கிராமம் முதல் நகரம் வரை இரத்த தானம் வேண்டுவோருக்கு உதவும் பயனுள்ள தளம்.

ஒக்ரோபர் 15, 2011 at 12:17 முப 7 பின்னூட்டங்கள்

இரத்த தானம் மூலம் 40 ஆயிரம் பேரின் குடும்பத்துக்கு ஒளியை அளித்த இத்தளத்தை நம் தமிழ் உறவுகளுக்கு அறிமுகப்படுத்துவதில் வின்மணி பெருமிதம் கொள்கிறது.இந்தியாவில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் சில நேரங்களில் ஆபத்து காலத்தில் இரத்தம் கொடுப்பவர்களை எப்படி தேடுவது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

”என் நண்பனைப்போல் உதவி செய்ய ஆளில்லை “  என்று சொல்லும் நமக்கு நிச்சயமாக நண்பனே வந்து உதவப்போகிறான் ஆனால் அந்த நண்பனின்  முகம் இதுவரை தெரியாமல், மொழி தெரியாமல், மதம் தெரியாமல், இனம் தெரியாமல் அன்பை மட்டுமே ஆணி வேராகக்கொண்டு இரத்த தானம் வேண்டுவொருக்கு உடனடியாக இரத்தம் கொடுக்க உதவுகிறது ஒரு தளம்.

இணையதள முகவரி : http://www.friendstosupport.org

இத்தளத்திற்கு சென்று எந்த வகையான Blood Group தேவை என்பதையும் , இந்தியாவில் எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் , எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்து Submit என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். உங்கள் மாவட்டத்தில் இரத்தம்  கொடுத்து உதவ எத்தனை நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களின் முகவரி அல்லது அலைபேசி எண்ணை உங்களுக்கு காட்டும் உடனடியாக நாம் அவர்களை தொடர்பு கொண்டு இரத்தம் கொடுப்பது பற்றி பேசலாம். 5 வருடத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் பங்கு கொண்டு இரத்த தானம் செய்வது என்பது ஒரு இமாலய வெற்றி தான். இரத்த தானம் செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களின் தகவல்களை கொடுத்து இத்தளத்தில் உறுப்பினராக பதிந்து கொள்ளலாம். எங்கோ கிராமத்தில் வாழும்  ஒரு குழந்தைக்கு அரிய வகை இரத்தம் தேவைப்படும் அங்கும் இங்கும் ஓடி சென்று தேடி கிடைக்காமல் யாரிடம் தொடர்பு கொண்டால் கிடைக்கும் என்று தெரியாமல் இருக்கும் நம்மவர்களுக்கு இத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள் ஒருவரின் வாழ்வை நாம் காப்பாற்றியது போல் உணர்வு கண்டிப்பாக இருக்கும். இப்பதிவை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் பொறுப்பை உங்களிடம் ஓப்படைக்கிறோம்.

நம் எண்ணங்களுக்கு மல்டிமீடியா உதவியுடன் அனிமேசனாக உயிர் கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.

பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் யாகூவின் பயனுள்ள பாதுகாப்பு தேடல் உதவி.

வங்கி கணக்கு முதல் அனைத்துவிதமான கணக்கிற்கும் நமக்கு உதவி செய்ய ஆன்லைன் கணக்கு பிள்ளை.

தேடுபொறியில் தேடும் வார்த்தைக்கு உதவிய செய்ய 7 பிரம்மாண்டங்கள் இணைந்த ஒரே தளம்.

 
வின்மணி சிந்தனை
எதையும் எதிர்பார்க்காமல் நமக்கு உதவும் நண்பன் 
வாழ்க்கையில் நமக்கு கிடைப்பது நம் அன்பினால் தான்.
 
இன்று அக்டோபர் 15

பெயர் : அப்துல் கலாம் ,
பிறந்ததேதி : அக்டோபர் 15, 1931
ஒரு சிறந்த விஞ்ஞானியும்  இந்தியாவின்
முன்னாள் குடியரசுத் தலைவரும், 
பொறியியலாளரும் ஆவார்.இந்தியவிண்வெளி
ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி 
மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில்
முக்கிய பங்கு வகித்துள்ளார். இளைஞர்களுக்கு
தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு இந்தியர். உங்களால்
நம் தேசத்துக்கு பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

Video , Audio கோப்புகளைத் தேட தறவிரக்க உதவும் அசத்தலான புதுமையான தளம். நண்பர்களை திட்டமிட வைத்து ஒன்று சேர்க்கும் பயனுள்ள இணையதளம்.

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. stalinwesley  |  6:36 முப இல் ஒக்ரோபர் 24, 2011

    நல்ல தகவல்ன்னே …

    மறுமொழி
    • 2. winmani  |  9:23 முப இல் ஒக்ரோபர் 24, 2011

      @ stalinwesley
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. thangampalani  |  7:52 முப இல் ஒக்ரோபர் 24, 2011

    பகிர்வுக்கு மிக்க நன்றி!!

    மறுமொழி
    • 4. winmani  |  9:47 முப இல் ஒக்ரோபர் 24, 2011

      @ thangampalani
      மிக்க நன்றி.

      மறுமொழி
  • 5. Life Direction Network  |  6:10 பிப இல் ஒக்ரோபர் 26, 2011

    மொழி தெரியாமல், மதம் தெரியாமல், இனம் தெரியாமல் அன்பை மட்டுமே ஆணி வேராகக்கொண்டு இரத்த தானம் வேண்டுவொருக்கு உடனடியாக இரத்தம் கொடுக்க உதவுகிறது ஒரு தளம். உதவிக்கரம் நீட்டும் அருமையான தளம் பகிர்வுக்கு நன்றி.

    மறுமொழி
    • 6. winmani  |  6:39 பிப இல் ஒக்ரோபர் 26, 2011

      @ Life Direction Network
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 7. Surya  |  2:29 பிப இல் நவம்பர் 28, 2011

    its another one site like this

    http://www.shareblood.in

    it’s a very useful and user friendly to getting the donors information

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...