மில்லின் கணக்கில் வீடியோக்களை அள்ளி கொடுக்கும் விக்கியின் புதிய பரிமாணம் Qwiki .
மே 28, 2011 at 12:45 முப 2 பின்னூட்டங்கள்
சாதாரண புல் முதல் அதிபர் ஓபாமா வரை அனைத்து தகவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் விக்கியின் புதிய பரிமாணம் தான் Qwiki. அரிய பல தகவல்களையும் வீடியோக்களையும் கொண்டு நம் கண்களுக்கும் அறிவுக்கும் விருந்தளிக்கும் வகையில் Qwiki உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
என்ன தகவல் வேண்டும் அதைப்பற்றிய தகவல்களை உடனுக்கூடன் கொடுப்பதற்காக உள்ள விக்கிப்பீடியாவில் வீடியோக்களை நாம் காண முடியாது ஆனாலும் தகவல்களை அள்ளி கொடுக்கும். இந்தக் குறையைப் போக்கி கண்களுக்கு இனிய வீடியோவை கொடுக்க புதிய பரிமாணத்தில் வந்திருக்கும் தளம் தான் Qwiki.
இணையதள முகவரி : http://www.qwiki.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Enter Topic என்ற கட்டத்திற்குள் எதைப்பற்றிய தகவல் வேண்டுமோ அதை தட்டச்சு செய்து Enter பொத்தானை சொடுக்க வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்துள்ள தலைப்பிற்கு தகுந்தபடி உள்ள பல வீடியோக்களில் ஒவ்வொன்றாக சொடுக்கி பார்க்கலாம். இந்த Qwiki -விக்கியில் மில்லியன் கணக்கில் பல வீடியோக்கள் உள்ளது. இனி நாம் தேடும் பல தகவல்களை வீடியோவுடன் பார்க்கலாம். விக்கி பயன்படுத்தும் நபர்களுக்கும் அரிய பல தகவல்களை வீடியோவுடன் பார்க்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
எக்சசைஸ் செய்து உடலை வலிமையாக்கலாம் வீடியோவுடன் சொல்லும் தளம்.
அனைத்துவிதமான Professional Diagram -ம் உடனடியாக உருவாக்க வீடியோவுடன்
எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.
Suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) டாப் 2 வீடியோ எடிட்டிங்
வின்மணி சிந்தனை நியாயம், தர்மம் பற்றி பேசுபவர்கள் தான் அதிகமாக இறைவனால் சோதிக்கப்படுகிறார்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.1948-ல் நீளம் தாண்டுதல் போட்டியில் முதலாவதாக வந்தவர் யார் ? 2.ஒல்கா கியார்மாடி எந்த நாட்டை சேர்ந்தவர் ? 3.ஒல்கா கியார்மாடி தாண்டிய நீளம் எவ்வளவு ? 4.1952-ல் நீளம் தாண்டுதல் போட்டியில் முதலாவதாக வந்தவர் யார் ? 5.யுவேட்டி வில்லியம்ஸ் எந்த நாட்டை சேர்ந்தவர் ? 6.யுவேட்டி வில்லியம்ஸ் தாண்டிய நீளம் எவ்வளவு ? 7.1956 -ல் நீளம் தாண்டுதல் போட்டியில் முதலாவதாக வந்தவர் யார் ? 8.என்ஜினியேடா கிர்ஜேஸின்ஸ்கா எந்த நாட்டை சேர்ந்தவர் ? 9.என்ஜினியேடா கிர்ஜேஸின்ஸ்கா தாண்டிய நீளம் எவ்வளவு ? 10.1960 -ல் நீளம் தாண்டுதல் போட்டியில் முதலாவதாக வந்தவர் யார் ? பதில்கள்: 1.ஒல்கா கியார்மாடி,2.ஹங்கேரி,3.5.69 மீட்டர்.4.யுவேட்டி வில்லியம்ஸ்,5.நியூசிலாந்து,6.6.24 மீட்டர்,7.என்ஜினியேடா கிர்ஜேஸின்ஸ்கா,8.போலந்து,9.6.35 மீட்டர்,10.லையரா கிரெப்கினா
இன்று மே 28
பெயர் : என்.டி.ராமராவ் , பிறந்த தேதி : மே 28, 1923\ பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி.ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மூன்று தடவை பொறுப்பு வகித்தவர்.தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை பெற்றார். சிறந்த இறைபக்தி உள்ளவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: மில்லின் கணக்கில் வீடியோக்களை அள்ளி கொடுக்கும் விக்கியின் புதிய பரிமாணம.
1.
K. Jayadev DAs | 1:26 பிப இல் மே 28, 2011
Good Videos, but they are very short, Is there longer videos available in this site?
2.
winmani | 2:35 பிப இல் மே 28, 2011
@ K. Jayadev DAs
நம் களஞ்சியத்தில் longer videos பற்றி ஒரு பதிவு இருக்கிறது.
மிக்க நன்றி