடக்கட்சித்தலைவர் என்றப்
பெருமையுடன்,அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி
அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
”ஒன்றே குலம், ஒருவனே தேவன்”,"கடவுள் ஒன்று,
மனிதநேயமும் ஒன்று தான்"என்ற உயர்ந்த தத்துவங்களை
கொண்டவர்.கடமை கண்ணியம் கட்டுபாடு என்ற
கொள்கை பிடிப்புள்ளவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் துல்லியமான வெப்கேமிரா ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்.

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. வித்யாசாகர்  |  5:47 முப இல் செப்ரெம்பர் 16, 2010

    மிக்க நன்றி விண்மணி! பயனுறும் தகவல்களை தருகிறீர்கள்.. மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!!

    வித்யாசாகர்

    மறுமொழி
  • 2. Thanigasalam  |  11:29 முப இல் செப்ரெம்பர் 16, 2010

    நல்ல பதிவுங்க வின்மணி. இதைச் அலைபேசியில் தரவிரக்கம் செய்ய ஏதும் வசதிகள் உண்டானால் இன்னும் எளிதாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் பன்னாட்டு நேரத்தை அறிந்து கொள்ளலாம். நாள்தோறும் நல்லநல்ல பதிவுகளையும் சிந்தனைகளையும் தருகின்றீர்கள். வாழ்க! வளர்க.

    மறுமொழி
    • 3. winmani  |  3:38 பிப இல் செப்ரெம்பர் 16, 2010

      @ Thanigasalam
      விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 4. shareef  |  1:41 பிப இல் செப்ரெம்பர் 16, 2010

    aha!! ethir partha pathivu
    thanks anna

    மறுமொழி
    • 5. winmani  |  4:00 பிப இல் செப்ரெம்பர் 16, 2010

      @ shareef
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 6. ஜோதிஜி  |  3:34 பிப இல் செப்ரெம்பர் 16, 2010

    தொடர்ந்து மின் அஞ்சல் வாயிலாக படித்துக் கொண்டுருக்கின்றேன். மிகுந்த அக்கறையுடன் பொறுப்பாய் படைத்துக் கொண்டுருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகள்.

    இந்த இடுகை எனக்கு பொக்கிஷம். இதை டெக்ஸ்டாப்பில் நிரந்தரமாய் சேர்த்து வைத்துக் கொண்டு இயல்பாகவே இணைய இணைப்போடு இதுவும் செயல்படும் அளவிற்கு உரிய நவீன வசதிகள் இருந்தால் தெரியப்படுத்துக்ஙள நண்பா.

    தேவியர் இல்லம்.

    மறுமொழி
    • 7. winmani  |  4:02 பிப இல் செப்ரெம்பர் 16, 2010

      @ ஜோதிஜி
      (Ctrl + D ) பொத்தானை அழுத்தி புக்மார்க் செய்து விடுங்கள், நினைத்த போதெல்லாம்
      பார்க்கலாம்.
      மிக்க நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...