நம் முகத்துடன் அனிமேசனில் வாழ்த்து சொல்ல புதுமையான இணையதளம்.

மே 27, 2011 at 2:13 முப 8 பின்னூட்டங்கள்

நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனி வாழ்த்து வெறும் செய்தியாகவோ அல்லது படமாகவோ இல்லாமல் அனிமேசனில் அதுவும் நம் முகத்துடன் அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வாழ்த்து சொல்வது சாதாரணமாக பிறந்த நாளில் தொடங்கி திருமணம் , வெற்றி பெற்ற நாள் , பாரட்டுவிழா , பண்டிகைகள் , விழாக்காலங்கள் என அனைத்திலுமே இருந்தாலும் வாழ்த்துச்செய்தியை அனிமேசனுடன் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது தனிச்சிறப்பு தான் அந்த வகையில் நமக்கு அனிமேசன் மூல்ம் வாழ்த்துச்சொல்ல ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.got-free-ecards.com/

இத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகையான வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டுமோ அதற்கான வாழ்த்து அட்டையின் படத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Personalize Card என்பதை சொடுக்கி கணினியில் இருக்கும் நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து படத்தில் Zoom in அல்லது Zoom Out என்ற முறையில் Size என்பதை சொடுக்கி பொருத்தமாக நம் முகம் மட்டும் இருக்கும் தெரியும்படி மாற்றி அமைத்து  எல்லாம் சரியாகதெர்ந்தெடுத்த பின் Done என்பதை சொடுக்கி வெளியே வரலாம். இனி Play Card என்பதை சொடுக்கி நாம் அனிமேசனில் நாம் அனுப்ப இருக்கும் வாழ்த்தை பார்க்கலாம். அடுத்து யாருக்கெல்லாம் அனிமேசனில் வாழ்த்து அனுப்ப வேண்டுமோ அவர்களின்  பெயர் மற்றும் இமெயில் முகவரி , மற்றும் வாழ்த்துச்செய்தியை கொடுத்து Send now என்ற பொத்தானை சொடுக்கி அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம். இனி வாழ்த்துச்செய்தியை வெறுமையாக அனுப்பாமல் அனிமேசனுடன் அனுப்ப விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இ-கார்டு வாழ்த்து எந்த கணக்கும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்கலாம்

புதுவருட வாழ்த்துக்களை புதுமையாக அனுப்பலாம்

யூடியுப் வீடியோ வேகத்தை அதிகப்படுத்த புதிய முறை

உங்கள் சாதனையை உலக சாதனையாக கின்னஸில் பதிவு செய்ய

 
வின்மணி சிந்தனை
விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் பெட்ரோல்,டீசல்
விலை உயர்வு தான் இதை கட்டுக்குள் கொண்டுவந்தால்
அனைத்துப்பொருட்களின் விலையும் சரியாக இருக்கும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.1932 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் முதலாவதாக வந்தவர் யார்?
2.மில்டிரட் டிட்ரிக்ஸன் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
3.மில்டிரட் டிட்ரிக்ஸன் ஈட்டி எறிந்த தூரம் எவ்வளவு ?
4.1936 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் முதலாவதாக வந்தவர் யார்?
5.டில்லி பிலிஸ்சர் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
6.டில்லி பிலிஸ்சர் ஈட்டி எறிந்த தூரம் எவ்வளவு ?
7.1948-ல் ஈட்டி எறிதல் போட்டியில் முதலாவதாக வந்தவர் யார்?
8.ஹெர்மினி ஹெர்பா பெளமா எந்த நாட்டை சேர்ந்தவர்?
9. ஹெர்மினி ஹெர்பா பெளமா ஈட்டி எறிந்த தூரம் எவ்வளவு?
10.1952-ல் ஈட்டி எறிதல் போட்டியில் முதலாவதாக வந்தவர் யார்?
பதில்கள்:
1.மில்டிரட் டிட்ரிக்ஸன்,2.அமெரிக்கா,3.43.68 மீட்டர்,4.டில்லி
பிலிஸ்சர்,5.ஜெர்மனி,6.45.18 மீட்டர்,7.ஹெர்மினி ஹெர்பா
பெளமா,8.ஆஸ்திரியா,9.45.57 மீட்டர்,10.டானாஜோப்கோலா.
 
இன்று மே 27

பெயர் : ஜவஹர்லால் நேரு , 
மறைந்த தேதி : மே 27, 1964
நீண்டகாலம் தொடர்ந்து இந்தியாவின்
பிரதம மந்திரியாக சேவை செய்தவர்.
இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான
நேரு காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு
பின்னர் 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில்
காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின்
முதல் பிரதமராக  பதவி ஏற்றார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் வகைகள், படங்களுடன் பண்டம் மற்றும் பலகாரம் செய்முறை. மில்லின் கணக்கில் வீடியோக்களை அள்ளி கொடுக்கும் விக்கியின் புதிய பரிமாணம் Qwiki .

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ganeshlingam  |  7:40 முப இல் மே 27, 2011

    thanks for you
    god bless you for your selfless service

    மறுமொழி
  • 2. sirajmohamed  |  10:52 முப இல் மே 27, 2011

    good very good

    மறுமொழி
  • 4. ganesh  |  5:23 பிப இல் மே 30, 2011

    nanbanukku nandri

    மறுமொழி
  • 6. Tren  |  3:06 முப இல் ஜூன் 6, 2011

    I like winmani.wordpress.com , bookmarked for future reference .

    மறுமொழி
  • 7. Life Direction Network  |  9:43 முப இல் ஜூன் 10, 2011

    மனிதர்கள் மிகவும் விரும்புவது புதுமையை, புதிதாக எதையாவது தெரிந்து கொள்ள வேண்டுமே என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. என்னதான் புதிதுபுதிதாக இணையம் வளர்ந்து கொண்டே போனாலும், ஒரு குறிப்பிட்ட வட்டத்தை தாண்டிச்செல்ல பலருக்கும் தெரிவதில்லை, அவர்களுக்கு விண்மணியின் தினம் தினம் புதிய தகவல்கள் மிக மிக பயனுள்ள வெவ்வேறு வகையான புதுமையான தகவல்களுடன் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய வித்தியாசமான பதிவுகளை கொண்டுவந்து கொடுக்கின்றது, அதனால்தான் விண்மணியை அனைவரும் விரும்புகிறார்கள், மேலும் தங்கள் சேவை தொடரட்டும், தங்கள் புகழ் எங்கும் பரவட்டும்.

    மறுமொழி
    • 8. winmani  |  9:56 முப இல் ஜூன் 10, 2011

      @ Life Direction Network
      மிக்க நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2011
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...