Archive for ஒக்ரோபர் 10, 2011
கூகிளின் எல்லாப் பொருட்களிலும் ஒரே நேரத்தில் தேட கூகிள் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய தளம்.
நாளுக்கு நாள் தன் சேவையில் ஏதாவது ஒன்றை கூட்டிக்கொண்டு வரும் கூகிளில் தனிப்பட்ட முறையில் சென்று தேடுவதற்கு நமக்கு பெரும்பாலும் நேரம் இல்லாமல் இருக்கிறது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக கூகிள் புதிதாக ஒரு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கூகிள் தேடலிலே பல சிறப்பம்சம் இருக்கிறது, நாட்களை வைத்து தேடலாம். கடந்த மாதம் , கடந்த வருட்ம் , அல்லது குறிப்பிட்ட வருடத்தை வைத்து தேடும் வசதியும் வந்துவிட்ட நிலையில் கூகிள் மேப்ஸ், கூகிள் லேப்ஸ், கூகிள் காலண்டர், பிளாக், யூடியுப், பிரபலமான தளம் என அனைத்திலும் ஒரே நேரத்தில் நாம் தேடும் வார்த்தைகளுக்கான முடிவை காட்டி அசத்த கூகிள் புதிதாக இந்த தளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது…