புதுவருட வாழ்த்துக்களை புதுமையாக அனுப்பலாம்
திசெம்பர் 29, 2009 at 6:15 பிப 4 பின்னூட்டங்கள்
நம் நண்பருக்கு புதுவருட வாழ்த்துக்களை கொஞ்சம்
வித்தியாசமாக அனுப்பலாம். நம் சொந்த குரலால் வாழ்த்து
செய்தி அனுப்புவது ஒரு வகை. நாம் விரும்பும் புகைப்படத்தை
அனுப்புவது மற்றொறு வகை. இதை எல்லாம் விட சிறப்பு நாம்
அனுப்பும் வாழ்த்து செய்தியை நம் வெப்கேமிரா மூலம் பதிந்தும்
பேசியும் ஆன்லைன் மூலம் அனுப்பலாம். இந்த வீடியோ தகவலை
நம் கம்யூட்டரில் பதிந்தும் வைத்துக்கொள்ளலாம். நண்பர்களின்
இமெயில் முகவரியை கொடுத்து அனைவருக்கும் ஒரே நேரத்தில்
அனுப்பலாம்.
வாழ்த்து செய்தி மட்டுமல்ல நாம் சில நேரங்களில் வாய்ஸ் மெயில்
அனுப்புவோம் இனி அதற்கு பதிலாக வீடியோ மெயில் அனுப்பலாம்.
எந்த மென்பொருளும் தேவையில்லை அனைத்தும் ஆன்லைன்-ல்
எப்படி என்று பார்ப்போம்.

படம் 1
http://www.sendshots.com இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல்
காட்டியபடி Record மற்றும் webcam என்ற பட்டனை அழுத்தி நம்
வீடியோ மற்றும் ஆடியோவை சேமித்து Play என்ற பட்டனை அழுத்தி
சரிபார்த்துக் கொள்ளலாம். Save என்ற பட்டனை அழுத்தி நம் நண்பருக்கு
இமெயில் மூலம் அனுப்பலாம். புதுவருடத்தில் உங்கள் வாழ்த்து செய்தி
புதுமையாக இருக்கட்டும்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: புதுவருட வாழ்த்துக்களை புதுமையாக அனுப்பலாம்.
1.
IQBAL SELVAN | 12:45 பிப இல் திசெம்பர் 30, 2009
பயனுள்ள தகவல்.
நன்றி நண்பரே…
2.
Nandhu | 3:10 பிப இல் திசெம்பர் 30, 2009
Thanks
3.
sabesan | 2:35 முப இல் திசெம்பர் 31, 2009
Thanx use full……
4.
marudha | 3:29 பிப இல் ஜனவரி 1, 2010
ஆங்கில மொழி ஆற்றல் அதிகம் தெரிந்திருந்தால் தான் கணினியை
கையாள முடியும் ,என்கிற நிலையில் ,தங்களைப்போல் வாத்தியார்கள்
இருப்பதால் தான் ,என்னைப்போல் மாணவர்கள் உருவாக முடிகிறது!!
மிக்க நன்றி